ஆய்வு: அரிச்சந்திரன் யார்? (விழுப்புரம் மாவட்ட மக்கள் தொன்மக் கதையை இறப்பு நிகழ்வில் நிகழ்த்தும் பாடமாத்திச் சடங்குப் பாடலை முன்வைத்து)

- முனைவர் சு.குமார்  உதவிப் பேராசிரியர் தமிழ் உயராய்வுத் துறை  ஸ்ரீ வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி; உளுந்தூர்பேட்டை -ஒரு சமுதாயத்தின் அமைப்பு, ஒழுக்கமதிப்பு ஆகியவற்றின் அடித்தளமாய் அமைகின்ற முக்கியமான சமுதாய ஆற்றலே தொன்மம். இது நம்பிக்கைகளை ஒழுங்குபடுத்தித் தொகுத்தமைப்பதுடன் நடைமுறைச் செயற்பாட்டை வழிப்படுத்துவதாகவும் ஒழுகலாற்று விதிகளைப் பயிற்றுவிப்பதாகவும் அமைகின்றது. இது சடங்கு உள்ளிட்ட அனைத்து வாழ்வியற் கூறுகளிலும் ஊடுரு விநிற்கின்றது. (M.I.Steblin kamenskij,1982:30) என காமன்ஸ்கி கூறுவதைப் போன்று தொன்மம் இலக்கிய உருவாக்கத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது.

மாற்றத்தையே மாற்றியமைத்து வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்று வருபவன் மனிதன். இயற்கையை வென்றதிலும் மாற்றியமைத்துக் கொண்டதிலும் அவனது பங்களிப்பை அறிய மதநூல்கள், புராண, இதிகாசங்கள், காவியங்களாகிய மரபுச் செல்வங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றைக் கற்பது கடந்தகால மனிதனை அவன் வாழ்ந்த சு10ழலை அறிய உதவும் (டி.டி.கோசாம்பி,2005:பதிப்புக்குறிப்பு). எனக் குறிப்பிடப்படுவதைப் போல, தொன்மங்கள் வெறும் கற்பனையாக மட்டும் அல்லாமல், அவை சமுதாயம் சார்ந்தனவாய் வரலாறு சார்ந்தனவாய் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிப்பவனவாக, பண்பாட்டின் ஒரு கூறாக இருப்பனவானகவும் உள்ளன என்பதை மனதில் கொண்டே தொண்மங்கள் அணுகப்பட வேண்டியனவாக உள்ளன. அந்த வகையில் அரிச்சந்திரனின் நாட்டார் இறப்புப் பாடல்கள் வழி மெய்ப்பிக்க இப்பாடல் சான்றாக அமைந்து உள்ளன.

‘‘சாமிக் குருவே சாமிக் குருவே அடியேன் ஒரு விண்ணப்பம் சொல்கிறேன் திருமுடி, திருமுடி நோகாமல் தாழ்த்திக் கேலும். முந்திப் பிறந்தவன் நான்  முதல் பூணுல் அணிந்தவன் நான். சங்கும் பறையன் நான.; சாதிக்கெல்லாம் பெரிய ஜாம்பவன் நான்.  அறுநூல், பெறுநூல் அறுத்து எடுத்தவன் நான். ஆரியத் தெருவிலே தீவட்டிப் பெற்றவன் நான் என்றான் வீரவாகு.

இதைக் கேட்ட பிரம்மதேவர் ஓடிவந்து முந்திப் பிறந்தவன் முந்திப் பிறந்தவன் என்று சொல்கிறாயே தொந்நூற்றுக் காலமாய்ப் பழுத்தப் பழங்கலெல்லாம் உரிகட்டி உரிமேல் வைத்துப் பழம் உதிர, பழம் உதிர பறைச் சாற்றி வாராய் பிள்ளாய் என்று பிரம்ம தேவர் சொல்கிறார். இதைக் கேட்ட வீரவாகு ஓடிவந்து, அங்கால சாராயம், அபினி, கஞ்சா சாப்பிட்டுப் பறைச்சாற்றுகின்ற பொழுது, கனகாம்பரம் (காலத்தைக் கணிக்கும்) கோல் தவறி கீழே விழ. கம்மளத்துப் பெண்கள் ஓடிவந்து கனகாம்பரம் கோலை முந்தானியால் பிடித்து வலது கையால் ஒத்தியெடுத்து இடது கையால் வாங்கி வீரவாகுவிடம் கொடுக்கும் பொழுது கனகாம்பரம் கோல் வீரவாகு நெற்றியில் பட்டு உதிரம் சிந்துகின்றது. அப்பொழுது கோபம் தெரிவித்துப் பறைச்சாற்றினான். காய் உதிர, கனி உதிர, பூ உதிர, பிஞ்சு உதிர, ஆறு மாதத்துப் பிண்டமும் அளரி விழவென்று பறைச்சாற்றினான். இதைக் கேட்ட பிரம்மதேவர் ஓடிவந்து நான் ஒன்று சொன்னேன் நீ ஒன்று செய்தாய் ஏன் பிள்ளாய் என்றுகேட்டார். அதற்கு வீரவாகு, என்ன சொல்கிறார். கால்பணம், முழத்துண்டு, வாய்க்கி அரிசி, உரிமைச் சோறு இவை  எல்லாம் என் செலவுக்குப் பத்தவில்லை சாமியென்றான் வீரவாகு.

இதைக்கேட்ட பிரம்மதேவர் உலகம் தோன்றியதைப் பற்றிச் சொல்லும் பிள்ளாய் என்றுக் கேட்டார். அதற்கு வீரவாகு சுவாமி சொல்கிறார். கேலும்சுவாமி வடக்குத் திசை வசுதேவர் உடையது. தெற்குத் திசை தேவ இந்திரர் உடையது. மேற்குத் திசை காராய வெள்ளாயனது. நேர்க் கிழக்குத் திசை என் துறை என்றார் வீரவாகு.

இதைக்கேட்ட பிரம்மதேவர் உன் துறையில் பிறந்த தேவாதிகள் யாவை என்றுக் கேட்டார். அதற்கு வீரவாகு சொல்கிறேன் கேலும் சுவாமி. இந்திரன், சந்திரன், சு10ரியன், அக்னி, வாயு, மும்மூர்த்திகள், முப்பத்தி முக்கோடித் தேவர்கள் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிபத்திரிகள், கிண்ணர்கள், கெம்புடவர்கள், சித்திவித்தியாதரர்கள், அஷ்டத்திக்குப் பாலகர்கள் அனைவரும் பிறந்தார்கள் சுவாமி என்றான் வீரவாகு. இதைக் கண்டுச் சொன்னாயே உலகம் தோன்றி ஊர்த் தோன்றியதைப் பற்றிச் சொல்லும் பிள்ளாய் என்றார் பிரம்மதேவர்.

வீரவாகு சொல்கிறார், சொல்கிறேன் கேலும் சுவாமி, ஊருக்கு மேற்கே ஒர் ஆலம் விருச்சம் தோன்றியது. அங்கே ஒரு கன்னிப் புற்றுத் தோன்றியது. கன்னிப் புற்றில் ஒரு காராம் பசுத் தோன்றியது என்றார். அந்தக் காராம் பசு மாமிசம் எதற்கு உதவும் என்றுக் கேட்டார். அதற்கு வீரவாகு சொல்கிறார் ஆகாய வாணிக்கு ஒரு பங்கு. பூமாதேவிக்கு ஒரு பங்கு. சு10ரியபகவானுக்கு ஒரு பங்கு. அக்கினித் தேவருக்கு ஒரு பங்கு. வாயு தேவருக்கு ஒரு பங்கு. கெங்காபவணிக்கு ஒரு பங்கு. இப்படி ஏழுப் பங்கில் எனக்கும் ஒரு பங்கு சுவாமியென்றான் வீரவாகு.

அதனுடைய உதப்பு (சானம்) எதற்கு உதவும் என்று கேட்டார் பிரம்மதேவர். அதற்கு அதனுடைய உதப்பை உருண்டையாகப் பிடித்துச் சு10ரியப் படம் காட்டி அக்னிப்பிரகாசம் செய்து அரகரா என்பவருக்கு அணியும் திருநீராகும் என்றார். அதனுடைய கொம்பு எதற்கு உதவும் என்று கேட்டார் பிரம்மதேவர்.

ஆடும் பெண்கள். பாடும் பெண்கள் அவர்களுக்கௌ;லாம் சீப்புக் கூடாகும் சுவாமி என்றார். அதனுடைய கோரேஜனம் எதற்கு உதவும் என்றுக் கேட்டார். ஈஸ்வரனுக்கு காவாகும் சுவாமி என்றார். அதனுடைய உதிரம் எதற்கு ஆகும் என்றுக் கேட்டார். சுவாமி பாலாகும், தயிராகும், மோராகும், வெண்ணெய்யாகும், பல கறிவகைகளுக்கு நெய்யாகும் சுவாமியென்றார்.

அதனுடைய வால் எதற்கு ஆகும் என்றுக் கேட்டார். ஈஸ்வரனுக்கு வீசும் விஞ்சாமரமாகும் சுவாமி என்றார். அதனுடைய தோல் எதற்;காகும் என்று கேட்டார். வருவார் போவாருக்குக் கால் செறுப்பாகும். குதிரை மொகாராகும், கொட்டும் கோயில்களுக்கு பெரும் பெரு நகாராகும் (பெரியலேம்) சுவாமியென்றார்.

இதைகண்டுச் சொன்னாயே! புhவப்புண்ணியத்தைச் சொல்லும் பிள்ளாய் என்றுக் கேட்டார். பாவத்தைச் சொல்கிறேன் கேலும் சுவாமி நன்றி மறந்தவன், பொய்ச்சாட்சி சொன்னவன், அன்னமிடாதவன், நீரில் அம்பலமாய் விழுந்தவன், அங்காடிக் கூடையை அதற விட்டவன், பங்காளிக் குடியைப் பார்த்துக் கெடுத்தவன், ஒருதாரம் இருக்க பிறர்தாரம் இச்சயத்தவன், கன்னிக்கழியாத பிள்ளையைக் கற்பழித்தவன், பிராமணப் பெண்களை இச்சயத்தவன் இவையெல்லாம்  செய்தவர்களைக் குண்டுக்கட்டாகக் கட்டி, நடுவ{ட்டில் சாத்தி, வெள்ளிப் பிறம்பால் அடித்து, அட்டக் குழி, அரணக் குழி, பாம்பு குழி, பல்லிக் குழி இப்படி ஏழாம் நரகத்திலும் கீழாம் நரகம் போய்ச்சேர்வான் சுவாமியென்றான்.

பாவத்தைச் சொன்னாயே! புண்ணியத்தைச் சொல்லும் பிள்ளாய் என்று கேட்டார். புண்ணியத்தைச் சொல்கிறேன் கேலும் சுவாமி, அன்னதானம், பூதானம் இட்டவர். படுக்க இடம் விட்டவர். தண்நீர் பந்தல் வைத்தவர். வஸ்திரதானம், கோ தானம், கன்னிகா தானம் இட்டவர்களுக்கு நந்தவனத்திலிருந்து பூ ரதம் வரும். நட்டுமுட்டு  நாடகசாலை, தாளம், தம்பூர், வீணை சொலிக்க நான்காம் பதவி சேர்வார் சுவாமி என்றார் வீரவாகு.

அதற்கு பிரம்மதேவர் சொல்லுகிறார் வீரவாகுச் சொன்னச் சொல்லு உண்மை. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திறக்க மூவாயிரம் பொன். மூட மூவாயிரம் பொன் ஆக ஆறாயிரம் பொன் கொடுத்து அடியேன் செப்பட்டை எடுத்து வாசித்தால் எல்லாம் தெரியவரும். ஆணையிட்டால் தோஷம் இல்லை காளிகா தேவி கதவைத்திற. அரிச்சந்திர மகாராசனே காடுத்தெற. திருப்புங்கள் மின்னும் பின்னும்’’. (தலை காட்டை பார்த்தவாறு).

விளக்கவுரை:
முந்திப் பிறந்வன் முதல் பூணுல் அணிந்தவன், சங்குப் பறையன், சாதிக்கெல்லாம் பெரிய ஜாம்புவன், அறுநூல் அறிவார்ந்த பல நூல்களையும் பெறுநூல் பெரிய நீதி நூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் கற்றுணர்ந்தவன் நான். ஆனால், ஆரியர்களால் வஞ்சிக்கப்பட்டு அடிமையாகி அவர்களிடத்தில் தீவட்டிப் பெற்று அவர்களுக்கு வழிகாட்டியாக முன்செல்லக்கூடிய நிலையில் இருப்பதைப் பற்றிக் கூறுகின்ற தொடராகப் பார்க்க முடிகிறது.

