லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்.லண்டன் மேடைகள் கடந்த சில மாதங்களாக பரதநாட்டியம், பாட்டு, மிதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் என்று களை கட்டி கலைப் பூரிப்புடன் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோரதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் லண்டன் வெயர் வில்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ‘புஷ்பாஞ்சலி,  விநாயகர் ஸ்துதி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், கணபதி தலாட்டு, கீர்த்தனம், சிவ தாண்டவம், தில்லானா என்ற ஒழுங்கில் விறுவிறுப்பு, கவர்ச்சி, கர்ச்சிதம் நிறைந்த நடன உருப்படிகளோடு பார்வையாளர்களை கட்டி வைத்த பெருமை ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோதரிகளை பெருமையாக நோக்க வைக்கிறது என்று பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த London  Oriental Examination Board இன் Director கானபூஷணம் ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் தெரிவித்திருந்தார். திறமையான பக்கவாத்தியக் கஞைர்களாhல் அரங்கு சிறப்படைந்திருந்ததையும் மேலும் அவர் பாராட்டியிருந்தார்.

‘தாலாட்டு தமிழரின் மரபு. நாம் பல்வேறு தாலாட்டுக்களை அவதானிக்கின்றபோதும் கணபதி தாலாட்டினை ஸ்ரீ மாணிக்கம் யோகேஷ்வரனின் பாவத்தோடு அமைந்த பாடல் எல்லோரையும் தாலாட்டிவிட்டது. ஸ்ரீமதி விநோதினி பரதனின் நட்டுவாங்கத்தையும், ஜதிகளை அழகாகப் பாடிய விதத்தையும், அவருக்கு பக்க பலமாக ஏற்ற இறக்கப் பாவங்களோடு ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பாலச்சந்திரரின் மிருதங்கத்தின் கைகள்கூட நர்த்தனமாடிய விதத்தினையும், சளைக்காமல் எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து வயலின் இசையை அழகாக மீட்டிய ஸ்ரீ.விஆர்.கிருஷ்ணன் மற்றும் வித்துவான் போல் புல்லாங்குழல் இசையை மீட்ட இளம் கஞைர் செல்வன் அரவிந்தன் பகீரதன் ஆகியோரை சிறப்பு விருந்தினராக வருனை தந்தருந்த ‘லண்டன் ருக்ஷ நர்த்தனாலயா நாட்டியப் பள்ளியின்’ அதிபர் நயாயினி ராஜதுரை பாராட்டிப் பேசியிருந்தார். ஸ்ரீமதி விநோதினி பரதன் பரதநாட்டியத்தில் குருவாகச் செயற்படுவது மட்மன்றி வயலின் இசையிலும் தனது மாணவர்களை அரங்கேற்றி வருவதைப் பாராட்டிய நளாயினி ராஜதுரை நாட்டியத்தில் தான் அவதானித்த பாவங்கள், அடவுகள், தாளம் பிசகாத  தன்மைகள் போன்றவற்றை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருந்தார். ஸ்ரீமதி விநோதினி பரதனுக்கு இத்தனை திறமைகள் காணப்படுவதற்கு காரணம் அவரது தாயார் சிறந்த ஒரு நாட்டியக் கலைஞராகவும்  அவரது குருவாகவும் திகழ்ந்ததுதான் காரணம் என்றும் அவரது குடும்பப் பின்னணியோடு தனக்கிருந்த உறவைப்பற்றியும் கூறியிருந்தார்’ தொடர்ந்தும் அவர் இத்தகைய அரங்கேற்றங்களை முன்னெடுத்து கலைகளை வளர்க்க வேண்டுமென அனைவரும் வாழ்த்திச் சென்றமை அரங்கில் மகிழ்வு தரும் விடயமாக அமைந்திருந்தது.

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள்…..

லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

5.12.2012   
navajothybaylon@hotmail.co.uk