– பெப்ருவரி 3 அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். அவரது நினைவையொட்டி, அவர் பற்றி ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான முனைவர் துரை கண்டனின் ‘அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை’ மற்றும் முனைவர் கல்பனா சேக்கிழாரின் ‘சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா! ஆகிய கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். – ஆசிரியர், பதிவுகள். –
அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை
– முனைவர் துரை.மணிகண்டன் –
“அண்ணா அவர்கள் நமது நாட்டுக்குக் கிடைத்த ஒரு நிதி என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் தந்தை பெரியார் அஃது உண்மையும் கூட. அண்ணா தமிழகத்திற்கு சீர்திருத்த திறவுகோல் ஆவார். தாழந்து அடிமைபபட்டுச் சாதிகளால் சிக்குண்டு கிடந்த மக்களை ஒன்றிணைக்க புறப்பட்ட புரட்சியாளர்; ; இளைஞர்களின் எழுச்சி தீபம்; அரசியலையும், படைப்புகளையும் தன் இரு கண்களாகிக்கொண்டு வாழந்த வள்ளல்;;; இப்பேரும் புகழும் பெற்ற அண்ணாவின் படைப்புகள் பல. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம் வழக்காடு மன்றம் என இலக்கியப் பணியில் பன்முகத் தன்மை கெர்ணடவர். இவர் படைப்புகளான நாடகங்களில் கையாண்டுள்ள மொழி நடையைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
மொழி நடை
மொழி சொற்களால் ஆடைக் கட்டிக் கொள்கிறது. அவ் ஆடைகள் பலவாக இருக்கலாம். படைக்கும் படைப்பாளனை ஒட்டியே அஃது அமைகிறது. ஒரு கருத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்கு மொழி ஒரு பாலமாக இயங்குகிறது. “நடை என்பது அந்தந்த ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லதாகும். அவரை இனங்கண்டு கொள்ளும் வகையில் அவரவருக்கே உரியதாக இருக்கும் வெளி;ப்பாட்டின் மொழிப்பாங்கே அது இலக்கியத்தில் அதுவே மிகப் பெரிய சாதனையாகும் என்று மா.ராமலிங்கம் மொழிநடைக்கு விளக்கம் தருகிறார். (20 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.160) “அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல எழுத்தின் அழகு நடையில் வெளிப்பட வேண்டும் “ (இலக்கியக் கலை ப.145) என்று அ..ச. ஞானசம்பந்தன் நடையைப்பற்றி விளக்குகிறார் இவ்வாறு மொழிநடை இலக்கிய படைப்புகளையும் படைப்பாளனையும் இனங்கண்டு கொள்ள மொழி நடை தேவைப்படுகிறது.
அண்ணாவின் நாடகங்கள்
சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஐ;யம் (சந்திரமோகன்), வேலைக்காரி, ஒர்.இரவு, நீதி தேவன் மயக்கம், கண்ணீர்த் துளி என்பன அண்ணாவின் நாடகங்கள் ஆகும். இவைகளில் மக்கள் ஆண்டாண்டு காலமாக சிக்குண்டு கிடந்த மூடப் பழக்க வழக்கத்திலிருந்து வெளிக்கொணருகிறார் முதலாளிகளின் மூக்கையும் பணத்திமிர் பிடித்த பண்ணையாளர்களின் முகமூடிகளைiயும் தன் சொல்லாலும் வாக்காலும் மக்களுக்த் துகிலுரித்துக்காட்டுகிறார். சாமியார்களின் உல்லாச உறவையும், அவர்களின் கபட வேசத்தையும் வெளிப்படுத்தும் கருப்புத்தங்கம். ஆறம்பட வந்த மறவன் எனலாம்;. எனினும் நாடகங்களில் அண்ணா மொழி நடையயை நேர்த்தியான முறையில் கையாண்டுள்ளார்.; குறிப்பாக உணர்ச்சி நடை மேலோங்கி நிற்கிறது. அடுத்து உவமை நடை, அடுக்கு மொழி நடை, வினா நடை, போன்றவைகளினால் மொழிநடையைப் பயன்படுத்தியுள்ளார்.
