வசந்தி தயாபரனின் ‘காலமாம் வனம்’ என்ற சிறுகதை நூல்!

வசந்தி தயாபரனின் 'காலமாம் வனம்' என்ற சிறுகதை நூல்  வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (2012, யூன் 10ம் திகதி) மாலை நடைபெற இருக்கிறது. வசந்தி தயாபரனின் ‘காலமாம் வனம்’ என்ற சிறுகதை நூல்  வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (2012, யூன் 10ம் திகதி) மாலை நடைபெற இருக்கிறது. வெள்ளவத்தை 57ம் ஒழுங்கையில் (உருத்தரா மாவத்தை) கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப 5.30 மணிக்கு விழா ஆரம்பமாகும். பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தின் பணிப்பாளரான கலாநிதி.செல்வி திருச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். ‘காலமாம் வனம்’ நூல் வெளியீட்டு விழாவில் நூல் வெளியீட்டு உரையை டொக்டர்.எம்.கே.முருகானந்தன்  நிகழ்த்துகிறார். முதற் பிரதியை பெறுபவர் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களாகும். சிறப்புப் பிரதியை மூத்த பத்திரிகையாளரான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை பெறுகிறார். நூல் பற்றிய கருத்துரையை வழங்க இருப்பவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா ஆவார். இவர் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மொழிகள் பண்பாட்டுத் துறைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க இருப்பவர்கள் திரு. திருமதி தெளிவத்தை ஜோசப் அவர்களாவார். இருதய சத்திரசிகி்ச்சைக்கு் பின்னான அவரது முதல் இலக்கிய நிகழ்வு இது என்பது குறிப்படத்தக்கது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாட இருப்பவர் திருமதி சொர்ணலதா பிரதாபன்( ஆசிரியை சென் கிளயர்ஸ் கல்லூரி) ஆவார். நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையை திரு.மு.தயாபரன் ஆற்ற, இறுதி நிகழ்வாக ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் திருமதி வசந்தி தயாபரன் வழங்குவார்.

 தமிழும் இலக்கியமும் இசையும் இவரோடு குழந்தைப் பருவம் முதல் இணைந்து பயணித்து வருகின்றன. தகவம் இராசையா மாஸ்டரின் புதல்வியாக இருந்தமை இவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும். தாயார் அர்ப்பணிப்புடனும் ஒழுங்காகவும் பணியாற்றிய ஆசிரியையாவார்.

“வசந்திக்கு இலக்கியமும் படைப்பாக்கத் திறனும் முதுசொம். அவை தந்தையாரிடமிருந்து பெரும் சொத்தாகக் கிடைத்தவை” என சகோதர எழுத்தளாரான கோகிலா மகேந்திரன் ஓரிடத்தில் குறிப்பிட்டதை இங்கு நினைவு கொள்ளலாம். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பாக இருக்கிறது. ஆயினும் நீண்டகாலமாக ஈழத்து இலக்கியப் பரப்பில் இவரது ஆளுமை பல்வேறு துறைகளில் துலங்கியுள்ளது.

சிறுவர் இலக்கியத்தில் இவரது பங்களிப்பு பலமாக இருந்திருக்கிறது. சிறுவர் இலக்கிய நூல்கள் பல இவரால் எழுதப்பட்டுள்ளன.

குடை நடை கடை
மண்புளு மாமா வேலை செய்கிறார்
அழகிய ஆட்டம்
பச்சை உலகம்
இவற்றுள் குடை நடை கடை என்ற நூலானது தமிழியல் விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கு மேலாக பல திறனாய்வுக்கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. பல நூல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்குகளில் இவரது குரல் தீர்க்கமாக ஒலித்திருக்கிறது. நூல் விமர்சனங்களுக்கு அப்பால் பரத நாட்டியம், மற்றும் சமயம் சார்ந்த விடயங்களிலும் இவரது தெளிவான வித்தியாசமான பார்வைகளால் வியக்க வைத்துள்ளார்.

தகவல்:- எம்.கே.முருகானந்தன்
Dr.M.K.Muruganandan
Family Physician
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html

kathirmuruga@hotmail.com