முந்திப் பிறந்தவன் என்று சொல்லிய வீரவாகுவிடம், பிரம்மதேவன் சொல்கிறார் தொந்நூற்றுக் காலமாய் பழுத்தப் பழங்களெல்லாம் உரிக்கட்டி உரிமேல்வைத்து பழம் உதிர, பழம் உதிர என்று சொன்னார். அதனை உள்வாங்கிக் கொண்டு, காலத்தைக் கனிக்கக் கூடிய வீரவாகு அங்கால சாராயம், அபினி, கஞ்சா சாப்பிட்டு, பறை சாற்ற, கனகாம்பரம் (காலத்தைக் கணக்கிடும்) கோலை எடுத்துப் பறைசாற்றினான். அப்பொழுது காலத்தை அறிந்து, காய் உதிர, கனி உதிர, பூ உதிர, பிஞ்சு உதிர, ஆறுமாதத்துப் பிண்டமும் அளறி விழவென்று பறைசாற்றினான். இவை இயற்கையின் விளைவு. அனைவருக்குமான ஒன்றாகும்.

இதைக்கேட்ட பிரம்மதேவர் ஓடிவந்து உலகம் தோன்றியதைச் சொல்லும் என்றார். அதற்கு வீரவாகு சொல்கிறார். வடக்குதிசை வசுதேவர், தெற்குத் திசை தேவேஇந்திரர், மேற்குத் திசை காராயவெள்ளாயன், கிழக்குத் திசை என் திசை என்றார். ஊர்த் தோற்றம் பற்றிச் சொல்லும் பொழுது ஆலம் விருச்சம், அதன்கீழ் ஒரு கன்னிப் புற்று, அதன் அருகில் ஒரு காராம் பசு தோன்றியது என்றார் வீரவாகு. அதற்கு பிரம்மதேவர் சொல்கிறார், காராம்பசு மாமிசம் எதற்கு உதவும் என்று கேட்கும் பொழுது ஆகாயவாணிக்கு ஒரு பங்கு, பூமாதேவிக்கு ஒரு பங்கு, சு10ரியன், அக்னி, வாயு, கெங்காபவணி (தண்ணீர்) இப்படி ஏழு பங்கில் எனக்கும் ஒரு பங்கு என்றான் வீரவாகு. இப்படி ஏழில் ஆறு பங்கு மாட்டு இறைச்சியை பிராமணர்கள் சாப்பிட்டுள்ளனர் என்பதும், ஒரு பங்கு மாட்டு இறச்சி மட்டுமே பறையர்கள் உண்டனர் என்ற செய்தி புலனாகிறது.

ஆரியர்களின் செல்வமெல்லாம் குதிரைகளும், பசுக்களுந்தான். பிராமனர்கள் பசுவின் மாமிசத்தை மிகுதியாகச் சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாகத் தொன்மக் கதை விளங்குகிறது. அதனை ஆதிதமிழர்களையே அரிச்சந்திரன் கதையின் மூலமாக விளங்கவைத்துள்ளனர்.

இதற்குச் சான்றுபகிரும் வாயிலாக ஆதி சங்கரர் தன் விரிவுரையில் ‘மாமிசமும் வயது வந்த எருது அல்லது அதைவிட அதிக வயதுள்ள எருதுவின் மாமிசமாக இருக்க வேண்டுமென்கிறார’;. பிரதானமாக இறைச்சி சாப்பிடும் ஆரியர்கள் பசு, குதிரை, ஆடு, செம்மறியாட்டு இறைச்சியைச் சாப்பிட்டு வந்தனர்.   ஆரியர்களுக்கும் அவர் தம் ரிஷிகளுக்கும் போலவே வசிஷட்ரின் பூஜைக்குரிய தேவனும் இந்திரந்தான்! அவனுக்குப் பின்னர் மித்திரன், சூரியன், அக்னி, விசுவதேவன் வருணன், அஸ்வித்வய போன்ற கடவுள்களுக்குப் பசுவின் இறச்சியை யாகத்திலும், வேள்வியிலும் போட்டுச் சுட்டுக்கொடுத்ததைப் பற்றி ரிக்வேதத்தில் மிகுதியாகக் காணக்கிடக்கிறது.

கி.மு.800 வாக்கில் மாமிசம் ஆரியர்களின் முக்கிய உணவாகவே இருந்தது. புலாலைக்கொண்டு மந்திரமாயங்களும் புழக்கத்தில் இருந்தன. ‘தன்மகன் புலவனாகவும் புகழ்பெற்றவனாகவும் நல்ல பேச்சாளனாகவும, சபைகளிலே திறமையுள்ளவனாகவும் எல்லா வேதங்களையும் படித்தவனாகவும் முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்கவேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி (ஊர் காளை) எருது அல்லது எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும்’ என்று பிரகதாரண்யகம் (6-4-18) கூறுகிறது. (ராகுல சாங்கிருத்தியாயன். 2017:45).

அதனுடைய உதப்பு (சாணம்) திருநீராகும். கொம்பு சீப்பாகும், கோரேஜனம் (மாட்டின் வயிற்றில் இருக்கும் பித்தப் பை. கசப்புத்தன்மையுடையது, மருத்துவக் குணம்முடையது) ஈஸ்வரனுக்கு உணவாகும். அதன் இரத்தம் பால், தயிர், வெண்ணெய், பலகறிவகைகளுக்கு நெய்யாகும் வால் ஈஸ்வரனுக்கு வீசும் விஞ்சாமரமாகும். தோல் வருவார் போவாருக்குக் கால் செறுப்பாகும், குதிரை மொகாராகும், கோயில்களுக்கு பெரும் பெருநகாராகும் என்று சொல்லும் பொழுது மாட்டின் உறுப்புகள் அத்தனையும் மனிதச் சமூகங்களுக்கு, குறிப்பாக பிராமணர்களுக்குப் பயன்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது.

புhவப்புண்ணியத்தைக் கேட்கும் பொழுது பாவம் செய்தவர்கள் ஏழாம் நரகத்திலும் கீழாம் நரகம் போய்ச் சேர்வார்கள். புண்ணியம் செய்தவர்கள் பூ ரதத்தில் நான்காம் பதவி சொற்கத்திற்குப் போய்ச்சேர்வார்கள் என்பது, பிராமணர்கள் மக்களை ஏமாற்றி சாப்பிட்டதை வெளிப்படுத்துகிறது.