உணர்ச்சி நடை
அண்ணாவின் படைப்புகள் அனைத்திலும் உணர்ச்சி மேலெழுந்து காணப்படுகிறது. நாடகங்களிலும் இது சற்று உயர்வாகவே இருப்பதை;க காணமுடிகிறது. ஒரு கருத்தை வலியுறுத்த இலகுவாகக் கூறினால் மக்களோ வாசகனோ ஏற்றுக் கொள்வது சற்று குறைவு அதையே உணர்ச்சியுடன் கூறினால் எழுதினால் மக்கள் அதனை உடனே ஏற்றுக் கொண்டுவிடுவார்கள் என்பது அண்ணாவிற்கு தெரிந்திருக்க வேண்டும்.
உவமை நடை
படைப்புகளில் கையாளப்படும் நடையில் உவமைநடை மிக முக்கியமானதாகும். கருத்தைத் தெளிவுப்பட கூறவும் விளங்க வைக்கவும் இந்த நடை தேவை. அண்ணா தனது
நாடகங்களில் மிகுதியாக உவனையைக் கையாண்டுள்ளார். “ஒர் இரவு” நாடகத்தில் சுசீலா என்ற பாத்திரத்தின் மூலம் தன் வீட்டிற்குத் திருடவந்தவனை என்னைக் காதலிப்பதாக கூறி நடி என்கிறாள். இதற்கு ஆசிரியர் தந்திருக்கும் உவமை “எனக்கொரு உபகாரம் செய்கிறாயா? களவாட வந்தவனை ஒரு கன்னி உபகாரம் செய் என்று கேட்பது படமெடுத்தாடும் நாடகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா?” (ஒர் இரவு ப.35) என்று உவமைக் கருத்தை விளக்க கையாண்டுள்ளார். இதைப் போன்றே ‘சந்திரமோகன’; நாகடத்திலும் சாதுவிடம் பேசும் ஆண்டி இந்த சமாதானம் அறிவுரைகள் இப்பொழுது
இருக்கும் சூழலில் ஒத்துவராது. சாதி, மதம் என இவர்களை எப்படி சந்திப்போம் என்று பாருங்கள் என்கிறான் “ பாம்பின் வாயிலே சிக்கிய தேரைக்கும் புலியின் பிடியிலே சிக்கிய மானுக்கும் போய்ச் செய்யும் இந்த போதனையை பொறுமையாம் பொறுமை பொறுத்ததெல்லாம் போதாதா? (சந்திரமோகன் ப.8)
இந்நாடகத்தில் கங்கு, ரங்கு பாத்திரங்கள் உரையாடலின் போது பல உவமைகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. “நீயே யோசித்துச் சொல் புத்தி தீட்சண்யம் இருக்க வேணுமடா ரங்கு சதுப்பு நிலத்திலே நடந்து செல்கிறவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அதுபோலத்தான் நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியவிட்டால் நமது பாடும் “(சந்திரமோகன் ப.62) என்கிறார். இதனைக் கேட்ட ரங்கு “ஆமாம் பழச்சாறும் பருக வேணும் பழமும் கெடக்கூடாது என்பது போல சிக்கலாக இருக்க ” (சந்திரமோகன் ப.62)
‘சந்திரமோகன்’ நாடகத்தில் வீர சிவாஐp பாhப்பணர்களின் வஞ்சக வலையில் வீழந்து விடுகின்றான். சிவாஐpயின் உற்ற தோழனான மோகன் எவ்வளவோ எடுத்துக் கூறுக்கின்றான். “மராட்டியமே மண்டியிடாதே!வீரமே வீழ்ச்சியுறாதே!