லண்டனில் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட சமர்ப்பணம்

‘லண்டன் மேடைகள் சனி, ஞாயிறு தினங்களில் கலை, இலக்கியம், நினைவுதின விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், பாடசாலை விழாக்கள் என்று களை கட்டி பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றது. லண்டன் தமிழ் கராசாரத்தை பேணும் வகையில் கலைகளில் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இசைச் சூழல் உடலைத் தட்டி எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளை கிளர்த்திக் குணப்படுத்துகிறது. மனதைக் குவியச் செய்கிறது. ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது. என்றெல்லாம் இசையின் இனிமையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை எல்லாம் நாம்; அறிவோம். அந்த வகையில் செல்வி பி;ரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் அமைந்திருந்தது என சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய ராமநாதன் குருக்கள் தனது உரையில் கூறியிருந்தார்.’‘லண்டன் மேடைகள் சனி, ஞாயிறு தினங்களில் கலை, இலக்கியம், நினைவுதின விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், பாடசாலை விழாக்கள் என்று களை கட்டி பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றது. லண்டன் தமிழ் கராசாரத்தை பேணும் வகையில் கலைகளில் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இசைச் சூழல் உடலைத் தட்டி எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளை கிளர்த்திக் குணப்படுத்துகிறது. மனதைக் குவியச் செய்கிறது. ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது. என்றெல்லாம் இசையின் இனிமையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை எல்லாம் நாம்; அறிவோம். அந்த வகையில் செல்வி பி;ரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் அமைந்திருந்தது என சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய ராமநாதன் குருக்கள் தனது உரையில் கூறியிருந்தார்.’   ‘கானடா ராகத்தில் ராமநாத் சீனிவாச ஐயங்கர் இசையமைத்த கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த ‘நேர நம்’ வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்த செல்வி பிரித்தி மகேந்திரன் முத்துசுவாமி டிக்சிதர் இயற்றிய ஆதி தாளத்தில் – ஹம்சத்தவனி ராகத்தில் அமைந்த வாதாபி கணபதிம், மற்றும் எம்.என். தண்டபாணிதேசிகர் இயற்றிய அமிர்தவக்கினி ராகத்தில் – தாளம் ஆதியில் அமைந்த ‘என்னை நீ மறவாவாதே’, தியாகராஜ சுவாமிகள் கௌளை ராகம் – தாளம் ஆதியில் அமைந்த பஞ்ச ரத்தின கீர்த்தனை ‘தூ டூ கு கல’, மேலும் ‘பரோவா பாரமா’ என்ற பௌகுதாரி ராகத்தில் அமைந்த தியாகராஜ சுவாமிகள் இயற்றிய பாடல், நாகபூஷணி அம்மனுக்கு கே. மணிபல்வனின் தந்தை கனகரட்னம் இயற்றிய ‘எத்தனை காலம்’ என்ற பாடலுக்கு ஆதி தாளம் – காப்பி ராகத்தில் கே. மணிபல்லவம் இசையமைத்த பாடல் ,  பிரித்தியின் குரு மணிபல்லவம் கே. சாரங்கன் இயற்றி இசையமைத்த சிவரஞ்சனி ராகத்தில் – தாளம் ஆதி – தில்லானா போன்ற பல ராகங்களில் அமைந்த பாடல்களை பாடி கச்சேரியை இனிமை, கம்பீரம், குழைவு, சோகம், ஏக்கம் நிறைந்த பாவங்களால் அவரது இசை மாறிமாறி ஒலித்தமை பாராட்டுக்குரியது என மேலும் அவர் பாராட்டினார்.’

 ‘செல்வி பிரித்தி மகேந்திரனின் அண்ணாவான (தற்பொழுது நொட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்;துறைக் கல்வியை மேற்கொண்டுவரும்) செல்வன் மேவின் மகேந்திரன் பாடலை, அதன் நேர்த்தியை, தாள லயத்தை உள்வாங்கி பக்கதுணையாக   மிருதங்கத்தினை வாசித்து, பாடலுக்கு உயிரூட்டிய விதத்தினை பிரமத விருந்தினராக வருகை தந்த மிருதங்கமேதை காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெகுவாகப் பாராட்டியிருந்தார். செல்வன் மேவின் இசைக்கச்சேரியின்போது தனியாவர்த்தனத்தை அனுபவித்து, மிகுந்த அனுபவசாலிபோன்று வாசித்த விதத்தினையும், அவனது தங்கை பிரித்தி மிக நிதானத்தோடு அதற்குத் தாளத்தை மேற்கொண்டதையும், நல்லதொரு கச்சேரியை பார்க்கும் வாய்ப்பை தனக்கு அளித்ததோடு மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரான மகேந்திரன் – வதனி தம்பதியினரின் இருபத்தைந்தாவது திருமண ஆண்டு நிறைவையொட்டி இக்கச்சேரியை அவர்களின் பிள்ளைகள் வழங்குவதை தான் அபூர்வ செயலாகப் பார்ப்பதோடு, பெருமை சேர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.’ 

‘லண்டன் மேடைகள் சனி, ஞாயிறு தினங்களில் கலை, இலக்கியம், நினைவுதின விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், பாடசாலை விழாக்கள் என்று களை கட்டி பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றது. லண்டன் தமிழ் கராசாரத்தை பேணும் வகையில் கலைகளில் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இசைச் சூழல் உடலைத் தட்டி எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளை கிளர்த்திக் குணப்படுத்துகிறது. மனதைக் குவியச் செய்கிறது. ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது. என்றெல்லாம் இசையின் இனிமையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை எல்லாம் நாம்; அறிவோம். அந்த வகையில் செல்வி பி;ரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் அமைந்திருந்தது என சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய ராமநாதன் குருக்கள் தனது உரையில் கூறியிருந்தார்.’

சென்னை இசைக்கல்லூhயின் முதுகலைமானிப் பட்டதாரியான சங்கீத வித்துவான் கே.மணிபல்லவம் சாரங்கன் அவர்களின் இசை மாணவியான செல்வி பிரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் லண்டன் ஐயப்பன் கோயிலில் இடம்பெற்றது. செல்வன் மேவின் மகேந்திரன் மிருதங்கத்தினை வாசித்திருந்தார். அமைதி, பொறுமை, கனிவு, நிதானம், இரக்கம், அன்பு அத்தனையையும் மாணவர்களுடன் பகிர்ந்து ‘ஆனந்தலெயாஸ்’ மிருதங்கப் பயிற்சிப் பாடசாலையை நடாத்தி வரும்; மிருதங்க வித்துவான் ஆனந்த நடேசன் மோர்ஷிங், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த முன்னணிக்கலைஞர் நெய்வேலி பி. வெங்கரேஷ் கெஞ்சிரா, லண்டனில் மிகப் பிரபல்யமாகப் பேசப்படும் துரை பாலசுப்ரமணியம் வயலின், லண்டனில்;; கடம் என்றால் பிரகாஷ் என பிரபல்யமாப் பேசப்படுவர் போன்ற தலைசிறந்த பக்கவாத்தியக் கலைஞர்களோடு மிகச் சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்ச்சியை, மண்டபம் நிறைந்த மக்கள் ரசித்து மகிழ்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை.

1_mavin_preethybrothersister5a.jpg - 12.47 Kb

3.6.2014.
navajothybaylon@hotmail.co.uk