ஸ்ரீ சத்யசாய் பாபா – புட்டபர்த்தியிலிருந்து கடைசிப் பயணம் வரை

ஸ்ரீ சத்யசாய் பாபா96வது பிறந்தநாளை கொண்டாடிய பிற்பாடு அதாவது 2022ஆம் ஆண்டு, தன்னுடைய ஆன்மா கடைசி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருக்குமென்று சொன்ன ஸ்ரீசத்யசாய் பாபாவினுடைய ஆன்மா,  ஏப்ரல் 24ஆம் தேதி காலை 7.40 மணிக்கு  உடலை விட்டு பிரிந்தது. பக்தர்களை விட்டு திடீரென்று பதினோரு வருடங்களுக்கு முன்னதாகவே சத்யசாய்பாபா கடைசி யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். பாபா காலமாகிவிட்ட போதிலும் இன்னமும் பக்தர்கள் அவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர் யோகநித்திரையில் உள்ளதாக நம்புகிறார்கள். பாபா மருத்துவமனையிலிருந்த போது, உடல்நலம் பெறவேண்டுமென்று பிரார்த்தனை செய்த பக்தர்கள் ஸ்ரீசத்யசாய்பாபா தங்களைவிட்டு பிரியவில்லையென்று,  மறையவில்லையென்று  நம்பிக்கையோடு சொல்லுகிறார்கள். 24.04.2011 அன்று நாடு புதியதொரு விடியலை அனுபவித்துக் கொண்டிருந்தபோது புட்டபர்த்தி சோகத்தில் மூழ்கியது.

ஸ்ரீசத்யசாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு
ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த அனந்தபூரிலுள்ள புட்டபர்த்தியில் 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று பெத்தவெங்கடப்பராஜு, ஈஸ்வரம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் சத்ய நாராயணராஜு. குழந்தையாகயிருந்த பாபாவுக்கு நாகமொன்று சில கணங்களுக்கு குடைபிடித்து நின்று மறைந்தது. 1940ஆம் ஆண்டு அதாவது 14காவது வயதில் பாபாவை தேள்கடித்தது, அவர் மயக்கம் போட்டு விழுந்தார்.  மயக்கம் தெளீந்த பிறகு அவர் பகவான் பாடல்களை பாடினார், சமஸ்கிருதத்தில் சொற்பொழிவுகள் ஆற்றினார், அவருடைய செயல்கள் மற்றவர்களுக்கு அப்பாற்பட்டதாகவும், புரியாத புதிராக இருந்தது. அவருடைய வாழ்க்கை திசை மாறியது, புட்டபருத்தியில் தன்னோடு விளையாடிக் கொண்டிருந்த தோழர்களுக்கு புளிய மரத்திலிருந்து இனிப்புகளையும், பழங்களையும் வரவழைத்துக் கொடுத்தார், சகோதரர்களுக்கு காற்றிலிருந்து விபூதியை வரவழைத்துக் காட்டினார். பாபாவினுடைய லீலைகளைக் கண்டு மக்கள் குழம்பினார்கள். தன்னுடைய மகனுக்கு காத்துகருப்பு பட்டுவிட்டதென்று நினைத்து அவருடைய தந்தை பிரம்பை எடுத்துக் கொண்டு “யார் நீ, உனக்கு என்ன வேண்டுமென்று” கேட்டதற்கு, நான்தான் சாய்பாபா, சீரடி சாய்பாபாவினுடைய அவதாரமென்றும், அவருடைய கைகளிலிருந்த பூக்கள் கீழே விழுந்து சாய்பாபாவென்று எழுத்துக்களாக மாற்றம் பெற்றன. அன்றிலிருந்து சத்யநாராயணராஜு, ஸ்ரீசத்யசாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.   

1944ஆம் ஆண்டு சாய்பாபா குடும்பத்தை விட்டு பிரிந்தார். புட்டபர்த்திக்கு அருகேயுள்ள கோவிலில் வசிக்கத் தொடங்கினார். ஆன்மீகப் பயணமாக பெங்களூருக்கு சென்றார். அப்போதுதான் அவர் கலர் ஆடையை துறந்து வெள்ளைநிற ஆடையை உடுத்த தொடங்கினார், நாளடைவில் காவி உடையை அணியத் தொடங்கினார்.             

1950ஆம் ஆண்டு, தன்னுடைய 28வது பிறந்த நாளையொட்டி, புட்டபர்த்தியில் பிரம்மாண்டமான பிரசாந்தி நிலையம் ஆசிரமத்தை நிறுவினார்.

1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரசாந்தி நிரலயம் ஆசிரமத்துக்குள்ளே இலவச மருத்துமனையொன்றை துவக்கி வைத்தார்.

1968ஆம் ஆண்டு சத்யசாய்பாபா நமிபியா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு ஆன்மீகப் பயணமாக சென்றார். அதே ஆண்டில் தன்னுடைய ஆசிரமத்துக்கருகே மகளிர் கல்லூரியை திறந்து வைத்தார்.

