லண்டனில் இளவாலை திருக்குடும்பக்கன்னியர்மட பழையமாணவிகளின் ஒன்றுகூடல்

‘இளவாலை திருக்குடும்பக்கன்னியர்மடத்தின் புகழ் மிக்க அதிபராகத் திகழ்ந்த அருட் சகோதரி லுசில்லா அவர்கள் அதிபராக இருந்த காலம் இளவாiலைக் கன்னியர்மடத்தின் வரலாற்றில் சிறப்பும்,, பொலிவும் மிக்க காலமாகும். அவரிடம் கல்வி பயலும் மாணவிகள் தற்போது பல்வேறு துறைகளில் அமெரிக்கா,, லண்டன்,, பிரான்ஸ்,, ஜேர்மனி,, நோர்வே போன்ற பல நாடுகளில் சிறந்து விளங்குவது தனக்கு பெருமகிழ்வைத் தருவதாக பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த அருட்தந்தை ரி.இ.ரி. ராஜன் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார். இன்று அம்மாணவிகளை லண்டனில் மீண்டும் சந்திப்பது அன்றைய மகிழ்வான நினைவுகளை மீட்பதற்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது’ என மேலும் சுட்டிக்காட்டினார். ‘அதிபர் அருட்சகோதரி லுசில்லா காலத்தில் கல்விபயின்ற பாணுமதி கீர்த்திசிங்கம்,, அயரீன் இன்மனுவேல்,, றீற்றா துரைசிங்கம்,, மினோ துரைராஜா,, வசந்தி திசநாயகம்,, கிறேஸ் சிங்கராயர் போன்றவர்கள் சிறப்பு விருந்தினாகளாக வருகை தந்திருந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. லண்டன்வாழ் பழைய மாணவிகள் பாடசாலையில் கலை நிகழ்ச்சிகள்,,  பெண் சாரணர் படை,, வலைப்பந்தாட்டம்,, இசை வாத்தியக்குழு போன்ற பல்வேறு பாடசாலை நிகழ்வுகளில் சிறந்தவர்களாகத் திகழ்ந்ததை பழைய மாணவியான மதி கிறிஸ்தோப்பர் தனது உரையில் நினவுகூர்ந்தார். தொடர்ந்தும் இளவாலைக் கன்னியர் மடத்தின் முன்னேற்றத்திற்;கு உதவி,, உற்சாகம் வழங்கி வரும் பழைய மாணவிகளின் பணி ‘அர்ப்பணிப்பு ஆண்டாக’ செயற்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வாண்டில் மேலும் பொலிவைத் தருவதாகக் கூறியிருந்தார். பாடசாலையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்திவரும் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் தலைவி; அலோசியா லூயிஸ் மற்றும் அங்கத்தவர்களின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது’ என மேலும் தெரிவித்திருந்தார்.

‘இளவாலைக் கன்னியர் மடத்தின் ஆசிரியர்களான திருமதி கில்டா குமார்,, திருமதி அன்னமேரி சமரக்கோண்,, திருமதி மகாதேவா,, திருமதி ராகினி ராஜகோபால்,, திருமதி சோமா நெவின்சன்,, திருமதி எட்னா குமார் போன்ற ஆசிரியர்களை லண்டனில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது பெரும் பாக்கியம். பழைய மாணவியான அயரீன் இம்மனுவேலின் மகளான ஸ்ரீமதி சமிஸ்ரா சிவகுமார் லண்டனில் ஒரு நாட்டிய ஆசிரியையாகத் திகழ்வதும்,, அவரது மாணவிகளும்;,, அவரது பிள்ளைகளும் கலைநிகழ்ச்சிகளை வழங்கித் தொடர்வது மகிழ்வான விடயம்’ என பழைய மாணவியான நவஜோதி ஜோகரட்னம் தெரிவித்தார். சிறந்த கல்விமான்களை,, சிறந்த சமயத் தொண்டர்களை,, சிறந்த கலைஞர்களை,, சிறந்த சமூக சிந்தனையாளர்களை உருவாக்கிய இளவாலை திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் சேவைகள் தொடர வேண்டுமென மேலும் வாழ்த்தி நின்றார்’

‘மகிழ்வான  இன்றைய நாளில் கனடாவில் இளவாலைக் கன்னியர் மடத்தின் ஆசிரியை காந்திமதி அடைக்கலமுத்துவின் மறைவு சஞ்சலத்துள் ஆக்கிவிட்டதையும்,, பழைய மாணவிகளுடன் அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென’ மேலும் தனதுரையில் வேண்டி நின்றார்.

ஓன்று கூடலின் நிகழ்ச்சிகளை இளவாலைக் கொன்வன்ரின்; பழைய மாணவிகளான மதி கிறிஸ்தோப்பர்,, நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.

navajothybaylon@hotmail.co.uk