வந்தவாசியைச் சேர்ந்த மாணவிக்கு மாநிலச் சிலம்பாட்டப் போட்டியில் மூன்றாம் பரிசு

தமிழக முதல்வரின் 65-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக திருநெல்வேலியில்  வந்தவாசி, .பிப்.04.  – தமிழக முதல்வரின் 65-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக திருநெல்வேலியில்  பிப்ரவரி 2,3 ஆகிய இரு நாட்கள் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில்  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மு.வெ.அன்புபாரதி சப்-ஜூனியர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் பரிசினை பெற்றிருக்கிறார். இவர் அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகேஷ், வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.வெண்ணிலா ஆகியோரின் இளைய மகளாவார்.செய்யாறு விவேகா இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இவர், சென்ற வருடம் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டவர். பள்ளி அளவிலும், மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பலமுறை பரிசுகளைப் பெற்றுள்ளார். நேற்று நெல்லையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பாராட்டுச் சான்றிதழையும், நினைவுப் பரிசினையும் அன்புபாரதியிடம் வழங்கினார்.விழாவில், அகில இந்திய சிலம்பாட்டக் கழகத் தலைவர் டாக்டர் மு.ராஜேந்திரன், மாநிலச் சிலம்பாட்டக் கழகப் பொதுச் செயலாளர் ஆற்காடு கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்லையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெற்ற வந்தவாசி மாணவி மு.வெ.அன்புபாரதிக்கு  நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பாராட்டுச் சான்றிதழையும், நினைவுப் பரிசினையும் வழங்கியபோது எடுத்தபடம்.அருகில்,அகில இந்திய சிலம்பாட்டக் கழகத் தலைவர் டாக்டர் மு.ராஜேந்திரன், மாநிலச் சிலம்பாட்டக்  கழகப் பொதுச் செயலாளர் ஆற்காடு கேசவன் ஆகியோர் உள்ளனர்.

munaivendri.naa.sureshkumar@gmail.com


வெற்றிநடை ஜனவரி மாத இதழ்!

வெற்றிநடை ஜனவரி மாத இதழில் அழகு ராட்சசி கவிதை நூலிற்கான விமர்சனம் வெளியாகியுள்ளது. திரு ஸ்ரீ ரங்கம் சௌரிராஜன் அவர்களுக்கும் வெற்றிநடை மாத இதழின் ஆசிரியர் திரு. நாகை எஸ். பாலமுரளி அவர்களுக்கும் என் நன்றி.  இதழ் … உள்ளே