ஸ்ரீலங்காவில் பௌத்த போராளிகள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்!

ஸ்ரீலங்காவில் பௌத்த போராளிகள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்!கடந்த செப்ரம்பர் மாதம் சுமார் 100 பௌத்த பிக்குகளின் தலைமையிலான ஒரு கும்பல் புராதன நகரமாகிய அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தகர்த்தார்கள். அந்தக்கூட்டம் மஞ்சளும் சிவப்பு நிறத்தையும் கொண்ட பௌத்த கொடிகளை வீசி ஆர்ப்பரித்தார்கள். ஒரு பௌத்த துறவி பச்சை நிறத்திலுள்ள முஸ்லிம்களின் கொடியை தீயிட்டுக் கொழுத்தினார். பௌத்த துறவிகள் அந்த முஸ்லிம் வழிபாட்டுத் தலம், 2,000 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் அமைந்துள்ளதாக கூறினார்கள், – பண்டைய மத நூல்களில் பொறிக்கப்பட்டுள்ளபடி முழு தேசத்திலும் அவர்களுக்குள்ள சொத்துரிமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பௌத்தர்கள் ஸ்ரீலங்காவில் மோசமாக நடந்துகொண்ட சமீபகால சம்பவம் இந்த அனுராதபுர தாக்குதல் மட்டுமல்ல. ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 2,000 சிங்கள பௌத்தர்கள், பௌத்த துறவிகள் தலைமையில்;, 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சி சிங்கள மன்னர்கள் தஞ்சமடைந்ததாக நம்பப்படும் மிகப் பெரிய வலையமைப்பில் குகைகளை கொண்டுள்ள புனித நகரமான தம்புள்ளயில் உள்ள மசூதி ஒன்றிற்கு எதிராக அணிவகுப்பை நடத்தினார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒரு அடையாளத் தாக்குதலை நடத்தி, இந்த தாக்குதல் ஒரு வரலாற்று நாளை குறிப்பதாக தெரிவித்தார்கள், அந்த தாக்குதலுக்கு தலைமையேற்ற ஒரு துறவி கூட்டத்தினரிடம் கூறியது “சிங்கள இனத்தை நேசிக்கும், சிங்கள இரத்தம் ஓடுகின்ற பௌத்தர்களுக்கு இது ஒரு வெற்றி” என்று.

இத்தகைய பேரினவாதம் பௌத்தம் என்பது வன்முறையற்ற தன்மையையும் மற்றும் பற்றற்ற தன்மையையும் வலியுறுத்தும் ஒரு சமயம் என்கிற மேற்கத்தைய முன்னுணர்வுக்கு முற்றிலும் முரண்பாடானது, ஆனால் ஸ்ரீலங்காவின் சமய வரலாறு இதைத்தான் கொண்டிருக்கிறது. போராளிப் பௌத்தம், 6ம் நூற்றாண்டில் பௌத்த துறவிகளால் தொகுக்கப்பட்ட மகாவம்சம் எனும் புராதன கதையிலும் தனது வேர்களைப் பதித்துள்ளது. இந்த மகாவம்சத்தின்படி இந்தியாவில் பௌத்த மதத்தின் மறைவினை புத்தர் முன்கூட்டியே உணர்ந்தபோதும் அதற்கான பிரகாசமான ஒரு எதிர்காலத்தை ஸ்ரீலங்காவில் கண்டார். “ஓ! கடவுள்களின் தேவதைகளே லங்காவில் எனது சமயம் நிறுவப்பட்டு பல்கிப் பெருக வேண்டும்” என்று அவர் சொன்னார். சிங்களவர்கள் பௌத்த மதத்தை அதன் ஆதியான வடிவத்தில் போற்றிப் பாதுகாப்பதற்காக தாங்கள் புத்தரால் கட்டளையிடப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்பதற்கு இதனை அடையாளமாக எடுத்துக் கொண்டனர்.

