வாசகர் கடிதம்

வாசகர் கடிதங்கள் சில.Dear Mr. Giritharan,  Good day, We read your Pathivugal when ever we get time. You are publishing really valuable information and we spare time to read,even we are so busy in our regular job. Recently i read research articles of  Dr. C. Ravisankar., M.A. Phd, Professor of Madurai Kamarajar University, Madurai, India.  Really awesome researches. I felt along with my friends who are here in Kingdom of Bahrain that really you are doing great job for our great, ancient Tamil language. I wish you all the best your team and all the writers.  Keep rocking…

Your sincerely, Engineer.C.KARUPPIAH,
Al – Manama, Kingdom of Bahrain

kailaikarup@gmail.com


திருமாளவனின் ஆத்மா சாந்தியடையட்டும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Monday, October 5, 2015 6:41 PM
From: “Letchumanan Murugapoopathy” <letchumananm@gmail.com>

திருமாவளவனை  2007  இறுதியில்  கனடா  சென்றிருந்தபொழுது  ஒரு சந்திப்பில்  கண்டு  உரையாடியிருக்கின்றேன்.   நாம்  இருந்த  மேசையிலேயே  அவரும்  அருகே  அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்.   இவர்  தமது  நேர்காணல்  ஒன்றில் எந்தப்போலித்தனமும்  இல்லாமல்  மனம்திறந்து  தன்கதை சொல்லியிருக்கிறார்.    அதனைப்படித்து  நான்  நெகிழ்ந்திருக்கின்றேன். அவருக்கு   நோய்  முற்றியிருக்கும்  செய்தியை   அண்மையில்  கிரிதரனின் பதிவுகளில்    பார்த்தேன்.  அவர்  குணமடையவேண்டும்  என்பதுதான்  எனது பிரார்த்தனையாக  இருந்தது. சில சமயங்களில்  எங்கள்  வேண்டுகோள் உயிர்களைப் பறிக்கும்  சக்திகளுக்கு  கேட்பதில்லை.   மரணத்துள் வாழ்பவர்களுக்கு   இவ்வாறு  விடுதலைதான்  தரவேண்டும்  என்பதே  அந்த   சக்திகளின்  எண்ணமாக  இருக்கும்.   திருமாவளவனின்  ஆத்மா சாந்தியடையட்டும்.   அன்னாரின்  குடும்பத்தினருக்கு  எனது  ஆழ்ந்த அனுதாபங்கள்.

முருகபூபதி


 

RE: நலம் பெற வேண்டுகின்றேன்.
Saturday, October 3, 2015 10:02 PM
From:  “Kuru Aravinthan” <kuruaravinthan@hotmail.com>

இனிய நண்பர் கவிஞர் திருமாவளவன் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன். சுகவீனமான நேரத்திலும் எனது பாராட்டு விழாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப அவர் மறக்கவில்லை. நலம் பெற வேண்டுகின்றேன்.

குரு அரவிந்தன்.


From:     “pichinikkadu elango” <pichinikkaduelango@yahoo.com>
எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் அவர்களை சென்னையில் சந்திக்கிற வாய்ப்பைப்பெற்றேன்.
அவ்வளவு எளிமை. பணிவு கல்ந்த மனிதர். அவர் இழப்பு மிகவும் வருத்தத்தைத் தருகிறது.
உங்கள் பதிவு இன்னும் சோகத்தைக்கூட்டியது.

அன்புடன்
பிச்சினிக்காடு