தொகுப்புரை.
திராவிடர்கள் பண்பாட்டுப் படிநிலையில் பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளனர். விலங்காண்டி நிலை, காட்டாண்டி நிலை, நாகரிக நிலை அதாவது வேட்டையாடி உணவு சேகரித்தல், எளிமையான தோட்டப் பயிரிடுதல், மேம்பட்ட தோட்டப் பயிரிடுதல், வேளாண்மை, தொழில்மயப்பட்ட நிலை என்பதாகும். திராவிடர்கள் நகர நாகிரிக நிலையை அடைந்திருந்ததோடு, வேளாண்மை நாகரிகத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

ஆரியர்களின் வருகைக்கு முன்னர் தமிழ்ச்சமூகம் ‘குடி’ முறையிலான சமூகமாக இருந்தது என்பதை அறிவோம். ஓவ்வொரு திணையிலும் வாழ்ந்த சமூகத்தார் ‘குடி’ என்றே அடையாளம் பெற்றிருந்தனர்.

மொகஞ்சோதாரோ, ஹாரப்பா, (சிந்து) நாகரிகத்தின் இறுதிச் சிறப்புக் காலம் கி;மு 2500 ஆம் ஆண்டாகக் கருதப்படுகிறது. அதற்கு ஒராயிரம் வருடங்களுக்குப் பின்னர் சிந்துப் பிரதேசத்தில் ஆரியர்கள் பிரவேசித்தார்கள் அதற்குக் குறைந்தது முந்நூறு வருடங்களுக்குப் பின்னர் (கி.மு 1200) பரத்வாஜர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகிய ரிஷிகள் தம் ‘ரிசா’ க்களை (செய்யுட்களை) இயற்றினார்கள். ஆரியர்களுக்கும் பழைய சிந்து வாசிகளுக்கும் இடையே நடந்த போர்களைப் பற்றி ரிக்வேதத்தில் தேவாசுர யுத்தங்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன என்று ராகுல சாங்கிருத்தியாயன். 2017:7 குறிப்பிடுகிறார்.

ஆரியர்களை முதன் முதலில் எதிர்த்து நின்றவர்கள் சிந்து இனமக்கள் ஆவர். . ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு தமிழகம் வந்தனர். வந்த ஆரியர்களை இங்குள்ள ஆதித் தமிழர்கள், அரசர்கள், பூர்வ பௌத்தர்கள் விரட்டி அடித்தனர். அப்படி விரட்டும்பொழுது ஆரியர்கள் இந்திரன், சூரியன், வாயு, சோமன் (சந்திரன்), அக்னி போன்றவர்களை அழைத்து அவர்களுக்காக யாகம், வேள்வி வளர்த்து அந்த வேள்வியில்; பசுவின் இறச்சியைப் போட்டு, சுட்டக் கறியையும், சோமபானங்களையும் நீங்கள் உண்ணுங்கள். உண்ணப்பின் எங்களுடைய தசுக்களை (எதிரிகளை) அழித்து எங்களை காப்பாற்றும் என்று இந்திரனிடம் முறையிட்டு அதன் வழிக் காப்பாற்றப் பட்டார்கள் என்று ரிக்வேதம் கூறுகிறது. இதன் வாயிலாக ஆரியர்கள் பசுக்களின் இறைச்ச்pயை அவர்களின் கடவுள்களுக்குப் பெறுவாரியாகக் கொடுத்து அதன்வழி; அவர்களும் மிகுதியாக இடைவிடாமல் சாப்பிட்டுள்ளனர் என்பது புலனாகிறது.

தொல் சமூகத்தில் பல இனக்குழுக்கள், பல சமஸ்தானங்கள், முடியாட்சி முறை இருந்தது. அவை சீறுர்மன்னர், முதுகுடிமன்னர், குறுநிலமன்னர் என்று பல சமஸ்தானங்களும் இருந்தன. பின்னர் வேந்தர் ஆட்சிமுறை இருந்த காலகட்டத்தில்தான் ஆரியர்கள் தமிழகத்திற்குள் வருகைபுரிந்துள்ளனர்.

இங்குள்ள  அரசர்கள் சிலர் ஆதரவும் கொடுத்துள்ளனர். அப்படி ஆதரவு கொடுத்த அரசரிடம் தங்கள் பிரமத்தின் பிள்ளைகள். நாங்கள் பேசும் மொழி கடவுளின் மொழியாகும். நாங்கள் வேள்வி செய்வதன் மூலம் உங்களுடைய அரசைப் பெருக்கிக்கொள்ள முடியுமென்று அரசர்களையும், மக்களையும் தன்வசப்படுத்த பிராமணர்கள் கட்டுக்கதைகளைப் பல  உருவாக்கினார்கள். சமஸ்கிருதம் வேதமொழி, கடவுளின் மொழி, இந்த மொழிகளைக் கூறினால், கடவுள் வேண்டியதை கொடுப்பார்றென்று பல கட்டுக்கதைகளை உருவாக்கினார்கள். ஆரியர்கள் கட்டுக்கதைகளை விவரிக்க  அரசர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆரியர்களை எதிர்த்தவர்களை ‘சூத்திரன’; என்றும் ‘தாசன்’ (அடிமை) என்றும் அழைத்தனர்.  முதலில் எதிர்த்த அரசர்கள் பின் ஆரியர்களின் பகைவர்களாக மாறினர். பின்னர் அவர்கள் ஆரியர்களின் ஆளுகைக்கு உட்பட்டவர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கப்பட்டனர். அப்படி அடிமைகளாக மாற்றப்பட்டவர்கள்தான் சிவன், வீரபாகு மன்னன், மகாபலி சக்கரவத்தி, அரிச்சந்திரன் போன்றவர்கள் ஆவர்.

ஆரியர்களின் கட்டுக்கதைகள் வாயிலாக அரசர்களையும் மக்களையும் நம்பவைத்துள்ளனர். அரசர்கள் பிராமணர்கள் கூறிய கதைகளுக்கு மயங்கி, பிராமனர்களுக்கு நிலங்களை  தானமாக வழங்கினர். அப்படி வழங்கப்பட்ட நிலங்களுக்கு ‘பிரமதேயம்’ முறை, சதிர்வேதி மங்களம் எனப் பெயர் பெற்றது. கோயில்களுக்கு அளிக்கப்பட்ட தானத்துக்குத் தேவபோகம் அல்லது தேவதானம் எனப் பெயர்வழங்கிற்று. பின்நாட்களில் விரட்டியடித்த அரசர்களையே ஆரியர்கள் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டனர்.

