– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள்
முன்னுரை
தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கக்கூடியவை ஆண்டாள்கோவில் கோபுரம் ஆகும். இது வரலாற்று புகழ்பெற்ற ஒரு தலமாக விளக்குகிறது. இத்தலம் மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் நடுவில் அமைந்துள்ளது. சென்னை செங்கோட்டை இருப்பாதையில் இவ்வூரில் ஒரு புகைவண்டி நிலையம் அமைந்துள்ளது. வியாபாரத்தலமான இராஐபாளையத்திற்கும் புகழ்பெற்ற சங்கரநாராயணர் வீற்றிற்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இன்றும் என்றும் சித்தர்கள் உலவிவரும் சித்தர்மலை எனப் பெயர்பெற்ற சதுரகிரி மலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது.
திருவில்லிபுத்தூர் உருவான வரலாறு
ஒரு சாபத்தின் காரணமாக வில்லி, புத்தன் என்ற இரு முனிவர்கள் வேடர்களாகப் பிறந்தனர். புத்தன் என்பவரை ஒரு நாள் ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. புத்தனைத் தேடியலைந்த வில்லி ஆல மரங்கள் நிறைந்த இக்காட்டில் திருமால் சிலையொன்றையும் அருகில் புதையலையும் கண்டெடுத்தான். தங்கப் புதையலைக் கொண்டு ஒரு கோவில் கட்டி அதில் திருமாலை பிரதிஷ;டை செய்தான். காட்டைத் திருத்தி நகரினை உண்டாக்கினான். அதுவே புத்தன் பெயரில் புதுவை என்றும். அவனது பெயரில் வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. மல்லி அறை அரசியார் ஆண்டு வந்த மல்லி நாடு இதுவாகும் இவ்வூரின் அருகில் ‘மல்லி’ என்ற சிற்றூர் உள்ளது. இதை மெய்ப்பிக்கிறது அங்கிருந்தபட பெருங்கோவிலே வடபத்ரசாயி திருக்கோவில் என்பர். வில்லி – கண்டெடுத்த திருமால் சிலை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.
முக்கிய கோவில்கள் (தரிசிக்கக்கூடியவை)
வடபத்ரசாயி திருக்கோவில் எனப்படும் வடபெருங்கோவிலும் அதனோடு சார்ந்த ஆண்டாள் திருக்கோவிலும் ஆகும்.
திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் திருக்கோவில்
வைத்தியநாத சுவாமி திருக்கோவில் ஆகியவை
திரு தல ஆல் இலையில் பள்ளி கொண்டவன் திருக்கோவில் எனப் பொருள்படும் 108 வைணவத் திருக்கோவில்களின் இதுவும் ஒன்று வில்லி என்பவனால் கட்டப்பட்ட திருக்கோவில் ஆகும். கோவில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டடுள்ளது. இக்கோபுரம் நம்மை வரவேற்கிறது. இக்கோபுரம் பெரியாழ்வாரால் மற்றும் மதுரை அரசர் வல்லபதேவனால் கட்டப்பட்டது என்பர். இதுவே தமிழக அரசின் சின்னமாகத் திகழ்கிறது கோவிலுக்குள் நுழைந்தால், கொடிக்கம்பம், பலிபீடம் இவற்றிற்கு இடப்பக்கத்தில் நம்மாழ்வார், இராமனுஜர் வலப்பக்கத்தில் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் உள்ளார். அடுத்து நேர் எதிரில் உள்ள லட்சுமி நரசிம்மரை வணங்கி இடது பக்கமாக சென்றால் இக்கோவில் அடித்தளம், மேல்தளம் என இருந்தளங்களாக அமைந்திருப்பதால், படிக்கட்டுகளில் ஏறி மேல் தளத்திற்குச் செல்லலாம் மகா மண்டபத்திலுள்ள கருடாழ்வாரைத் தரிசிக்கிறோம். கோபால விலாசம் எனப்படும் பகல்பத்து மண்டபத்pல் கேரள பாணில் மரவேலைப்பாடுகள் மிகுந்த சிற்பங்களைக் கண்டு அதிசயிக்கிறோம். இதில் இராமாயண காலத்து நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பக்கிரகத்தில் சயனக்கோலத்தில் பெருமாளைத் தரிசிக்கிறோம். ஆலமரத்தினடியில் ஸ்ரீதேவி பூமாதேவி இவர் பாதத்தில் இருபக்கமும் அமர்ந்திருப்பர் நாபியில் தாமரையின் மீது பிரம்மனும். திருமுடியிருகில் கருடனும், சேனைத் தலைவரும் வணங்கி நிற்க, உடல் முழுவதும் நீல வண்ணமும், உதடுகள் சிவப்பு நிறத்திலும், கண்கள் அன்றலர்ந்த தாமரை போல் மலர்ந்திருக்க, ஆதிசேடன் என்னும் படுக்கையில் பள்ளி கொண்ட பெருமாளை வணங்கி நிற்கிறோம். அவ்விடத்தை விட்டு அகல்வதற்கு மனமில்லாமல் கருவறைக்கு மூன்று வாசல்கள், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோவில் மற்றும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் போன்று அமைந்துள்ளது. பிரதான வாசல் வழியாகவே மட்டும் நாம் தரிசிக்கிறோம். திருமுடிக்கு அருகிலுள்ள வாசலும் மார்கழி நீராட்டு உற்சவத்தின் போது மட்டுமே திரிக்கப்படும் அவ்வேளையில் மூன்று வாசல்கள் வழியாகவும் அணு அணுவாக பெருமாளைத்தரிசிக்கலாம்.
