வாசகர் கடிதங்கள்!

வாசகர் கடிதங்கள்
Jeyaraman <jeyaramiyer@yahoo.com.au>

Dec. 30 at 8:01 p.m.
திரு கிரிதரன் அவர்களுக்கு
பதிவுகள் ஆசிரியர்

அன்பு வணக்கம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது இன்பமாக அமையட்டும். உங்களின்  படைப்புலகப் பணிகள் உன்னதம் அடைந்திடட்டும். நலமும் வளமும் பெருக குடும்பம் சிறக்க வாழ்க வாழ்க வாழ்கவென்று புதுவருட வாழ்த்துகளை வழங்கி மகிழ்கின்றேன்.

வாழ்கவளமுடன்
அன்புடன்
ஜெயராமசர்மா

Assistant Professor Dr. A. Chandran <chandran@shctpt.edu>
Dec. 8 at 2:03 a.m.
கதை, கட்டுரை வெளியிட்டமைக்கு நன்றி. மேலும் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியமைக்கு நன்றி.


Mooventhan Ps <psmnthn757@gmail.com>
Dec. 7 at 9:57 a.m.
பேரன்புடையீர்,
வணக்கம். தாங்கள் நடாத்தும் இணைய இதழ்ப்பணியை நன்றிப்பெருக்கோடு பாராட்டுகின்றேன். உலகத் தமிழர்களை இலக்கியத்தால் ஒன்றிணைக்கும் தங்களின் முயற்சிகள் மேன்மேலும் செழிக்க வாழ்த்துகிறேன். இத்துடன் எனது பங்களிப்பாக ஆய்வுக்கட்டுரையை இணைப்பாக அனுப்பியுள்ளேன்.

என்றும் தமிழுடன்
முனைவர் ப.சு. மூவேந்தன்
உதவிப்பேராசிரியர் தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலைநகர்
இந்தியா.