இவர்கள்தான் தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள் என்றெல்லாம் சொல்லி, பல்வேறு புராணக் கட்டுக்கதைகளைப் பரப்பி, தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்பதாகவும், தங்களது பிறப்பே புனிதமானது என்றும் திரித்து. ஆதித்திராவிடர்களைக் கேவலத்திலும் கேவலமாய் நடத்தி வந்துள்ளது உண்மையாகும். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் அரிச்சந்திரன் கதையாகும்.

பௌத்தத்தில் இறைக்கோட்பாடே இல்லை என்பதால், அது அத்தகையை வரையறைகளுக்குட்படாத ஒன்றாகிறது. அதாவது, பௌத்தம் என்பது கடவுள், உருவம், அருவம், அருவுருவம், வழிபாடு, வழிபாட்டுத்தலம், மந்திரம், சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் போன்ற நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு நிறுவனம் இல்லை. அத்துடன், கௌதமபுத்தர் இயேசுபிரானைப் போல ஆண்டவரோ, நபிகள் நாயகத்தைப் போல இறைத்தூதரோ அல்ல. அவர் மாயைகளில்லா மானுடப் பொதுமறை வழங்கிய ஒரு மாமனிதர், எனவே, அவரது போதனைகளான பௌத்தம் என்பது ஒரு மதம் அல்ல: சமத்துவக் கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு சங்கம்.

பௌத்த நெறியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது ஆதித் தமிழர்களின் கடமையாக இருந்த ஒன்று. புத்தருடைய காலகட்டத்தில் பிராமணர்கள் இடைவிடாமல் மாடுகளை அடித்து இறைச்சியை உண்டுவந்தனர். இந்தக் காலகட்டத்தில் புகுத்தப்பட்ட ஒன்று தான் இந்தத் தொன்மக் கதையாகும். இந்தக் கதையில் வருகின்ற பசு மாட்டின் இறச்சியை ஆரியர்களின் தெய்வங்களான இந்திரன், சோமன், வாயு, அக்னி, கங்கை போன்ற தெய்வங்களுக்குப் பிரித்துக் கொடுத்து ஆரியர்கள் மிகுதியாகச் சாப்பிட்டதைத் தொன்மக் கதையின் வாயிலாகத் தெரியவருகிறது. உழைக்கும் மக்கள் விவசாய வேலைக்குப் போக மீதம்முள்ள மாட்டின் இறைச்சியை உண்டுவந்தனர். அவற்றைப் பார்த்த புத்தர் விவசாயத்திற்குப் பயன்படுத்தகூட மாடு இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சி  மாடுகளைப் பாதுகாப்பதற்கு ஒரு மாபெரும் புறட்சியை ஏற்படுத்தினார். அவைதான் புலால் உண்ணாமையாகும். அதன் வழி வெற்றியையும் கண்டார். இந்தக் காலகட்டத்தில் தான் பிராமணர்கள் மாட்டுக்கறி உண்ணுவதை முற்றிலுமாகக் கைவிட்டு சைவ உணவுமுறைக்கு மாறினார்கள். பிராமணர்கள் மாட்டுக்கறி உண்ணுவதைத் தியாகம் செய்தார்கள் என்று அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.  
பௌத்தர்களுடைய கொள்கை, கோட்பாடுகளை ஆரியர்கள் அவர்களுக்கான  ஒன்றாக மாற்றி, அந்த மக்களையே அதற்கு ஆயதமாகப் பயன்படுத்தி உள்ளனர். இந்துமதக் கோட்பாடுகலை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்பதை ஆதித் திராவிடர்களை வைத்தே பரப்புரை செய்துள்ளனர். சோரக்;கம் இருப்பதாகவும் நரகம் இருப்பதாகவும் பாவனைச் செய்து மக்களிடத்தில் நம்பவைத்து இருப்பது அம்பலப்படுகிறது.

பிராமணர்கள் அரசர்களைக் கையில்வைத்துக்கொண்டு தனக்குத் தேவையானவற்றை அரசர்களிடமிருந்துப் பெற்றுக்கொண்டனர். நிலங்களை ஆரியர்களுக்குத் தானமாகக் கொடுப்பது, கோ தானம்மென்று அரசர்களிடமிருந்துப் பெற்றுக்கொண்டனர். பின் அரசர்களையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பல தானந்தர்மங்களைச் செய்வதின் வாயிலாக, நீங்கள் மோட்சமென்று சொல்லுகின்ற சொரக்;கத்திற்குச் செல்விர்கள் என்று  கட்டுக்கதைகள் பல உருவாக்கினார்கள். அந்தக் கட்டுக்கதைகளை இந்தியாமுழுவதிலும் பரப்பவதற்கு அரிச்சந்திரன் கதைகளைப் போல் பல கட்டுக் கதைகளை உருவாக்கி பரப்புரை செய்துள்ளனர்.

அதன்மூலம் அரசர்களையும் மக்களையும் நம்பவைத்துள்ளனர். பின்னாளில் அரசர்களையே தன் அடிமைகளாக மாற்றியுள்ளனர். அதற்குச் சான்றாக வீரவாகு மன்னனைக் கூறலாம். வீரவாகு மன்னனை வைத்தே அடிமைத் தொழிலையும் செய்யவைத்தனர். ஆட்சி அதிகாரங்களும் பொன் பொருட்களையும் வைத்திருந்த வீரவாகு பின்னாலில் அடிமைத் தொழில் செய்யும் புலையனாக மாற்றப்பட்டுள்ளான்.