மராட்டிய மாவீரர்களே மன்னன்சிவாஐpயை மாற்றான் முன் மண்டியிடச் செய்த கோழைகளானீர் கொடுமை, கொடுமை இது. அறிவுலகத்திலே அனைவரும் இதைக் கண்டித்தே பேசுவர் முடி நமது சிவாஐp மன்னனிடம் பிடி இந்த வேதம் ஒதியிடம்” (சந்திரமோகன் ப.112) என்று மராட்டிய மக்களைப் பார்த்து உண்மையை எடுத்துரைக்கும் உணர்ச்சிநடையைக் காணமுடிகிறது. மேலும் மோகன் காகபட்டர் என்பவரிடம் நீங்கள் நயவஞ்சகத்தால ;எங்கள் சிவாஐpயை மண்டியிட வைக்க முயற்சி செய்கிறீர்கள் அது மக்கள் மத்தியில்உண்மை ஒருநாள் தெரியும் என்பதை. “காகபட்டரே மண்டியிடும் மன்னர்கள் மட்டுமே மாநிலத்தில் உள்ளனர் என்று எண்ணாதீர். மக்கள் மன மயக்கம் வெகு விரைவிலே தெளியப் போகிறது. அப்போது உங்கள் அட்டகாசம் அடியோடு ஒழியும்”(சந்திரமோகன் ப.114) என்றுகூறுகிறார். மோகன்சிவாஐpயிடம எவ்வளவோ எடுத்துரைத்து ஒருவழியாக கபடக்காரர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார். விளைவு மீண்டும் மோகனைச் சந்தித்து
“அஞ்சா நெஞ்சு படைத்த நீ மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. அந்த ஆயுதத்தை வீசு, நாடு ழுழுவதும் வீசு, பட்டி தொட்டிகளெல்லாம் வீசு, மக்களை வீரர்களாக்கு”;. (சந்திரமோகன் ப.118) என்று உணர்ச்சி ததும்ப தன் கருத்துகளை முன்கூறுக்கின்றார்.காதல் Nஐhதி’ என்ற நாடகத்தில் பொன்னனும் தங்கவேலும் உரையாடும் பாகத்தில்அண்ணா உவமையைத் தெளிவாகக் கையாண்டுள்ளார். “ஊத்து கிடைக்காத இடத்திலே வெட்டி வெட்டி பார்த்தா என்ன பலன்காணமுடியும் அதைப்போல சுகுணாவுக்கும் நமக்கும் காதல் வளர்ந்து என்பிரயோசனம்”(காதல் Nஐhதி ப.170) என்று பாமர மக்களும் அறிந்து கொள்ளும் எளிமையானஉவமைகளைப் டத்துக்காட்டியுள்ளார்.
அடுக்கு மொழி நடை
மொழி நடையில் புதிய உத்தியைக் கையாண்டவர்கள் படைப்புலகில் வெற்றிப் பெற்றுள்ளனர். பாரதி, பாரதிதாசன,; மு.வ, புதுமைப்பித்தன், அப்தூல் ரகுமான் எனபட்டியல் நீலும் அந்தவகையில் அண்ணாவின் எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும்மிக முக்கியமான நடை, என்றால் அஃது அடுக்குமொழி நடை எனலாம். “இலக்கிய படைப்பாளியை இனங்கண்டுகொள்வதற்கு அவர்களது மொழி நடைபெரிதும் பயன்படுகிறதென்பதில் ஐயமில்லை” (நடையியல் ப.34)என்று nஐ. நீதிவானன் குறிப்பிடுவது இங்கு உற்று நோக்கத் தக்கது.‘வேலைக்காரி’ நாடகத்தில் பரமனும் மணியும் உரையாடுகின்றனர்.பரமனிடம் மணிகூறுவதுபோன்று“சட் கோழையைப் போல பேசாதே இப்பொழுது நீ ஏழையல்ல” ( வேலைக்காரி ப.38)என்ற அடுக்கு மொழியைக் கையாண்டுள்ளதைக் காணமுடிகிறது. இதே போன்று சுசிலா தனியாக இருக்கும் பொழுது அறையில் திருடன் புகுந்து விடுகின்றான். இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