புராதனக் கதைகளின்படி கி.மு 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இளம் சிங்கள இளவரசன் புத்தரின் எச்சங்களால் ஆன கூரான ஈட்டியை ஆயுதமாக ஏந்திக் கொண்டு 500 துறவிகளைக கொண்ட ஒரு கூட்டத்தை வழி நடத்திச்சென்று தமிழ் ஆக்கிரமிப்பாளர்களை வெற்றி கொண்டான் எனக் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக அவரது ராஜதானியை சாவுக்குரிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்காக அந்த இளவரசனது வெற்றி தேசிய உயிர்வாழ்தலுக்கு மத வன்முறை சட்டப்படியான ஒரு வழிமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

74 விகிதம் பெரும்பான்மை சிங்களவருக்கும், தீவின் வடகிழக்கும் பகுதியில் ஒரு சுதந்திர தனிநாடு கோரி போராட்டம் நடத்திய 18 விகிதமான சிறுபான்மை தமிழருக்கும் இடையே 25 வருடகாலமாக நடைபெற்ற போரில் போராளிப் பௌத்தம் ஒரு இயங்கு சக்தியாக இருந்தது.  (ஸ்ரீலங்காவின் சனத்தொகையில் 6 விகிதமாக உள்ள முஸ்லிம்கள் அநேகமாக நடுநிலை வகித்தார்கள்). யுத்தம் நடைபெற்றபோது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை பௌத்த துறவிகள் தடுத்து வந்தார்கள்.

தேரவாத பௌத்தத்தில் குருமார்களை கூட்டாக குறிப்பிடும் பதமான சங்கம் என்பது, வரலாற்று ரீதியாக திரைக்குப் பின்னாலிருந்து மதவாத தேசியத்தை பரந்த அளவில் திறமையாக செயற்படுத்துவதற்கு அரசியற் சக்திகளை பயன்படுத்தின. ஆனால் போரின் கடைசி வருடங்களின்போது அது வெளிப்படையான அரசியல்மயமானது. 2004ம் ஆண்டில் கடும் போக்கு தேசிய மரபுரிமைக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் ஏழு அங்கத்தவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள் அத்தனைபேரும் பௌத்த துறவிகளே. மற்றும் அந்தக் கட்சி பொது வாழ்வில் பௌத்த அறநெறிகளை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிற மேடையில் அவை இயங்கின. பாராளுமன்றத்தில் அவர்கள் அமர்ந்த உடனேயே பாராளுமன்றத்துக்குள்  அமளி துமளிகளை மேடையேற்றினார்கள்.

தமிழர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சிக்கான தீர்வை ஏற்படுத்துவதற்காக, மார்ச் 2002 ல் சமாதான இடைத்தரகர்களாக நோர்வே ஆற்றிய பங்கினை அவமதிப்பு செய்வதற்காக ஜாதிக ஹெல உறுமய கடுமையாக வேலை செய்தது. ஸ்ரீலங்கா எப்போதும் ஒரு சிங்கள இராச்சியமாகவே இருக்க வேண்டும்,சுயாட்சியானது ஐக்கியப்பட்ட நாடு என்பதற்கு முரணான ஏண்ணமாக இருப்பதால் இராணுவத் தீர்வினை தவிர வேறு தெரிவுகளுக்கு இடமில்லை என்று பிக்குகள் அறைகூவல் விடுத்தனர். கட்சியின் அங்கத்தவர்களில் வெளிப்படையாக பேசுபவர்களில் ஒருவரும் ஸ்ரீலங்கா ஊடகங்களால் யுத்த துறவி என அழைக்கப்படுபவரமான  அத்துரலியே ரத்ஹான சமாதான பேச்சுவார்த்தைகள் புலிகளை மேலும் பலசாலியாக்குகின்றன என வாதிட்டார். ”அவர்கள் தங்கள் ஆயதங்களை கைவிடுவார்களானால் அப்போது நாங்கள் அவர்களுடன் பேசலாம் இல்லையென்றால் தேவைப்படும் எந்த வழிமுறையையும் பயன்படுத்தி அவர்களை நாங்கள் கட்டுப்படுத்துவோம். இப்போது நாங்கள் போராட வேண்டும் பிறகு பேசலாம்” என்றார் அவர்.