பௌத்தர்கள் கடைப்பிடித்த புலால் உண்ணாமை, பிறர்மனை விரும்பாமை, ஆசையே துன்;பத்திற்குக் காரணம், உயிர்க்கொலை கூடாது. ஒழுக்கநெறி கடைப்பிடித்தல் போன்ற கூறுகளை பௌத்தர்கள் மக்களிடத்தில் கொண்டுச்சேர்க்க வேண்டுமென்பதில் முழு மூச்சாக இருந்தனர். ஆனால், அதனையே மாற்;றி ஆரியர்கள் இந்துமதக் கோட்பாடுகளாக உருவாக்கி அதனை மக்களிடத்தில் கொண்டுசேர்க்க, புலையன் தொழில் செய்பவரைப் பயன்படுத்தி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்துமதக் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் அரிச்சந்திரன் கோயிலை உருவாக்கினர். அந்த அரிச்சந்திரன் கோயில்களில்  இந்தக் கதைப்பாடலைப் பாடுவதின் வழி மக்கள் மனதில் இந்து மதக் கோட்பாட்டை பதியவைக்க முடியும் என்று நம்பினர். அதில் வெற்றியும் அடைந்தனர்.  பிராமணர்களுக்கு பொன், பொருள், நிலம் கொடுப்பதன் மூலம் புண்ணியம் கிட்டும். அப்படித் தானம் செய்கிறவர்வள் மோட்சம் போய் சேர்வார்களென்று நம்பவைத்தனர். நாம் செய்கின்ற செயல்கள் மூலமாக பாவப் புண்ணியம் அடைய முடியும் என்று ஒரு கட்டுக்கதையை உருவாக்கி உள்ளனர்.

இந்தக் கதைப்பாடலில் முந்திப் பிறந்தவன் முதல் பூணூல் அணிந்தவன் சங்கும் பறையன் ஜாதிக்களுக்கெல்லாம் பெரிய ஜாம்பாவானென்பது, ஆதித் தமிழர்களையும் பூர்வக் குடிகளையும் குறிக்கும். இவர்கள் அறிவில் சிறந்தவர்களாக, சித்து, வித்துச் செயல்களும். கல்வி ஞானங்களும், அறிவார்ந்த செயல்கள் செய்வதிலும் வள்ளவர்களாக விளங்கியவர்கள் ஆதித் தமிழர்கள், பூர்வக் குடிகள் என்பதைப் பறைச்சாற்றுகிறது.

இதற்குச் சான்று பகரும் விதமாகப் பக்தவத்சல பாரதி தன்னுடைய பண்பாட்டு உரையாடலில் பீகார் தூரி சாதியினர் கூறும் தொன்மம். மன்னன் பல்லக்கில் வெகுதொலைவான பகுதிகளுக்கு மந்திரி, அலுவலர்களுடன் துக்கி செல்லும் பொழுது பளு தட்டாமல் இருப்பதற்கு மந்திர உச்சாடனங்கள் சொல்லிச் செல்கையில் பல்லக்கு பளுதெரியாமல் இருக்கும். சு10ப்ப பகத் இயற்கை உபாதை கழிக்க செல்லும் பொழுது பல்லக்கு மிகபளுவாக இருந்தது. தூக்கிச் சென்றவர்களால் நடக்க முடியவில்லை சு10ப்ப பகத்தை அழைத்தனர். அப்பொழுது தன்னுடைய பூணூலை செடியின்மேல் வைத்துவிட்டு வந்ததனால் அவர் கூறும் மந்திரம் பலிக்கால் பொய்விடுகிறது. பின்னால் வந்த பிராமணன் அந்தப் பூணுலைத் தெரியாமல் மாட்டிக் கொண்டு வழிநெடுக சூப்ப பகத் சொன்ன மந்திரங்களைச் சொல்லத் தொடங்கியவுடன் பல்லக்கின் பளு குறைந்தது.  மன்னன் ஆச்சரியத்துடன் இந்த ஆற்றல் உனக்கு எவ்வாறு வந்தது என்று வினவ, தனக்குப் பூணுல் கிடைத்ததாகவும் அதன் ஆற்றலால் மந்திரம் கற்றதாகவும் கூறினான். அன்றிலிருந்து பிராமணனைச் சூப்ப பகத் தாக மன்னன் நியமித்தான். பிராமணர் உயர்சாதியாக மாறினார்.

செங்கல்பட்டு பகுதியில் எண்டாவூர் கிராமத்து அடித்தள மக்களின் தொன்மங்களைக் கொண்டு மொஃபாத் (1979) ஆராய்ந்துள்ளார். அங்கு வாழும் சங்குப் பறையர்களின் பின்வரும் பாடலைப் பதிவு செய்கிறார்.

“நானே முதலில் பிறந்தவன்
நானே பூணுலை முதலில் அணிந்தவன்
நானே சங்குப் பறையன்”
(மொஃபாத் 1979:123).

கொச்சின் சாதிகளும் பழங்குடிகளும் (The Tribes and costes of Cochin, 1981(1909-12) எனும் நூல்  வரிசையில் அனந்த கிருஷ்ண ஐயர் பறையர்களை ‘மூத்த பிராமணர்கள்’ (நடனநச டீசயாஅயளெ) என்று அழைக்கும் வழக்கத்தைப் பதிவு செய்துள்ளார் (ஐயர் 1981:1:69).

தமிழகத்தில் கோயில் பிராமணர்கள் தாம் அடைந்த தீட்டின் காரணமாக ஒரு கணம் ‘மத்தியானப் பறையர்’ ஆக மாறுவதைத் தொ.பரமசிவன் தம் பண்பாட்டு அசைவுகள் (2001:65) மூலம் குறிப்பிடுகிறார்.

இந்தத் தொன்மங்களை ஆராய்ந்ததின் மூலமாக ஆதித் தமிழர்கள் உலகம் முழவதும் வாழ்ந்தார்கள் என்றும் அவர்களைப் பார்த்து பிராமணர்கள் பல நடைமுறைகளைத் தெரிந்துகொண்டு அவ்வாறு வாழ வேண்டுமென்று முனைந்துள்ளனர். இங்கு வாழ்ந்தார்கள் பூர்வத் தமிழர்கள் என்பதை பிராமணர்களே ஏற்றுக் கொள்ளும் வகையாக தொன்மக் கதைகள் விளங்குகின்றன.