“(நிதானமாக) எனக்கென்ன பயம்? இங்கே கள்ளன் கீழே காமுகன் உனக்கு உன் உடைமை வேண்டும் அவனோ என்னையே அபகரிக்க வந்திருக்கிறான். நீ கருந்தேள் கீழே கருநாகம் (ஒர்இரவு ப.35) என்று தன் இயலாமையைச் சுசீலா கள்ளனிடம் கூறும் அடுக்கு மொழியாகும் மேலும் காதலைப் பற்றி அண்ணா கூறும்போது “காதல் என்பது சூது-கவிகளின் கற்பனை மாளிகையில் தரப் படும் மது” (ஒர்இரவுப.40) என் அடுக்குமொழியில் விளக்கம் தருகிறார் காதல் எத்தகையது என்று கூறிய அண்ணா போர் வீரனுக்கும் சாந்திக்கும் நடக்கும் காதல் எத்தகையது என்பதனையும் கூறுகிறார். “நீயே சொல்லு!போர் வீரனுடைய வாழ்க்கை ஆபத்து நிறைந்தது.; பயங்கரமனாது. அவள். இந்து பூங்கொடி;; நீ புயல் காற்று அவள் மெழுகுநீ அனல்.”(சந்திரமோகன் ப.18;)என்று விவரிக்கிறாh.; மேலும் காகப்பட்டா பேசும் போது“துன்பமில்லாத இன்பம் மாசு இல்லாத மாணிக்கம் முள்ளில்லாத ரோஐh இந்த மகத்தான வித்தியாசத்தை தெரிந்து கொள்” (சந்திரமோகன் ப.56)என்று வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே சமமானது என்பதை தனது அடுக்குமொழி நடையில் தெளிவுப்படுத்துகிறார். பிராமணர்களி;ன் பிடியில் சிக்குண்ட சிவாஐpயையும் மராட்டிய மக்களையும் பார்த்து மோகன்விளித்துப் பேசுவது போல ஒரு அடுக்குமொழிநடையை “கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான,;வாருணாசரமத்திலே வீழ்ந்த வீரன்”(சந்திரமோகன் ப.82) என்று உரைப்பது போல படைத்துக்காட்டியுள்ளார்.
வினா நடை .
அண்ணாவின் நாடகங்களில் வினா நடையையும் அதிகமாகக் காணலாம் மூர்த்தி கதாப்பாத்திரத்தின் மூலம் சாமியர்களைக் கேட்கும் கேள்வியாக, “பாதி ராத்திரியேலே போகியாக காட்சியளிக்கும் பேடிப் பயலே! ஆசிரமமா இது? மோட்சசாம்ராஐ;யத்திற்குப் பயிற்சிக் கூடமா? பரமனின் பாதார விந்தத்துக்குப் பாதை காட்டும் சன்மார்க்க ஸ்தாபமனா? (வேலைக்காரி ப.68)என்று வினா நடையிலேயே கேட்டுள்ளார். அப்பாவிடம் மகள் சுசீலா கேட்பதாக
“அப்பா அவருடைய மிரட்டலுக்கு ஏன் பயப்படுகிறீர்? மாமாவைச் சமாதானப் படுத்துவது முடியாத காரியமா? ஏன் அவரிடம் அவ்வளவு பயப்படுகீறீர் என்ன செய்வது விடுவாரப்பா? (ஓர் இரவு ப.24) என்று வினாவுக்குமேல் வினாவாக கேட்கிறார். இதைப் போன்றே hகப்பட்டார்
குழப்பவாதியாகச் செயல்பட்டு வருகிறார். நாட்டில் நல்லது நடந்தால் நாம் வேலைக்கு என்ன செய்வோம்? அது தான்,“தர்மமா? அதர்மமா? பாவமா? புண்ணியமா? என்றெல்லாம் எண்ணிக் குழப்பம் அடையவேண்டாம்” (சந்திரமோகன் ப.106 )என்று நாம் கழகம் செய்தால்தான் எல்லாரும் நம்மை அனுகுவார்கள் ;என்று உரைக்கின்றார்
.