2006 வசந்த காலத்தின்பொழுது, துறவிகள் எல்லோரையும் உட்படுத்திய ஒரு குழவினரை கொண்ட அமைதி நடைப்பயணம் மற்றும் நீண்டநேரம் அமர்ந்திருத்தல் என்பனவற்றை யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிராக மேற்கொண்டு தாக்குதலை நடத்தினார்கள். அதன்காரணமாக யுத்த நிறுத்தம் முறிவடைந்து மற்றொரு சுற்று யுத்தம் ஆரம்பமாக வழிபிறந்தது.

பெருமளவு இரத்தம் சிந்திய போதும், போர் நடைபெற்றபோது பௌத்த குருமார்களில் அநேகம்பேர், பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை நடத்த தமது ஆசிகளை வழங்கினார்கள். மே,2009ல் இலங்கை இராணுவத்துக்கு அந்தப் போரில் வெற்றி வெளிப்பட்டது. ஆனால் புலிகளுக்கு எதிரான அதன் கொடூரமான தாக்குதல்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு சர்வதேச கண்டனங்களுக்கு பரந்த அளவில் இலக்காகியது. பொதுமக்களின் மரணம் உயர்ந்த பட்சம் 40,000 மேல் இருக்கலாம் என்றும், மற்றும் பிரித்தானியாவின் சனல் – 4 ஒளிபரப்பு, தமிழ் புலிக் கைதிகளின் கூட்டுக் கொலைகளை ஆவணப்படமாக தனது நிகழ்ச்சியில் “ஸ்ரீலங்காவின் கொலைக் களம்” எனும் தலைப்பில் ஒளிபரப்பியது. சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஐநா மனித உரிமைகள் சபை போன்றவை மானிட துஷ்பிரயோகம் மற்றும் சாத்தியமான போர்க்குற்றங்கள் என்பனவற்றுக்கான விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்தபோதும், ராஜபக்ஸ அரசாங்கம் அதற்கு பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பௌத்த துறவிகள் அத்தகைய கோரிக்கைகள் பௌத்த தாயகம் என சிங்களவர் வர்ணிக்கும் நாட்டுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறி இந்த பிடிவாதத்துக்கு பின்துணை வழங்குகிறார்கள்.

யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து, பௌத்த துறவிகள் தண்டனை இயல்புடைய வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னேற்றுவதில் முன்னணி வகித்தார்கள். பெரும்பான்மையான சிங்களவர்கள் பரவலாக கருதுவது தமிழர்கள் மீதான வெற்றியானது, அதன் துணைநிலையை ஆக்கிரமித்துள்ள ஏனைய குழுக்களுக்கும் அரசாட்சியின் விதிப்படி வலியுறுத்தப்படும் கட்டளை என்றே.

