வந்தவாசி: புத்தகங்களே மனித மனங்களைப் பண்படுத்தும் ஆற்றலுடையவை… – நூலக வாசகர் வட்ட மாணவ உறுப்பினர் சேர்ப்பு விழாவில் பேச்சு –

வந்தவாசி: புத்தகங்களே மனித மனங்களைப் பண்படுத்தும் ஆற்றலுடையவை... - நூலக வாசகர் வட்ட மாணவ உறுப்பினர் சேர்ப்பு விழாவில் பேச்சு  வந்தவாசி. ஜூலை.21. –  வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற மாணவ நூலக உறுப்பினர் சேர்ப்பு விழாவில்,மனித மனங்களைப் பண்படுத்தி. நல்வழி காட்டும் ஆற்றலுடை யவையாய் எப்போதும் புத்தகங்களே முன்நிற்கின்றன என்று மேனாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி பேசினார்.  இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ் தலைமையேற்றார்.நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர்கள் டாக்டர் அர.நர்மதாலட்சுமி, தலைமையாசிரியர் க.சண்முகம், கவிஞர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அரிமா சங்க மேனாள் மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி, புதிதாக நூலக உறுப்பினர்களாக சேர்ந்த மாணவிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி, ‘நானும் புத்தங்களும்…’ எனும் தலைப்பில் பேசும்போது, சிறுவயதிலேயே எனது தந்தையார் மூலமாக எனக்குப் புத்தக வாசிப்பும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் அறிமுகமானது. தந்தை பெரியாரின் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களும், நா.பார்த்தசாரதி, அறிஞர் அண்ணா போன்றோரின் மனித வாழ்வியலைப் பேசும் எழுத்துக்களும் எனக்கு உத்வேகமூட்டியவை.  

புத்தகங்கள் நம்மோடு பேசுகின்றன.நமது சிந்தனையைத் தூண்டுகின்றன.தினமும் ஒரு புத்தகத்தின் சில பக்கங்களையாவது வாசித்து பழகுங்கள். உங்களின் மனச் சிக்கலுக்கும், குழப்பத்திற்கும் புத்தகங்கள் தீர்வைத் தரும்.சிறுவயதில் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கிற நல்ல பழக்கத்தை உண்டாக்க பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளை நூலகங்களுக்கும் புத்தகக் கண்காட்சிக்கும் கூட்டிச் செல்ல வேண்டும். நமது அறிவின் உயரமென்பது நாம் வாசித்த புத்தகங்களின் உயரம் தான். புத்தகங்களே நமது வாழ்வை நெறிப்படுத்தும் சிறந்த ஆசான்கள் என்றார்.  

1_library_vnathavasi7.jpg - 39.17 Kb

 

ரூபாய்.ஐந்தாயிரம் செலுத்தி, நூலகப் பெரும் புரவலராக இணைந்த வேல்.சோ.தளபதி,151-ஆவது நூலகப் புரவலராக இணைந்த நல்லூர் பட்டதாரி ஆசிரியர் விஜயன் இருவருக்கும்  பாராட்டுச் செய்யப்பட்டது..

நிறைவாக, நூலக அலுவலக உதவியாளர் மு.ராஜேந்திரன் நன்றி கூறினார். 

வந்தவாசி: புத்தகங்களே மனித மனங்களைப் பண்படுத்தும் ஆற்றலுடையவை... - நூலக வாசகர் வட்ட மாணவ உறுப்பினர் சேர்ப்பு விழாவில் பேச்சு

படக்குறிப்பு;
     வந்தவாசி அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாணவ நூலக உறுப்பினர் சேர்ப்பு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அரிமா சங்க மேனாள் மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி  மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கியபோது எடுத்த படம்.அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், துணைத் தலைவர் அர.நர்மதாலட்சுமி, நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர்  உள்ளனர்

haiku.mumu@gmail.com