இவ்வாறாக அண்ணாவின் படைப்புகளில் அவருடைய மொழிநடையே அவரை முன்னிலைப்படுத்தியது என்பது உண்மையே. மொழிக்கு நடை எவ்வளவுமுக்கியம் என்பதை உணர்ந்து அந்தந்த இடத்திற்கு எந்தந்த நடையை கையால வேண்டும் என்றழுழுத்திறமைப் பெற்றவர்தான் அறிஞர் அண்ணா. இவரது நாடகங்களில் நாம் இது வரைக்கண்டது உணர்ச்சி, உவமை அடுக்குமொழி வினா, நடைகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார். என்பது நமக்குத் தௌ;ளத் தெளிவாகிறது. இவைகள் இல்லாமல் கலப்பு நடை, இயற்கைவருணைனை நடை,பழமொழி நடைகள் , வழக்கு நடை, போன்றவற்றையும் தம்மொழிநடைக்கு பயன் படுத்தியுள்ளார். ப.ஐPவானந்நம் கூறுவது போல “அண்ணாத்துரையை மாணவர்கள் விரும்பினார்கள். வாலிபர்கள் சூழ்ந்தனர். ஏனெனில் அவரின் சொல் வன்மையும்எழுத்து வன்மையும் புத்துணர்ச்சியைத் தந்தது என்பார். “ அதுபோல இன்றைய படைப்பாளர்களும் அண்ணா கூறிய மொழி நடை வழியில் சீர்திருத்த வாதிகளாகச்செயல் படவேண்டும்.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
1. மா. ராமலிங்கம், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு 1965
2. அ.ச. ஞானசம்பந்தன,; இலக்கிய கலை, கழக வெளியிடு
3. nஐ. நீதிவானன், நடையியல்
4. சிவாஐp கண்ட இந்துராஐpயம் (சந்திரமோகன்); சீதைப் பதிப்பகம் சென்னை
5. ஒர் இரவு சீதைப் பதிப்பகம சென்னை
6. வேலைக்காரி சீதைப் பதிப்பகம் சென்னை
7. காதல் Nஐhதி சீதைப் பதிப்பகம் சென்னை
8. மு.வா இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதமி வெளியிடு
mkduraimani@gmail.com
பதிவுகள், டிசம்பர் 2009 இதழ் 120 -மாத இதழ்
சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா!
– முனைவர் சே.கல்பனா –
சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா! நாமொழியால் நானில மக்களின் உள்ளத்துள் எழுச்சியை ஏற்படுத்தி,எண்ணத்துள் பகுத்தறிவு சிந்தனையைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பிகள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெறும் சி.என்.அண்ணாதுரையாவர். இவர் தம் நாமொழியால் தமிழ்நிலத்தை அசைத்துப் பார்த்தவர். பொதுமக்களிடம் மட்டுமின்றி வருங்கால இளைய சமுதாயத்தினரிடமும் பகுத்தறிவுச் சிந்தனையை வித்திட்ட பண்பாளர்.இவருடைய மேடைப் பொழிவினைக் கேட்பது திருவாடுதுறை இராஜரத்தினம் அவர்களின் நாதசுரத்தில் தோடியைக் கேட்பதை ஒக்கும் என்பர்.
நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாவின் பொழிவினைக் குறிப்பிடும் பொழுது ‘சிறந்த பேச்சாளர் பட்டியலின் முன்னணியில் டொமஸ் தெனியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது கிரேக்க நாடு; எட்மண்ட் பர்க்கைக் கொண்டு வந்து நிறுத்துகிறது இங்கிலாந்து;ராபட் கீரின்,இங்கர்சாலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது அமெரிக்கா;சிறந்த பேச்சாளர் வரிசையில் முதலிடத்தில் திராவிடம் நிலை நிறுத்துவதற்குரிய ஒரே ஒருவர் அறிஞர் அண்ணாதான்.இவரது சொற்பொழிவு சலசலவென்று ஓடும் சிற்றருவியின் பாங்கு போலவும் சொற்கள் நாணயச் சாலையில் அடிப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக விழும் நாணயங்கள் போலவும் ஒன்றோடு ஒன்று மோதுதல் இன்றி வெளிவரும்’என்பர். அண்ணாவினுடைய நாநேர்த்தியாலும் கருத்து தெளிவாலும் ஈர்க்கப்பட்டு,
‘ஓ!அந்த குரலில் என் ஆன்மாவின்
ஆழத்தைத் தொடும்
ஏதோ ஒன்று இருக்கிறது’(லாங்பெல்லோ)
எனத் தமிழ்ச் சமுதாயம் கட்டுண்டு கிடந்த,பொழிவுகளைக் கால வரிசைப்படி தொகுத்துப் பூம்புகார் பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 139 பொழிவுகள் இடம் பெற்றுள்ளன.
அண்ணாவின் தனித்தன்மை
அண்ணாவின் சொல்லும்,சொல்லை வெளிப்படுத்தும் உத்திகளும் ,சொற்பொழிவாற்றும் முறையும் தனித்தன்மையுடையதாக இருக்கும் என்பதை அவருடைய பொழிவுகளை அவதானிக்கும் பொழுது உணரலாம்.சிறு வயதிலிருந்தே எழுத்திலும் பேச்சிலும் பிறரைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார் என்பதை நாராண துரைக்கண்ணன் குறிப்பிடுகின்றார்.
