‘ஸ்காபுரோ சிவிக்சென்ரரி’ல் “தமிழர் மத்தியில்” நந்தாவுக்கு அஞ்சலிக் கூட்டம்

 நந்தாவின் முழுப்பெயர் நந்தகுமாரன் இராஜேந்திரம் என்பதாகும். நந்தா இலங்கை, கட்டுப்பெத்தை பல்கலைக் கழகத்தில் ‘கட்டடக்கலை’ பயின்று பட்டம் பெற்றவர். அவர் ரொறொன்ரோவில் நீண்டகாலமாகப் புகழ்பெற்ற “கட்டடக்கலை” நிறுவனமொன்றில் பணியாற்றியவர். அவரது தாயார் உடுப்பிட்டியையும், தந்தையார் முள்ளானையையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். நாளை ஜூன்(JUNE) மாதம், முதலாம் தேதி, வெள்ளிக்கிழமை காலம் சென்ற “தமிழர் மத்தியில்” நந்தா அவர்களின் மறைவை நினைவு கூர்ந்து அஞ்சலிக் கூட்டமொன்று மாலை 6.00 மணியிலிருந்து 9.30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்வு நடைபெறுகின்ற இடம் ஸ்காபுரோ சிவிக் சென்ரர். (150 Borough Drive    , North-west corner of McCowan Road and Ellesmere Road, Toronto, ON M1P 4N7 ).  “தமிழர் மத்தியில்” நந்தா கடந்த 26ஆம் தேதி காலமானார். நந்தாவின் முழுப்பெயர் நந்தகுமாரன் இராஜேந்திரம் என்பதாகும். நந்தா இலங்கை, கட்டுப்பெத்தை பல்கலைக் கழகத்தில் ‘கட்டடக்கலை’ பயின்று பட்டம் பெற்றவர். அவர் ரொறொன்ரோவில் நீண்டகாலமாகப் புகழ்பெற்ற “கட்டடக்கலை” நிறுவனமொன்றில் பணியாற்றியவர். அவரது தாயார் உடுப்பிட்டியையும், தந்தையார் முள்ளானையையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.  நந்தா 22 வருடங்களுக்கு முன் கனடிய வர்த்தகர்களுக்கான வர்த்தகக் கையேட்டை சிறிய அளவில் ஆரம்பித்து 1500 பக்கங்கள் கொண்ட பெரும் வர்த்தகக் கைநூலாக மாற்றியவர்.  தொழில்முறை நேர்த்தி கொண்ட கையேடாகத் தமிழ் சமூகம் பயன்படத்தக்க பல்வேறு உபயோகமுள்ள தகவல்களைத் தாங்கி வந்த பெரும் நூலாகத் “தமிழர் மத்தியில்” வர்த்தகக் கையேடு திகழ்ந்தது அனைவராலும் ஒப்புக்கொள்ளபட்ட உண்மை. மற்றும் இக்கையேடு தமிழர்கள் தம் வர்த்தகத்தைக் கனடாவில் கட்டியெழுப்புவதற்கு அருந்துணை ஆற்றியிருக்கின்றது. அந்த வகையில் நந்தாவின் இழப்பு கனடா வாழ் தமிழ் சமூகத்தினால் நினைவுகூரப்படத்தக்கது. எனவே அவரது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு -: 647-237-3619
அஞ்சலி ஏற்பாடு சார்பாக  “நந்தாவின் நண்பர்கள்”

தகவல்: nmuralitharan@hotmail.com