இதன்படி நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் தடைப்பட்டு வருகின்றன. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் 300,000 தமிழர்களை மீள்குடியேற்றும் அரசாங்கத்தின் முயற்சிகள் தாமதமாகவும் மற்றும ஒழுங்கின்மையாகவும் நடைபெற்று பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தற்போது பெரும்பாலும் நிறைவடைந்து விட்டது. தமிழர் பிரதேசங்களில் இராணுவம் பொதுமக்களை கடுமையாக நடத்துவதுடன் பாரிய இராணுவத் தளங்களையும் நிறுவி வருகிறது. சர்வதேச நெருக்கடி குழவினரது அறிக்கையின்படி “ பொதுமக்களின் எதிர்ப்புகளின் சவால்களை எதிர்கொள்ளும் வேளைகளில் இராணுவம் ஆர்ப்பாட்டக் காரர்களை உடல் ரீதியாக தாக்குவதற்கு விரும்புகிறது மற்றும் கட்டாய காணாமற் போக்கடித்தல், மற்றும் பல சட்ட விரோத தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றிலும் இராணுவம் தொடர்பு கொண்டுள்ளது என்று நம்பிக்கையான குற்றச்சாட்டுகள் வலியுறுத்தப்படுகின்றன” என்று தெரியவந்துள்ளன. தவிரவும் 11,000 வரையிலான முன்னாள் புலி அங்கத்தவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் அட்டவணைப் பிரகாரம் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டன, அதில் கைதிகளை அவர்கள் சிறையில் இருந்தபோது தவறாக நடத்தப்பட்டதாகவும் அவர்கள் விடுதலையானதன் பின்னர் அடிக்கடி தொந்தரவுக்கு உட்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சருமான கோட்டபாய ராஜபக்ஸ சமீபத்தில்; ,வடக்கு மற்றும் கிழக்கு ஆகியன, முற்றாக தமிழர் பிரதேசங்களல்ல என்று அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்;களை அங்கு நடத்தக்கூடும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார், யுத்தம் ஏற்படுவதற்கான பிரதான உராய்வினை ஏற்படுத்திய பிரதான காரணங்களில் இந்தக் குடியேற்றத்திட்டமும் ஒன்று. அதேவேளை போரின்போது அழிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் இருந்த இடங்களில்  அல்லது பாரம்பரிய இந்து ஆலயங்களுக்கு அருகில் பௌத்த ஆலயங்களை அமைக்க இராணுவம் அனுமதி அளித்து வருவதாக தமிழர்கள் முறைப்பாடு தெரிவிக்கிறார்கள். யுத்தத்துக்கு பின்னான குழப்ப நிலையை சாதகமாக பயன்படுத்தி பிக்குகள், தமிழரின் நிலங்களை குறிப்பாக புதிய இராணுவத் தளங்களுக்கு அருகில் உள்ள நிலங்களை கைப்பற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த வருடம் சர்வதேச நெருக்கடி குழு  “மோதல்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதற்கான செய்முறைகளை” பற்றி எச்சரிக்கை செய்ததுடன் நல்லிணக்க முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாதபடி கடுமையாக தோன்றுவதாகவும் சொல்லியிருந்தார்கள்.

போராளிப் பௌத்தம் சக்தியடைவதற்கான மற்றொரு அடையாளம், அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளடப்பட்ட மனித உரிமை மீறல்களின் துஷ்பிரயோகங்களை எதிர்ப்பதற்கு அரசாங்கம் மறுப்பதுதான்.

2009 யுத்த வெற்றிக்குப் பின் ஜனாதிபதி ராஜபக்ஸ உடனடியாக கலாச்சார தலைநகரமான கண்டிக்குச் சென்று நாட்டின் உயர் பௌத்த குருமார்களின் முன்பாக மண்டியிட்டு வணங்கினார். மனிதாபிமான துஷ்பிரயோகங்கள் மற்றும் சாத்தியமான யுத்தக்குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமென்று மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்த பௌத்த குருமார்கள் நிராகரித்துள்ளனர். சமீபத்தில்தான் ராஜபக்ஸ அரசாங்கம் யுத்தத்தில் ஏதாவது பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டது.

உண்மையில் மார்ச் பிரேரணை யு.என்.எச்.ஆர்.சியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதும், கொழும்பில் நூற்றுக்கணக்கான பௌத்த குருமார்கள் அதற்கு எதிராக விழிப்புணர்வு பிராத்தனையை நடத்தினார்கள். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அது நிறைவேற்றப்பட்டதும் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ”உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகள் தற்போதைய சமாதான சூழ்நிலையில் ஸ்ரீலங்காவை தாழ்த்துவதற்கு தம்முள் கை கோர்த்துள்ளன, அத்துடன் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தேசத்தை இருண்ட யுகத்துள் தள்ளிவிடவும் முயற்சிக்கின்றன” என்று இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சொன்னதாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம் குறிப்பிட்டிருந்தது.