‘1934-ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் ஏழு கிணறு வட்டத்தில் உள்ள ஒரு வீட்டு மேல் மாடியில் பாம்வேட் லிட்டரி பார்லிமெண்ட் சார்பில் ஒரு பொதுக்கூட்டம், அதில் கோபாலரத்தினம் பேசினார், செங்கல்வராயன் சொற்பொழிவாற்றினார், பாலசுப்பிரமணியம் இன்னும் யார்யார்ரெல்லாமோ பேசினார்கள். கடைசியாக வந்தவர் ஐயா ஆசாமி ஒருத்தர்.ஐந்தடி ஒரு அங்குலம் உயரம் இருக்கும்.சம்புஷ்டியான சரீரம்,அறிவுத் தீட்சணத்தை வெளிப்படுத்தும் அகன்ற நெற்றி,ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் பெரிய கண்கள்,ஆட்களைக் கவரும் எடுப்பான மூக்கு,மீசை சரியாக கூட அரும்பவில்லை தோழர்களே என்றார் கூட்டத்தைப் பார்த்து. அவ்வளவுதான் அவர் உள்ளத்திலிருந்து எழும் சந்தர்ப்ப உணர்ச்சிக்கேற்பச் சொற்கள் சரளமாக வெளிவந்து கொண்டிருந்தன. பொருள் பொதிந்த அவர் பேச்சில் தெளிவு இருந்த்து.அவர் எடுத்துக் கொண்ட கட்சியை நிலைநாட்டத் தர்க்க ரீதியாக பேசினார்.அவர் பேச்சில் இன்னொரு விசேஷம் இருநத்து,அதாவது பிறரை இமிடேட் பண்ணாமல் சொந்த பாணியிலே பேசியதுதான் அக்காலத்தில் மேடையில் பேச விரும்பும் இளைஞர்கள் அதிலும் கல்லுரி மாணவர்கள் மகாகனம் ஸ்ரீ நிவாஸ சாஸ்திரியார்,ஆற்காடு இராமசாமி முதலியார்,சத்திய மூர்த்தி முதலிய பிரபல பேச்சாளர்கள் பேசும் பொழுது செய்யும் அங்க சேஷ்டைகள்,நடையுடை பாவனைகள் இமிட்டேட் செய்பவர்கள் கூட இருந்தனர்.ஆனால் அந்த ஆள் அவ்வாறு செய்தவரல்ல.அவர் தான் நம் அண்ணா’.
மேடைப்பேச்சு
அண்ணா 1948-ஆம் ஆண்டு மேடைப்பேச்சு எவ்வாறு அமைய வேண்டும் என விளக்கி,மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்துள்ளார். மேடைப் பேச்சு மக்களுடைய சிக்கல்களை அறிந்து, அச்சிக்கலுக்குத் தீர்வு காணுவதாகவும், வாழ்க்கையை நெறிப்படுத்துவதாகவும் அமையவேண்டும் எனவும் எதிர்காலத்தில் மேடைப்பேச்சு ஒரு சிறந்த ஆயுதமாகவும் விளங்கும் எனக் கூறி இவ்வாய்தத்தை நல்ல வழியில் பயன்படுத்தினால் மக்களுக்கு நன்மை விளையுமெனச் சாற்றுகின்றார். மேலும் மேடைப் பேச்சுக்குத் தங்களைத் தயாரித்துக் கொள்வோர் மிக ஜாக்கிரதையாக ஊன்றி நடக்க வேண்டிய இடம் மேடை எனவும் எச்சரிக்கின்றார்.