வீரவாகு காராம் பசு மாமிசம் எதற்கு உதவும் என்று கேட்பதன் மூலமாக விரட்டியடிக்கப்பட்ட பூர்வத் தமிழர்கள் மூலமாகவே பசுமாமிசம் ஆரியர்கள் வணங்கும் இந்திரன், சோமன் போன்ற தெய்வங்களுக்கும் ஆரியர்களுக்குந்தான் சொந்தம் என்று சொல்வைத்துள்ளனர். ஆரியர்கள் ரிக்வேதத்தில் அவர்களுடைய வையித்தெரிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். வேள்வி செய்வதன் மூலமாக பூர்வத் தமிழர்கள் வழிபட்ட இயற்கைக் கடவுளர்களாhன, இந்திரன், சந்திரன், சு10ரியன், வாயு போன்றவர்களைத் தனக்கான கடவுள்களாக மாற்றி அவர்களுக்கு வாஜிபேய் யாகம் செய்வதன் மூலம் தம்முடைய எதிர்களை அழித்துவர இந்திரன், சந்திரன், சு10ரியன், சோமன், அக்னி, வாயு போன்றவர்;களை அழைத்து, நாங்கள் செய்யும் யாகத்தின் மூலம் உங்களுக்குத் தேவையான சோமபானம், பசுக்களை யாகத்தில் போட்டுச் சுட்டுக் கொடுக்கிறோம் அதனைச் சாப்பிட்டு எங்களுடைய எதிரிகளை (தசுக்களை) அழித்து, எங்களுக்குத் தேவையான பொன் பொருட்கள் செல்வங்கள் சேர்வதற்கு வழிவகைகளைச் செய்வாயாக என்று தன்னுடைய தேவைளை நிறைவேற்றிக் கொண்டனர். அவர்கள் பயன்படித்திய ரிக்வேதத்தில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை இதன்மூலம் அறியமுடிகிறது. 

தாய்வழிச் சமூகத்தில் பெண் தன் கூட்டத்தை வழிநடத்தக் கூடியவளாக இருந்துள்ளான். அவள் தன் கூட்டத்திற்கு ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாப்பவளாகவும் மந்திர, தந்திரங்கள் அறிந்தவலாகவு விளங்கினாள். தன் கூட்டத்திற்கு ஏற்படும் நல்லது, கெட்டது நிகழ்வுகளில் முன்னிலை வகுத்தாள். இறப்பு நிகழ்வுகளிலும் சடங்கு தொடர்பானவற்றிலும் மூத்ததாய் வழிநடத்தக் கூடியவளாகவும், பெண் பூசாரியாகவும் விளங்கினாள். அவள்தான் பின்நாளில் பழையோல், கானமர்செல்வி, காடமற்செல்வி, கொற்றவை எனும் வடிவங்களில் ஆற்றல் மிகுந்த தெய்வங்களாக உருவெடுத்தாள். சுடுகாட்டைக் காவல் காக்கக் கூடிய காவல் தெய்வங்களாகவும் விளங்கினாள் என்பதை இலக்கியங்கள் வழியும் இதிகாசங்கள் வழியும் அறிய முடிகிறது.
காளிதேவி வாழும் சுடலையில் உயிர்களைக் கொல்லும் வாயையுடைய கிழ நரிகள் பாறை ஓசைபோல முழக்கமிட்டன. அங்குக் கொள்ளிவாய்ப் பேய்கள் தங்கள் குட்டிகளின் வாய்க்கு ஏற்ற இனிய சிவந்த இறைச்சியைத் தேடித் திரிந்தன. அப்போது, நரிகளின் வாயில் நல்ல இறைச்சி இருப்பதைப் பார்த்து, அதைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டன.

“கொல் வாய் ஓரி முழவு ஆகக்
கொள்ளி வாய்ப்பேய், குழவிக்கு
நல்வாய்ச் செய்ய தசை தேடி
நரிவாய்த் தசையைப் பறிக்குமால்”
கலி. ப. – 119

பருந்துகள், இறந்த பிணங்களைக் கொத்திக் கொழுப்பையும், இறைச்சியையும் பிடுங்கித் தின்னும் காளி தேவியின் கோயிலைச் சுற்றிலும் பிணங்களைச் சுடும் நெருப்பு, செம்பருத்திச் செடி, பேய்கள், சுடுகாடு, ஒன்றோடு ஒன்று சண்டையிடும் நரிகள் ஆகியவாகவே இருந்துள்ளான். என்பதை,

“நிணமும் தசையும் பருந்து இசிப்ப,
——————————————————-
பிணங்கு நரியும் உடைத்தாரோ!” கலி.ப -120

“அழைக்க’ என்றலும் அழைக்க வந்து அணுகி,
—————————————————————-

பெண் அணங்கு, என்று வணங்கவே”    கலி.ப -160 போன்ற பாடல்கள் மூலம் காளி சுடுகாட்டைக் காக்கக் கூடிய காவல் தெய்வமாக விளங்கினாள் என்பது தெளிவாகிறது.

தாய் அதிகாரத்திற்கு அடுத்த நிலையாக தந்தை அதிகாரச் சமூகம் என்பது விளங்குகிறது. தந்தை அதிகாரச் சமூகத்தில் குடும்பத்தை வழிநடத்தக் கூடிய பொருப்பு ஆணின் கையில் மாறியது. தந்தை அதிகாரச் சமூகத்தின் முதல் ஆண் சிவனாவான். சிவனே தலைமை பூசாரியாகவும் விளங்கினார். இவரின் மாயாஜலங்கலாலும், மந்திர தந்திரங்களாலும் மக்களை வழிநடத்திச் சென்றனர். இறப்பு நிகழ்வுகளில் எப்படிப் புதைப்பது என்பது தலைமை பூசாரியாக இருந்து வழிநடத்தினர். சுடுகாட்டைப் பாதுகாப்பவராக விளங்கிய தந்தை தான் சிவபெருமான்னாகவும், சுடலைமாடனாகவும், விரபாகு, அரிச்சந்திரன் போன்N;றார் சுடலைகாக்கும் காவல் தெய்வங்களாக விளங்கியுள்ளனர். இதற்கு சான்றாக, சிவபெருமான் சுடலையில் காவல் காத்தார் என்பதற்கு, திருஞானசம்பந்தர்   

“தோடுடைய செவியன் விடையேரியோர் தூவெண்மதிசூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என்னுள்ளம் கவர்கள்ளம்
” 12.ஆம் திருமுறை-1

என்று வருனித்திருக்கின்றார். இப்பாடலின் மூலம் சுடலையை இடமாகக் கொண்டு காவல் புரிபவன் என்பது புலனாகிறது.

