ஆய்வு: சுற்றுச் சூழலில் காற்று மாசுபாடு

முன்னுரை
 முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -பிரபஞ்சத்தில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகவும், மையமாகவும்  மனிதனே கருதப்படுகிறான். இயற்கையின் ஒரு மேம்பட்ட அங்கமாக விளங்கும் மனிதன், இயற்கையை அனைத்து விதங்களிலும் தனக்கும் தன்னுடைய தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான். அவ்வாறு மனிதனின் வாழ்க்கைக்கு மூலாதாரமாக விளங்கும் அவனைச் சுற்றியமைந்துள்ள அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய ஒன்றே. சுற்றுச்சூழல் என்ற சொல்லின் நேரடியான சுற்றுப்புற என்பதாகும். ‘சுற்றுச்சுழல் என்ற வார்த்தை நுnஎசைழn என்ற பிரஞ்சு மொழிச் சொல்லில்லிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் சுற்றிலும், ‘சூழ்ந்து வருவது’, ‘சூழ் என்பதாகும். இதன் மூலம் மனிதனைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற  பொருட்களே  சுற்றுச்சூழல் என்பது தெளிவாகிறது. இவ்வாறு சற்றுச் சூழலில் காற்று எவ்வாறு மாசுப்படுகிறது அறியவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சுற்றுச் சூழல் மாசுபாடு
சுற்றுச்சூலை அழிக்கின்ற, எந்தவொரு பொருளும் சுற்றுச் சூழலினுள் செலுத்தப்படுதலே மாசுபடுதல் ஆகும். மாசுபடுதல் என்பது தவறான இடத்திலுள்ள பொருட்களாகும்.

நம் பயன்பாட்டுக்குப் பின் எஞ்சியிருப்பவற்றை கழிவுகளாக வெளியேற்றப்படுதலில் இடம்பெறும் பொருட்கள்தான் மாசுபடுத்திகள் ஆகும். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகின்ற கழிவுகளால் ஆறுகளும், நச்சு வாயுக்கள், அணுசக்தி நிலையக்கழிவுகள் போன்றவற்றால் காற்றும் மாசுபடுகின்றன. உயிர்தொழில்நுட்பமும், தொழிலக முன்னேற்றமும் கொண்ட நாடுகளில் தான் மிகவும் மோசமன மாசுபடுதல் ஏற்படுகிறது.

மனிதக்கழிவுகளினால் சுற்றுச்சூழலை வெளிப்படையாக அல்லது தற்செயலாகக் கொடுக்கின்ற செயலே மாசுபடுதல் எனப்படும்.

‘மசுபடுத்தி என்பது பல்வேறு சிற்றினங்களின் வளர்ச்சி விகிதத்தை மாற்றியமைக்கின்ற விதத்தில் சுற்றுச்சூழலை கேடு நிறைந்ததாக மாற்றுகின்ற ஒரு பொருள் அல்லது விளைவு: உணவுச் சங்கிலியில் குறுக்கிடுவது, நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை செயல்படுத்தி உடல் நலத்தில் குறுக்கிடுவது. மக்களின் பல்வேறு வசதிகளையும் சௌகரியங்களையும் குறைப்பது. சொத்து மதிப்புக்களை குறையச் செய்வது போன்ற எந்த ஒன்றும் மாசுபடுத்தியே’. ஹொலிஸ்டர் மற்றும் போர்டியான்ஸ் தங்களது சுற்றுச்சூழல் அகராதியில் விரிவான வரையாக கொடுத்துள்ளார்கள்.

காற்று மாசுபாடுதல் எங்ஙனம்?
ஆக்ஸிஜன், கார்பன்- டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆகியவற்Nhடு பல்வேறு இதர வாயுக்களும் குறிப்பிட்ட விழுக்காட்டு அளவில் சாதாரணமான காற்றில் பரவியுள்ளன. எரிமலை வெடித்தல், மணற்காற்று புழுதிப்புயல், பெரும் விபத்தால் ஏற்படும் புகை மண்டலம் ஆகிய இயற்கை நிகழ்வுகளாலோ அல்லது மனித நடவடிக்கைகளாலோ, ஆக்ஸிஜனைத் தவிர காற்றில் உள்ள இதர வாயுக்களின் அடர்த்தி நிலை அதிரிக்கும்போதும், மிதக்கும் திடக்கழிவுகளின் அளவு உயரும்போதும், காற்று மாசுறுகிறது எனாலம். காற்று மாசுபாடானது புகை, தூசுக்கள், தீங்குவிளைக்கம் வாயுக்கள் போன்றவை காற்றில் கலந்து அதன் தரத்தைக் கெடுப்பதால் ஏற்படுகிறது. பூமியைச்; சுற்றி எல்லா பக்கங்களிலும் அதன் மேற்பரப்பில் காணப்படும் ஒரு வாயு உறைளே, அதிலுள்ள காற்று முக்கியமாக நைட்ரஜன் (78.4மூ ) ஆக்ஸிஜன் (20மூ) ஆர்கன் மற்ற வாயுக்கள் (1.5மூ;) கார்பன் டை ஆக்ஸைடு (0.0314மூ) போன்ற பல்வேறு வாயுக்களை உள்ளடக்கியது வளிமண்டலம் எனப்படும். காற்றானது உயிர்வாழ் அடுக்கில் உள்ள அனைத்துவகை உயிரிகளுக்கும் மிகவும் இன்றியமையாதது. உணவு இல்லாமல் ஒரு சில வாரங்களுக்கும், நீரில்லமால் ஒரு சில நாட்களுக்கும் மனிதனால் உயிர் வாழ இயலும். ஆனால் காற்றில்லாமல் ஒரு சில நிமிடங்கள் கூட மனித உயிர் வாழ இயலாது.1

காற்று மாசுபாடுதல் பொருள்
காற்று மாசுபடுதல் என்பது அதிமாக நடைபெறும் ஒன்றாகும். தற்போது பெருகி வரும் தொழில்சாலைகள், எரிப்பொருட்களின் அதிகமான பயன்பாடு ஆகியவை காற்று மாசுறுதலை இயல்புபடுத்திவிட்டன. வளிமண்டலமானது வாயுகளின் கலவையால் உருவானது. இதில் நைட்ராஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, ஆக்ஸிஜன் மற்றும் இதர வாயுக்கள் நிறைந்திருக்கின்றன. இவையோடு சேர்ந்து நீர்த்துகள்கள், தூசுகள், மந்த வாயுக்கள், புகை, ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் நுண்ணியிரிகள் ஆகியவையும் உள்ளன.2

காற்றில் அல்லது வளிமண்டலத்தில் மனிதன் மற்றும் மற்ற உயிரினங்களுக்குப் பாதிப்பைத் தரக்கூடிய வகையில் காற்றின் இயற்பியல், வேதியில் பண்புகளில் மாற்றம் ஏற்படுவதே காற்று மாசுபாடு எனப்படுகிறது.3

காற்று மாசுபாடுதலின் காரணங்கள்
காற்று மாசுபடுதருக்கு பல மூலங்கள் தற்போதைய தொழிற்சாலைப் பெருக்கத்தினால் அமைந்து வருகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் வாயுக்கள், புகை மற்றும் தூசு, வாகனப்புகை மற்றும் வீடுகளிலிருந்து வெளிப்படும் புகை போன்றவற்றால் வளிடண்டலம் மாசுபடுகிறது. அறிவியலின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சினால் மாசுறுதலின் வேகம் அபாய கட்டத்தை நோக்கி செல்லுமளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிக்கப்படுதல், கச்சா எண்ணெய் சுத்தப்படுத்தும் தொழிற்சாலைகள், வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், உரத்தொழிற்சாலைகள் போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றால் அதிகப்படியால் மாசுபடத்திகள் வலிமண்டலத்தை அடைகின்றன.4

காற்று மாசுபாடுதலின் மூலம்கள்
கார்பன்-டை-ஆக்ஸைடு – உயிரினங்களின் வளர்சிதை செயல்பாடுகள், எரிபொருட்களை எரித்தல். கார்பன் மோனாக்ஸைடு – நிலக்கரி மற்றும் இதர எரிபொருட்களை எரித்தல், புகைபிடித்தல். சல்பர் ஆக்ஸைடுகள் – எண்ணெய் மற்றும் நிலக்கரித் தொழிற்சாலைகள். நைட்ரஜன் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை. ஹேலோஜன் சேர்மம் – இரசாயன தொழிற்சாலைகள். கரிமப் பொருட்கள் – திரவங்கள் ஆவியாதல், நிலக்கரி, மண்ணெண்ணெய்  மற்றும் இதர எரிபொருட்கள் எரிதல் பூச்சிக்கொல்லிகள், வளர்சிதை செயற்பாடுகள், அலங்கார பூச்சுகள், பசைகள், கரைப்பான்கள் போன்றவை. ஹைட்ரோகார்பன்கள் மற்றும் துகள் பொருட்கள், எரிபொருட்கள் எரிதல், புகைப்பிடித்தல், அவிகள் குளிர்ந்து சுருங்குதல். சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் அறிக்கையின் படி  இந்தியாவின் முக்கிய நகரங்களில் வாகனங்களால் வெளியிடப்படும் மாசுபடுத்திகளில் கார்பன் மோனாக்ஸைடு 43மூ ஹைட்ரோ கார்பன்கள் 20 மூ  நைட்ரஜன் ஆக்ஸைடுகள் 30-40மூ  மிதக்கும் துகள்கள் 2மூ சல்பர் டை ஆக்ஸைடு 2மூ உள்ளது. மேலும், மும்பை, பெங்களுரூ, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் மாசுபாடு அதிகமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.5

காற்று மாசுபடுதலால் ஏற்படும் விளைவுகள்
தொழிற்கூடங்களிலிருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்ஸைடு கண் எரிச்சலையும் பல வித நோய்களையும் ஏற்படுத்துகிறது. மேலும் முக்கியமாக அமில மழை பொழிவதற்கு இது காரணமாக அமைகிறது.

வாகனப்புகையிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு இரத்தில் ஆக்ஸிஜன் அளவினைக் குறைக்கிறது. மேலும் அவற்றிலிருந்து வெளிவரும் ஹைட்ரோகார்பன்கள் புற்றுநோயை உருவாக்கிறது.

அனல் மின் நிலையங்களிலிருந்து வெளிவரும் ஆர்சனிக் வாயு தாவரங்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றன.

செயற்கை உரத்தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் அம்மோனியா மனித சுவாசமண்டலத்தை பாதிக்கிறது. மூச்சுக்குழாயில் புண்கள் ஏற்படுத்துகிறது.

வாகனப் புகையிலிருந்து வெளியேறும் பென்சீன் இரத்தப் புற்றுநோய் மற்றும் குரோமோசோம் சிதைவை ஏற்படுத்துகிறது.

காற்றில் கலக்கும் துகள்கள் சுவாசநோய், ஆஸ்துமா, இளம் வயது இறப்பு போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

சுவாச நோய்களான மூச்சுக்குழல் அடைப்பு, எம்ஃபைசீமா மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாவதற்கு புகை கலந்த காற்று காரணமாக அமைகிறது.

புகைப்பிடித்தல் நுரையீரலுள்ள காற்றுச் சிற்றறைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கி நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது. புகைபிடித்தல் புகைபிடிப்பவரை மட்டும் பாதிப்புக்கு உள்ளாக்காமல் அருகில் உள்ளவர்களையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. புகையில் உள்ள பென்சோபைரின் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை விளைவிக்கக்கூடியது.

குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றில் வெளியாகும் க்ளோரோ ஃபுளுரோ கார்பன்கள் ஓசோன் மண்டலத்தில் வினைபுரிந்து, புற ஊதாக்கதிர்களை வடிகட்டும் ஓநோன் மண்டலத்தை சிதைவுறச் செய்கிறது.6

காற்று மாசுபாட்டைக் கட்டுபடுத்தும் முறை
கலப்பமற்ற கச்சா எரிப்பொருகளை வாகனங்கள், இயந்திரங்களில் பயன்படுத்துவன் மூலம் காற்று மாசடைவதைக் குறைக்கலாம்.