1972ஆம் ஆண்டு ஆன்மீக, சமூகப்பணிகளை நிர்வகிக்க  ஸ்ரீசத்யசாய் சென்டெரல் டிரஸ்டை( Sri Sathya Sai Trust Central) நிறுவினார்.

1981ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் ஸ்ரீசத்யசாய் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார். இந்தப் பலகலைக்கழகம்  எண்ணற்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை கொடுத்து வருகிறது.

ஸ்ரீசத்யசாய்பாபா, புட்டபர்த்திக்கு அருகே இடம்பெற்றுள்ள பீடுபள்ளி  கிராமத்து மக்களுடைய நீண்டகால ஆசையான இலவச குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். வறண்டுபோன நிலத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த பீடுபள்ளி மக்கள் குடிநீருக்காக தவித்துக் கொண்டிருந்தார்கள்.   அந்த கிராமத்து மக்கள் பயனடையும் வகையில், பாபா இலவச குடிநீர் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து திறமையாக செயல்படுத்தினார். இதைத் தவிர்த்து அனந்தபூரிலுள்ள மேடக், மெஹபூப்நகர் (Medak and Mehboopnagar) ஆகிய இடங்களில் வசிக்கின்ற மக்களுக்கு இலவச குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். 2001ஆம் ஆண்டில் ஸ்ரீசத்யசாய்பாபாவினுடைய இலவச குடிநீர் திட்டத்தால் 320 கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. அவருடைய இலவச குடிநீர் திட்டத்தால் சென்னைவாசிகளும் பயன்பெற்று வருகிறார்கள்.

2001ஆம் ஆண்டு ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக பெங்களூரில் பல்நோக்கு மருத்துவமனையை கட்டினார். இந்த மருத்துவமனையிலிருந்து பல லட்சக்கணக்கான நோயாளிகள் இலவச மருத்துவசிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.

ஸ்ரீசத்யசாய்பாபா ஹைதராபாத்தில் சிவம் மந்திரை நிறுவினார், அதுபோல சென்னையில் சுந்தர் மந்திரை தொடக்கி வைத்தார். மதுரையில் ஆனந்த நிலயத்தையும், புதுதில்லியில் ஸ்ரீசத்யசாய் சென்டரை துவக்கி வைத்தார்.

1926ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை ஸ்ரீசத்யசாய்பாபா மக்களோடு மக்களாக வாழ்ந்தார், மக்களுக்காக வாழ்ந்தார், மக்களின் மூலம் பல நல்ல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து திறமையாக செயல்படுத்தியிருக்கிறார். மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துக் கொண்ட ஸ்ரீசத்யசாய் பாபாவினுடைய அன்புச் சங்கலி பல லட்சக்கணக்காண மக்களை பிணைத்துக் கொண்டதோடு, அவருடைய மனிதநேயமும், தன்னலமற்றசேவையும் உலகத்திலுள்ள பக்தர்களைக் கவர்ந்து இழுத்தது. அவர் 37நாடுகளில் கல்விக்கூடங்களை நிறுவியிருக்கிறார். பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் ஸ்ரீசத்யசாய்பாபாவின் மீது அப்படியொரு அசைக்கமுடியாத உருக்கமான பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். அவர்களில் அரசியல் தறையைச் சார்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எஸ்.எம். கிருஷ்ணா, குஜராத் மாhநிலத்தினுடைய முக்கியமந்திரி நரேந்திர மோடி, விளையாட்டுத் துறையைச் சார்ந்த சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், பிரபல பின்னணிப் பாடகரான சோனு நிகம், ஹரிஹரன், கர்நாடக இசை மேதையான சுதாரகுநாதன், மற்றும் பலர் ஸ்ரீசத்யசாய்பாபாவின் மீது அலாதியான பிரியமும், நம்பிக்;கையும் வைத்திருக்கிறார்கள். ஸ்ரீசத்யசாய்பாபா எத்தiனையோ பக்தர்களுடைய வாழ்க்கைiயில் எத்தனையோ அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்தியிருக்கிறார். அவருடைய மறைவை பக்தர்களால் ஜீரணிக்க முடியவில்லை, அவர் மீண்டும் உயிர் பிழைக்க வேண்டுமென்று  பக்தர்களுடைய மனம் ஏங்கியபோதிலும், 28நாட்கள்  தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிற்பாடும் அவருடைய ஆன்மா உடலைவிட்டு பிரிந்தது, அவருடைய மரணம் உண்மைதான், மறுபடியும் அவர் திரும்பி வருவாரென்று பக்தர்களுடைய நம்பிக்கைதீபம் என்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வோம்.       

prasanna.madhavan90@yahoo.com

மேலும் தகவல்களுக்கு : http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba