அஞ்சலி: எம்.ஜி.சுரேஷ்!

எம்.ஜி.சுரேஷ்
எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அக்டோபர் 3 அன்று மறைந்த செய்தியினை இணையம் மூலம் அறிந்தேன். இவரது ‘பின் நவீனத்துவம்’ பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி மூலமே முதலில் இவருடனான அறிமுகம் ஏற்பட்டது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனிடமிருந்து பெற்று வாசித்திருந்தேன். இவரது ‘சிலந்தி’ நாவலும் வாசித்திருக்கின்றேன். இதே பாணியில் பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனும் துப்பறியும் நாவலொன்றினை எழுதியிருந்தது நினைவுக்கு வருகின்றது. தமிழில் பின் நவீனத்துவம் என்றால் மறக்க முடியாத பெயர்களிலொன்று எம்.ஜி.சுரேஷ். இவரது நூல்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை இவரது திடீர் மறைவு ஏற்படுத்தி விட்டது. இவரது மறைவால் துயருறும் அனைவர்தம் துயரத்திலும் நாமும் பங்குகொள்கின்றோம்.


இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு: https://ta.wikipedia.org/s/658w


‘பதாகை’யில் வெளியான ‘எதற்காக எழுதுகின்றேன்’ என்னும் கட்டுரைக்கான இணைப்பு: https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/