இயற்கை எரிவாயு, மரபுசாரா ஆற்றல் வளங்களை அதிகமாக பயனுக்குக் கொண்டு வருதல் மூலம் குறைக்கலாம்.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் புகையினை உயரமான புகைபோக்கிகளைக் கொண்டு வெளிவிடுதல் மற்றும் அதிகமான மரங்களை அவைகளைச் சுற்றியும் நடுவதால் காற்று மாசுபாட்டை வெகுவாக் குறைக்கலாம்.

காற்றிலுள்ள கழிவுகளைச் சுத்தகரிப்பு ஆலையின் மூலம் நீக்கி மாசு ஏற்படுவதைக் குறைக்கலாம்.

சைக்ளோன் கொள்கவன், எலக்ட்ரோ தேக்க உறைப்பான், போன்ற நவீன காற்றுச் சுத்திகரிப்புக் கருவிகளையும் முறைகளையும் பயன்படுத்துதல் காற்று மாசை பெருமளவிற்குக் குறைக்கிறது

அதிக கதிரியக்கத்தை ஏற்படுத்துமளவில் நடத்தப்படும் அணு ஆற்றல் சோதனைகள் தவிர்க்கப்படுதல் காற்றில் மாசு ஏற்படுவதைக் குறைக்கும்.

புகை பிடித்தலை முற்றிலுமாகத் தடை செய்வதால் காற்றினால் மற்றவர்களும் பாதிக்கப்படுதல் தவிர்க்கப்படும்.

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் வளர்ப்பது. சாலையோரத்தின் இரு பக்கங்கள் மற்றும் காலியாக உள்ள திறந்த வெளிகளில் மரங்களை வளர்ப்பதன் மூலம் காற்று மாசுபடுவதைக் குறைக்கலாம்.7

முடிவுரை
நமது சுற்றுச்சூழலில் விரும்பத்தகாத மாற்றங்களைச் செய்து அதன் விளைவாகத் தாவரங்கள், விலங்குகள், மனிதர் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதே மாசாகும். சுற்றுச்சூழலை அழிக்கின்ற எந்தவொரு பொருளும் சுற்றுச் சூழலினுள் செலுத்தப்பதலே மாசுபடுத்துதல் என பொருள்படும். மனித நடவடிக்ககைகள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் காற்று நீர், நலம் போன்ற சுற்றுச்சூழல் அங்கங்களின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு எனப்படுகிறது. சுற்றுச்சூழல் அங்கங்களில் எப்பொருள் மாசினை ஏற்படுத்துகிறதோ அப்பொருள் மாசுபடத்தி அல்லது மாசுண்டாக்கி எனப்படுகிறது. காற்றில் கலக்கும் நச்சுத்துகள் சுவாசநோய், ஆஸ்துமா, இளம் வயது இறப்பு போன்றவைகளை ஏற்படுத்துகிறது. தோழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் வாயுக்கள், புகை மற்றும் தூசு, வாகனப்புகை, வீடுகளிலிருந்து வெளிடப்படும் புகை போன்றவை காற்று மாசுபடுவதற்கான முக்கிய காரணங்களாகும்.

அடிக்குறிப்புகள்
1. பேரா. முனைவர் அ.மீனாட்சிசுந்தரம், சுற்றுச்சூழல் கல்வி, ப.70
2. மேலது,ப.124
3. மேலது,ப.123
4. மேலது,ப.125
5. மேலது,ப.126
6. மேலது,ப.127
7. மேலது,ப.128

துணைநூற்பட்டியல்
பேராசிரியர் முனைவர் அ. மீனாட்சிசுந்தரம்.     சுற்றுச்சுழல் கல்வி, காவ்யமாலா பப்ளிஷர்ஸ், 7-8 எஸ்.எஸ்.நகர்,,சின்னாளபட்டி – 624 302,,திண்டுக்கல் மாவட்டம்,,பதிப்பு டிசம்பர் 2015
Aditi Sharma, Environmental studies, Sujeet publications, New Delhi, 2005

* கட்டுரையாளர் – முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752