இதற்குச் சான்றாக, சிவன், உலக வெப்பத்தைத் தணிக்கும் வெண்ணிறப் பிறைச் சந்திரனைச் சடையில் தரித்துள்ளார். இடபத்தை வாகனமாகச் செலுத்தும் தலைவரும் அவர் ஆவார். சுடலையை இடமாகக் கொண்டு தனித்திருக்கும் அவர் அனுபவிப்பதற்கு என்று எண்ணி, காளிதேவி தன்னுடைய பொன்னிறக் கொங்கை முகங்களில் அழகிய வெண்ணீற்றைப் பூசியவளாக விளங்கினாள். தேவி கொங்கைகளில் வெண்ணீற்றை மிகுதியாகப் பூசியிருந்தது, செப்புக் கிண்ணத்திலே பருகுவதற்குறிய பாலை நிறப்பி வைத்தது போல் இருக்கும். இதனை,

“தணி தவளப் பிறையைச் சடைமிசை வைத்து விடைத்
தலைவர் வனத்தினிடைத் தனி நுகர்தற்கு நினைத்து
அணி தவளப் பொடி இட்டு அடைய, இலச்சிணை இட்டு,
அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தினளே” கலி.ப -124

“பரிவு அகலத் தழுவிப் புணர் கலவிக்கு உருகிப்
படர்சடை முக்கணுடைப் பரமர் கொடுத்த களிற்று
உரிமிசை, அக் கரியின குடரோடு கட்செவியிட்டு,
ஒரு புரி இட்டு இறுகப் புனையும் உடுக்கையாளே
கலி.ப -125

ஆக, இந்தத் தொன்மகதையையும் புராணக் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சிவபெருமான் முதல் வீரபாகு மன்னன், கயபாகு, மாபளிச் சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் போன்றோர் ஆதிக் குடிகளை வழிநடத்தியவர்கள் என்பது புலனாகிறது. தொல் தமிழகத்தில் இனக்குழுக்களின் தலைவர்களாகவும் அரசர்களாகவும் இருந்திருக்க வேண்டும்.  அவர்கள் தான் பின்னாளில் பிராமணர்களால் வஞ்சிக்கப் பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டார்கள் என்பது புராணக் கதைகளின் மூலமாகப் புலனாகிறது. இந்தக் கதையில் அரிச்சந்திரன் கூரியதாகக் கால் பணம், மொழத்துண்டு, வாய்க்கி அரிசி என் செலவுக்கு போதவில்லை என்பது பிராமணர்களுடைய ஆதிக்கம் அடிமைபடுத்திய செயல்களைப் பிரதிபளிப்பதாகும்.

இந்தப் பாடலில் இறுதியில் காஞ்சிபுரம் காமச்சியம்மன் கோயில் திறக்க மூவாயிரம் பொன், மூட மூவாயிரம் பொன் ஆக ஆறாயிரம் பொன் கொடுத்து அடியேன் செப்புப் பட்டயத்தை எடுத்து வாசித்தால் எல்லாம் தெரியவரும் என்று வருகிறது. இந்த வரிகள் மிக முக்கியமான ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் ஆதி சங்கராச்சாரியரர் வாழ்ந்த பகுதியாகும். இங்குப்  பௌத்தர்கள் மிகுதியாக வாழ்ந்த பகுதியாகும். அதே போன்று ஆதி சங்கராச்சாரியார் இந்து மதத்தைப் பரப்பியவர் இவரும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர் என்பதால், இதுபோன்ற கட்டுக்கதைகளை இந்து மதத்திற்கு ஆதரவாக சங்கராச்சாரியரின் பங்குண்டு என்பதை பறைச்சாட்டுகிறது. இங்கு உள்ள காமாட்சியம்மன் கோயிலில் ஒருகாலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்தது என்பது வரலாறாகும். இந்தக் கோயிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க செப்புப்பட்டடையம் இருப்பதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த செப்புப் பட்டயத்தில் பௌத்தர்கள் எழுதிய சான்றுகள் இருக்கவேண்டும். இந்தப் பட்டயத்தை இந்து மதத்தைப் பரப்பும் நோக்கத்தில் புனைவு செய்திருக்க வாய்ப்பபுள்ளது. இந்தப் பாடல் அனைத்துத் தரப்பு மக்கள் இறப்பு நிகழ்விலும் பாடக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.

தகவளாலர்.
தெய்வத் திரு கு.பிச்சைக்காரன், வயது. 67. ஊர். காரணை.

துணைச்செய்த நூல்கள்
1. அரிச்சந்திரன் கதைகள். சிவகாசி: ஸ்ரீ ஆஞ்சநேயா பதிப்பகம்.
2. பாலகுரு, கே. சத்திய சக்ரவர்த்தி அரிச்சந்திரன். சிவகாசி: கலா ஆப்செட் காலண்டர்.
3. புலியுர்க் கேசிகன், 2014. கலிங்கத்துப் பரணி. இராயப்பேட்டை: பாவை பப்ளிகேஷன்ஸ்
4. பி.ஆர.அம்பேத்கர், 1916. அமெரிக்கக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வழங்கிய ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் இயங்குமறை, தோற்றம், வளர்ச்சி’ எனும் ஆய்வுரை.
5. பிலவேந்திரன்,ச.2004. சனங்களும் வரலாறும் சொல்மரபின் மடக்குகளில் உறையும் வரலாறுகள். புதவை:வல்லினம்.
6. பக்தவத்சல பாரதி, 2012. தமிழர் மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம்.
7. —————————–, 2012. பாணர் இனவரைவியல். தரமணி,சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
8. —————————–, 2017. மானிடவியல் கோட்பாடுகள். புத்தாநத்தம்: அடையாளம்.
9. —————————–, 2017. பண்பாட்டு உரையாடல். புத்தாநத்தம்: அடையாளம்.
10. ஸ்டாலின் ராஜாங்கம், 2016. சாதி இழிவை உருதியாக்கும் அரிச்சந்திரன் கதையும் அயோத்திதாசர் மறுப்பும். அதிர்வெண் இருமாத இதழ். 
11. பெ.மாதையன், 2004. சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும். சென்னை: பாவை பப்ளிகேஷன்ஸ்.
12. பார்ப்பனரின் வயிற்றெறிச்சல்தான் வேதங்கள். எழுத்தாளர் மஞ்சை வசந்தன்.
13. புதியவன் சிவா, சாதி ஸ்வாக. pரவாலையஎயளெiஎய.டிழைபளிழவ.உழஅ
14.  ———————, இலக்கிய அறிவியல். Pரவாலையஎயளெiஎய.டிழைபளிழவ.உழஅ

pilckumar1983@gmail.com