‘வியர்வையின் ஓவியம்’ – விருது

'வியர்வையின் ஓவியம்' - விருது'வியர்வையின் ஓவியம்' - விருதுஅன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய ‘வியர்வையின் ஓவியம்’ இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று 01.11.2012 பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறுகதை, கவிதை, பாடல், காவியம், புகைப்படம் ஆகிய பிரிவின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுக்கு விருதுகளோடு, சான்றிதழ்களும், பரிசுகளும், ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. இந் நிகழ்வில், என்னால் எழுதப்பட்ட ‘தாய்மை’ எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும்,  பரிசையும் வென்றது. அத்தோடு எனது கவிதைக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. எனது இலக்கியப் பயணத்தில் தொடர்ந்தும் என்னை எழுத ஊக்குவித்து வரும் உங்களிடம் இத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். என்றும் அன்புடன், – எம்.ரிஷான் ஷெரீப்   –   mrishanshareef@gmail.com