‘மேடைப்பேச்சு காலச்சேபம் அல்ல, விவாதத்துக்குரிய உயிர்ப் பிரச்சனைகளைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுவது. இனிமை எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்யும் நாவணிபம் அல்ல.மேடைப்பேச்சு, வாய்பொத்தி,கைக்கட்டிக் கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமல்ல,அருள் வாக்கல்ல, பேசுபவர் கேட்பவர்களை விட மேதை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையுமல்ல. கேட்பவர்கள் இன்னப்பொருள் பற்றிப் பேசிடுக எனப் பணித்திட,பேசுபவன் அது போலவே நடத்தும் வசன சங்கீதமுமல்ல. வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட பிரச்சனைகளைப் பற்றி,மக்கள் குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது,மக்கள் மருண்டிருந்தால் மருச்சியை நீக்குவது.மக்கள் கவலையற்று இருந்தால் பிரச்சனையின் பொறுப்பை உணரச்செய்வது போன்ற காரியம். நீதியை நிலைநாட்ட,நேர்மையை வலியுறுத்த,நாட்டிற்கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளை மாய்க்க, கொடுமைகளைச் சாய்க்க,சிறுமைகளைச்-சீரழிவுகளைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை, அழகுற தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு’என எடுத்துரைக்கின்றார்.
சொல்லேருழவர்
ண்ணா பண்பட்ட சிறந்த சொற்களைக் கொண்டு மக்கள் மனங்களை உழுது பண்படுத்த முயன்ற சொல்லேருழவர்.இவருடைய மொழியாளுமையால் கவரப்பட்ட சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையவர்கள் ‘ஆயிரம் மேடை ஏறிய அறிஞர்.பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர்.கண்ணின்று கண்ணறச் சொல்லும் திண்ணியர்’எனப் பாராட்டுவர். திரு.வி.க அவர்களும் ,
‘அண்ணா துரையென்னும்
அண்ணல் தமிழ்நாட்டு
வண்ணான் அழுக்கெடுப்பில்
வாய்மொழியின் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செல்வராசு நாவாயின்
அற்புதம் சூழ்மாலுமி
என்றாடு’
எனப் போற்றுவர்.தமிழ்நாட்டின் அன்றைய நிலையை எண்ணி வருந்தி 1945 –இல் அண்ணாமலைப் பல்கலைக்கப் பட்டமளிப்பு விழா அரங்கில் துணைவேந்தர் எம்.இரத்தினசாமி அவர்களின் தலைமையில் புரச்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
‘ஏ தமிழ் நாடே!ஏ தாழ்ந்த தமிழ் நாடே! தேய்ந்த தமிழ் நாடே!தன்னை மறந்த தமிழ் நாடே!தன்மானமற்ற தமிழ்நாடே!கலையை உணராத தமிழ் நாடே!கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே!மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே!வீறு கொண்டெழு!உண்மைக் கவிகளைப் போற்று!உணர்ச்சுக் கவிகளைப் போற்று!புரச்சிக் கவிகளைப் போற்று!!புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!! எனத் தமிழக நிலையை எண்ணி வெகுண்டெழுகிறார். இப்பொழிவால் அன்று மாணவச் சமுதாயம் விழிப்படைந்து என்றால் மிகையில்லை.
இந்தி எதிர்ப்பு
1960 களில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டம்.அறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய தமிழ்மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும்,நம் நாடு நமக்கு கிடைத்தால் தான் நாம் தலை நிமிர்ந்து வாழமுடியுமென 26,27,29-6-1960,10,19-7-1960,1,7-8-1960 ஆகிய நாள்களில் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். இதன் விளைவாக தமிழ் மாணவச் சமுதாயமே வீறு கொண்டெழுந்து மொழிப்போர் தொடங்கினர்.இன்னுயிரை ஈந்தாவது தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்ற அவருடை சொல்லினையேற்று உயிர் தியாகம் ஈந்துள்ளனர்.அப்படி பாடுபட்டுப் பெற்ற தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் இன்றைய நிலை?மும்மொழி கொள்கை வேண்டும் எனக் கூறும் நிலை வருந்தத்தக்கது.