புத்த பிக்குகள் அரசாங்கத்துடன் தங்களை மிக நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு மனிதாபிமான துஷ்பிரயோகங்களுக்கான பொறுப்புக்கூறலை எதிர்ப்பது முரண்பாடான ஒரு செய்கையாக பலரும் காண்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய முரண்பாடக இருப்பது, அவர்களது பௌத்த மதத்தின் முக்கிய வடிவத்தினை போற்றிப் பாதுகாப்பதற்காக சிங்களவர்கள் அதனை ஆழமாக காயப்படுத்துவதுதான். சங்கங்கள் அரசியலில் சேர்ந்து தொழிற்படுவது ஆன்மீக கவனத்துக்கு கொடுக்கப்பட்ட விலையாகும். ஸ்ரீலங்காவிலுள்ள பெரும்பான்மையான பிக்குகள் பௌத்தமதத்தின் முக்கிய செயலாக கருதப்படும் தியானம் செய்வதை இப்போது மெற்கொள்வதில்லை. சில மேற்கத்தைய பிக்குகள் தியானப் பயிற்சிகளை கற்றுக் கொள்வதற்காக பல தூதுவப் பயணங்களை ஸ்ரீலங்காவுக்கு மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் அதில் வெற்றி விரைவில் கிடைக்ககூடியதாக இருக்கவில்லை.

மேலும் மடாலய ஒழுக்கங்களிலும் அங்கு தவறுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரியில் ஒரு பிக்கு கொலை செய்ததுக்காக மரணதண்டனை விதிக்கப் பெற்றுள்ளார். 1959ல் பௌத்த தேசிய திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திய பிரதமர்  எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களை கொலை செய்த, தல்துவே சோமரத்ன என்கிற பிக்குதான் முதல் முறையாக இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட முதல் பிக்கு ஆவார்.

கடந்த பத்து வருடங்களுக்குள் மைனர்களான சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புத்த பிக்குகள்மீது சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் பல சந்தர்ப்பங்களில் பிக்குகளில் குறிப்பாக இளம் பிக்குகள் பகிரங்கமாக போதை மருந்து பாவனை மற்றும் தொந்தரவுகள் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். பௌத்தம் ஒரு தனித்துவமான தேசிய நிலையிலுள்ளது,    அது தார்மிக மேன்மையை ஊக்குவிக்குகிறது என்கிற அடிப்படைவாதிகளின் எண்ணத்தையும் அவர்களது பௌத்தமதம் தற்போது எவ்வளவு காயம்பட்டுள்ளது என்பதையும்  அநேக சிங்களவர்களுக்கு ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. பௌத்த மதத்தை பின்பற்றும் முக்கியஸ்தரான ஒருவர் வேதனையுடன் (ஆனால் புத்திசாலித்தனமாக) என்னிடம் இருபது வருடங்களுக்கு முன்னர் விளக்கியது “ பௌத்தம் ஸ்ரீலங்காவில்  இப்போது வெறுமையாக உள்ளது நாங்கள் அதன் இயக்கங்களினூடாக  செல்லுகிறோம்” என்று. ஆனால் இன்று அந்த இயக்கங்கள் ஒருபோதுமில்லாத குழப்பங்களை உருவாக்குகின்றன.

ஸ்ரீலங்காவின் நச்சு அடையாளமுள்ள அரசியல் குறிப்பாக  ஏனைய தேரவாத நாடுகளைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமானதாக இல்லை. உதாரணத்துக்கு மியான்மாரில் உள்ள பௌத்த தேசியவாதத்தை எடுத்துக்கொண்டால் பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிராக இதேபோன்ற அறைகூவல்கள் விடுக்கப்பட்டன. ஆனால் அங்குள்ள பெரும்பான்மையினரிடத்தில் நிலம் இனம் மற்றும் நம்பிக்கை என்பனவற்றுடன் அரசியல் மற்றும் கலாச்சார வேற்றுமைகளை வெகு சமீபத்தில் றொகின்கயா முஸ்லிம்கள் உட்பட நாட்டின் பௌத்தரல்லாத சிறுபான்மையோர் மத்தியில் பரப்புவதற்கு பெரும்பான்மை என்கிற பலமே தனித்தன்மையான தூய பௌத்த வடிவத்தின் ஆதாரமாக பயன்பட்டது. பௌத்தம்  கொள்கையளவில் வன்முறையை தவிர் என்று போதித்த போதிலும், தேசியவாதிகளின்  மரபுக் கதைகளில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதில் அது ஒரு நோயாளியாவே இன்னும் உள்ளது.

நன்றி: மூலம்: Foriegnaffair.com; மொழிபெயர்ப்பு: தேனீ.காம்
http://www.thenee.com/html/080812.html