‘ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்’ என்னும் வலைப்பதிவினை இணைய இதழுக்கு அறிமுகம் செய்கின்றோம். மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. உடல் நலம், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றியும் பல்வேறு இணையத்தளங்களில் வெளிவந்த ஆக்கங்களையும், தனது ஆக்கங்களையும் உள்ளடக்கித் தனது வலைப்பதிவில் மீள்பிரசுரம் செய்கின்றார். மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. மேற்படி வலைப்பதிவினை நடாத்திவரும் ரத்னவேல் நடராஜன் தன்னைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்: ‘எனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இரண்டு பையனகளுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா ‘ரத்தம் ஒரே நிறம்’ புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய ‘தமிழக நாடார் வரலாறு’ புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை – முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு – ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு. rathnavel.natarajan@gmail.com 94434 27128′
வலைப்பதிவினை வாசிக்க ……. உள்ளே