புத்தகச்சாலை
உலக சரித்திரத்தையே மாற்றிய நூல்களும் உண்டு.மாத்மா காந்தியடிகள் அடிகள் தம்முடைய வாழ்க்கை வரலாற்று நூலில் ஜான் ரஸ்கினின் கடையருக்கும் கடைத்தேற்றம்,ஹென்றி தோராவின் சிவில் ஒத்துழையாமை,டால்ஸ்டாயின் கடவுளின் ராஜ்யம் உங்களுக்கு இருக்கிறது என்ற நூல்கள் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டின எனவும், அகிம்சை வழியில் செல்ல தூண்டுகோலாக அமைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாவும் நுண்ணறிவு திறனுடையவராகவும் பண்பட்ட அறிவுடையவராகவும் திகழக்காரணமாக அமைந்தவை பண்பட்ட நூல்களே எனலாம். நூல்களின் மீது மிகுந்த இவருக்கிருந்தது காதல் என்பதை விட பித்து எனக் கூறலாம்.கன்னிமரா நூலகத்தில் அவர் கைபடாத நூல்களே இல்லை என்பர்.நூல்களைப் படித்தார் என்பதை விட நூல்களை உயிர் மூச்சாக சுவாசித்தார் வாழ்ந்தார்.உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகும் நேரத்தில் கூட படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க நேரம் கேட்டாராம்.இவ்வாறு நூல்களின் பயனையும் வல்லமையையும் உணர்ந்த பேரறிஞர் அண்ணா வீட்டிற்கோற் புத்தகச்சாலை இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி 1948-ஆம் ஆண்டு சொற்பொழிவாற்றுகிறார்.
‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை என்ற இலச்சியம்,நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு அடிப்படை.மலை கண்டு,நதி கண்டு,மாநிதி கண்டு அல்ல,ஒரு நாட்டை உலகம் மதிப்பது.அந்த நாட்டு மக்களின் மன வளத்தைக் கண்டே மாநிலம் மதிக்கும்.மனநலம் வளர வீட்டுற்கோற் புத்தகச்சாலை நிச்சயமாக வேண்டும்.வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம்,அலங்காரப் பொருள்களுக்கும்,போகப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி,புத்தகச்சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு,உடை,அடிப்படைத் தேவை.அந்த தேவையைப் பூர்த்தி செய்தானதும்,முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்.வீட்டுக்கோர் புத்தகச் சாலை அமைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும்.வீட்டிற்கோர் புத்தகச்சாலை தேவை. ஆனால் கேட்டினை நீக்கிடத் தக்க முறைகளைத் தரும் ஏடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.’என அவர் கொண்ட விருப்பம் நிறைவேறியதா?
ஒரு நாட்டின் வளம் என்பது, அந்நாட்டில் இருக்கும் பண்புள்ள மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் இருக்கும்.அறிவாற்றல் பெற்று,தன்னலம் கருதாது மக்களுக்கு உழைக்கும் பண்பாளர் தான் அந்நாட்டின் செல்வம் என்ற மார்டின் லூதரின் கூற்றுக்கேற்ப,பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த கல்விநலம் பெற்ற பண்பாளராகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல்,தம்முடைய அறிவாற்றலைக் கொண்டு,தம் இன மக்களின் அக இருளை விரட்டி, பகுத்தறிவு சிந்தனைப் பெற்று வாழ்க்கையில் மேன்மையடைய அயராது உழைத்தார். அறிஞர் அண்ணாவின் நாவில் பட்ட தமிழ்,தமிழ் மக்கள் அனைவர் நாவிலும் புதுத் தமிழாக,உலக மக்கள் அனைவர் உள்ளங்களிலும் புதுத் தமிழ் புகழ் மணமாகத் தெரித்தெழத் தொடங்கிற்று என்று வருங்காலத் தமிழ் வரலாறு கட்டாயம் கூறும் என்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் கருத்திற்கிணங்க அண்ணாவின் நாவில் பட்ட தமிழ்,தமிழ் மக்கள் உள்ளத்துள்ளும்,நாவிலும் நீங்கா நிற்கிறது.அவ்வாறு நிற்கும் அண்ணாரின் சொற்களும் எழுத்துக்களும் பதிவுப் பெட்டகமாக மட்டுமில்லாமல் இல்லாமல் வாழ்க்கைப் பயன்பாட்டுப் பெட்டகமாக மாறவேண்டும்.அப்பொழுதுதான்,
நீ மண்ணுக்குள் சென்றாலும்
வேராகத்தான் சென்றாய்
அதனால்தான்
எங்கள் கிளைகளில்
இன்னும் பூக்கள்
மலர்கின்றன.
என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அடிகள் மெய்மையடைந்து, எழுத்தாய், சொல்லாய், மட்டுமல்லாமல் பொருளாகவும் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.
kalpanasekkizhar@gmail.com
பதிவுகள், பெப்ருவரி 2009 இதழ் 110 -மாத இதழ்