அடுத்து அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் கோவிலில் நாம் தாமிர பீடத்தின் மீது உள்ள ஐம்பொன் சுதர்சன நரசிம்மர் சிலையில் முன்பக்கம் சுதர்சனரையும், பின் பக்கம் நரசிம்மரையும் தரிசிக்கிறோம். பின்பக்கமுள்ள நரசிம்மர் தமது நான்கு கைகளிலும் சுதர்சன சக்கரங்களை கையில் ஏந்தியுள்ளார்.
ஆண்டாள் அவதரித்த நந்தவனம்
பின்பு ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தைத் தரிசிக்கிறோம். இது பெருமாளுக்கு மாலை தொடுப்பதற்காக பெரியாழ்வார் அமைத்த நந்தவனம் ஆகும் இங்கு மலர்ந்துள்ள மலர்களைக் கொய்து மாலையாக்கி தினசரி பெருமாளுக்கு சூட்டி வந்தார். ஒரு நாள் துளசி செடிகளுக்கு நடுவில் ஒரு அழகிய பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். இந்நாள் கி.பி.716 ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் என்பர் சில ஆராய்ச்சியாளர்கள் அக்குழந்தையைக் கோதை என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தார். பெரியாழ்வார் தொடுத்து வைத்த, மாலையை ஆண்டாள் தான் அணிந்து அழகு பார்த்தாள். மாதவனுக்கு ஏற்ற மங்கை தானே என்று எண்ணி மயக்கம் கொண்டாள் பெருமாளுக்கு என்று தொடுத்து வைத்திருந்த மாலையை, ஆண்டாள் அணிந்து அழகு பார்ப்பதைக் கண்டுவிட்ட பெரியாழ்வார் மனம் கலங்கி அழுது அரற்றினார். அன்றிரவு அவர் கனவில் வந்த பெருமாள், கோதை சூட்டித்தந்த மாலையே தனக்கு உகந்தது என்று கூற ஆண்டாள் சூடிக்கொடித்த சுடர்க்கொடியானாள்
ஆண்டாள் திருக்கோவில் சிறப்பு
‘திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியோ
வண்புதுவை நகர்த் கோதை மலர்ப்பதங்கள் வாழியே’.
ஆண்டாள் திருக்கோவிலுக்குச் செல்லும் வழியில் நாச்சியார் திருமாளிகை, பந்தல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவற்றை அடுத்து கொடிமர மண்டபம் செல்கிறோம். கருடக்கொடி ஏற்றப்படும் கருடக்கம்பத்தைச் சுற்றிலும் அழகு ததும்பும் இராமன், இலக்குவன், கலைமகள், வீரபத்திரர், விஸ்வகர்மா, ஜலந்தரன், மோகினி போன்ற சிலைகளை தூண்களில் காணலாம், கொடிமரத்தின் வடபுறம் கண்ணாடி மாளிகை, குகன், அர்ச்சுணன் போன்ற சிலைகள் உள்ள தூண்களையும், தென்புறத்தில் கஜலட்சுமி சிலை, ஆஞ்சநேயர், பிட்டுக்கு மண் சுமந்த சிவனார் ஆகியோரைக் காணலாம். உள் சுற்றுப்பிரகாரத்தில் இலக்குற நாராயணன் 108, வைணத்தல ஓவியங்கள், இலக்குமி நாராயணர் சேனை முதல்வர் சன்னிதி ஆகியோரைத் தரிசிக்கலாம் தூவார பாலகர்கள் அனுமதி பெற்று மகா மண்டபத்திற்குள் நுழைகிறோம். அங்கு ஆண்டாள் அரங்கனுக்கான மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்த கண்ணாடித் கிணறு உள்ளது. அங்கிலிருந்து அர்த்த மண்டபத்தை நோக்கினால் செங்கோல் ஏந்திய ரெங்க மன்னாரையும் அவரது வலது பக்கத்தில் கிளியுடன் கூடிய ஆண்டாளையும் இடது பக்கத்தில் கைகூட்டிய நிலையில் கருடாழ்வாரையும் கருவறையில் நின்ற கோலத்தில் தரிசிக்கிறோம் கருவறையில் மேலேயுள்ள விமானம் திருப்பாவை விமானம் எனப்படும்.
திருப்பாவைச் சிறப்பு
இவை இலக்கிய பெருமையை பண்பாட்டில் உணர்த்தவல்லன.
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக்காலைகளில் அனைத்து வைணவக்கோயில்களிலும் இசைக்கபடுபதே இதன் பெரும் சிறப்பு தமிழில் புனையப் பெற்ற பாடல்களே ஆயனும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச்சந்ததி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப்பெற்ற தனிச்சிறப்பாகும். மோழி வேறுபாடின்றி வைகுந்த நாதனின் வழிப்பாட்ல் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை
திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம் கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைக் காணலாம் .ஓரே அடிகொண்டு உலகையே ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை
‘ ஓங்கி உலகளந்த உத்தமன்பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்று நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்த்
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலைப்பற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்’
வைணவத் தத்துவ இயற்பின்படி எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில் சரணாகதியாவதேயாகும். இதனைப் பக்தியாலும் மேற்கொள்ளலாம். அன்றி கிருஷணப்பிரேமை என்னும் காதலாலும் அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை. குன்றெடுத்த கோபாலன் ஒருவனே ஆண்மகன்; அவனது அடியார் அனைவரும் அவனது காதலில் கட்டுண்ட பெண்டிரே என்பதே கிருஷணப்பிரேமை. இதனை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது பின்வரும் திருப்பாவை குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல் மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா…
வைணவத்தாரோ வேற்று மதத்தினரோ, அன்றிஇறை நம்பிக்கை அற்றவரே ஆயினும், கோதையின் தீஞ்சுவைத் தமிழுக்கு அடிமையாகாது இருத்தல் அரிது. திருப்பாவைப்பாடல்கள் அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப்பண்பு பெறுகின்ற பேரானந்தம் அளிப்பவை இதற்கு எடுத்துக்காட்டாக, மழையைப் பற்றிய இப்பாடலைப் படிக்கையில் வானின்றும் மண்ணில் வீழும் மழையை நேராகவே காண்பது போன்ற ஒரு அனுபவம் பெறலாம்.
‘ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழஉள்புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடையப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் மெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்’
– ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி –
தமிழ் பண்பாட்டில் பக்தியால் வளர்த்தவர்கள் ஆழ்வார்கள் அவர்கள் ஸ்ரீமந் நாராயணனையும் அவரின் அவதாரங்களையும் அனுபவித்துப் பாடினார். அந்தப் பாடல்களில் சமூக நிலையும் இறைவன் மீதான பக்தியும் வெளிப்;பட்டது. ஆழ்வார்களின் பாடல்கள் தமிழ் நாகரிகத்தின் வெளிப்பாடு என்பவர். தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படும். களப்பிரர்களின் காலத்துக்குப் பிறகு மக்களிடையே தமிழயையும் ஒரு சேர வளர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மிக அதிகம் ஆகும். பன்னிரு ஆழ்வார்களின் ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார். எனவே அவருடைய பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆழ்வார்களின் பாடல்களை பாசுரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆண்டாளே நாச்சியார் என்றும் அழைப்பர் அந்த ஆண்டாளுடைய திருவாக்கு, இந்தத் திருமொழி திருவாகிய நாச்சியாரின் வாக்கே, நாச்சியார் திருமொழி எனப் பெயர் பெற்றது.
பெரியாழ்வார் இயற்றிய பாவை பாடிய நூல்கள்
இந்த விமானத்தில் பாடிய திருப்பாவையின் 30 பாடல்களை விளக்கும் அதை சிற்பங்கள் அமைந்துள்ளன். ஆண்டாள் பாடியருளிய ‘திருப்பாவை’ 30 பாசுரங்களைக் கொண்டது. இதற்கு ஆண்டாளே சூட்டிய பெயர் சங்கத்தமிழ்மாலை ஆண்டாளின் நாச்சியார் திருமொழி’ 143 பாசுரங்களைக் கொண்டது. வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ள கருத்துக்கள் ஆண்டாள் அம்மையின் பாசுரங்களில் நிறைந்துள்ளது ஆண்டாள் கோவிலில் வருடம் முழுவதும் பல திருவிழாக்கள் நடைபெற்றாலும், ஆடிப்புரத் தோரோட்டம் புரட்டாசி சனிவார உற்சவங்கள், மார்கழி என்னை காப்பு திருக்கல்யாண உற்சவம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
முடிவுரை
திருவில்லிபுத்தூர் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய இடமாக கருதப்படுகின்றது. ஆண்டாளின் பெருமையையும் பாவைபாடிய நூல்களும் பெரியாழ்வார் இயற்றிய பாசுரங்களும் உலகெங்கும் பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ளது. வரலாற்றில் பண்பாடு கலாச்சார அமைப்புகளும் வாழ்க்கை நெறிமுறைகளும் மக்களுக்கு எடுத்து இயம்பும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
*கட்டுரையாளர்: கா.கோமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீ ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி, குற்றாலம்.