முன்னுரை
செய்தித் தாள்களின் ஒரு புதிய சகாப்தத்தைக் கருத்துப்படங்கள் தோற்றுவித்து வருகின்றன. தலையங்கத்திற்;கு இணையான வகையில் இவை விளக்குகின்றன. பொது மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக இவை அமைகின்றன.
கருத்துப்படங்கள்
“கருத்துப்படங்கள் ஒரு மையக் கருத்தை எடுத்துரைக்கும், எளிமையான படங்களைக் கொண்டவைகளாக இருக்கும். குறைவான சொற்களிலோ, சொற்களே இல்லாமலோ விளக்கப்பட்டிருக்கும். கருத்துப்படங்கள் நேற்றோ, இன்றோ தோன்றியவை அல்ல அச்சகங்கள் தோன்றி இதழ்களாக வெளிவரத் தொடங்கிய காலம் முதலே கருத்துப்படங்கள் ஒவ்வொரு இதழ்களிலுமே இடம் பெற்றிருக்கின்றன.”1
ஒரு இதழ் கூற விரும்பும் முக்கியமான கருத்தை மிகச் சுலபமாக அறிய வைத்துவிடும். பல பக்கங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தை ஒரு கருத்துப்படம் எளிதில் விளக்கிவிடும்.
ஞானதூதனில் கருத்துப்படங்கள்
தேச ஒற்றுமை, முன்னேற்றம், கல்வி, எளிமை, வறுமை ஒழிப்பு, சுற்றுச் சூழல் முதலிய பிற நோக்கோடு இதழில் கருத்துப்படங்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நாட்டின் மேல் கொண்டுள்ள அக்கறையும் நாட்டில் நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிந்து அதற்கேற்ப நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளை கருத்துப் படங்களின் வாயிலாக வெளியிட்டுச் சேவை புரிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துப்படத்திற்குரிய அனைத்துக் கூறுகளும் ஞானதூதன் இதழிலும் இடம் பெற்றிருக்கின்றன. சிறுபான்மைச் சமூகத்திற்குப் பாதிப்பு ஏற்படும் பொழுதெல்லாம் அதை அரசுக்குச் சுட்டிக்காட்டி தேவையானால் விமர்சனங்கள் எழுதவும் தவறியதில்லை.
பசுமைப் புரட்சி
“பசுமைப் புரட்சி” – என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டு ஜீன் மாத இதழில் இயற்கையைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் தொலை நோக்கு பார்வையில் நாடு மற்றும் மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட கருத்துப்படமாகும். கி.பி. 1700 வரையில் உலகில் உணவுப்பொருட்களை மனிதன் கைகளாலேயே உற்பத்தி செய்தான். ஒவ்வொரு நாட்டு மக்களின் மக்கள் தொகைக்கேற்பத் தானியங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை பற்றாக்குறையே இருந்தது. எனவே உலகில் ஒவ்வொரு நாடும் உணவு உற்பத்தி மூலம் தன்னிறைவு அடைய முயல்கின்றன.”2
இங்கிலாந்;தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி உலகையே மாற்றியது. ஜார்ஜ் மன்னரின் ஆட்சியில் விவசாய வாரிய தலைவராக இருந்த ‘ஆர்தர்யங்’ என்பவர் ‘ஜெத்ரோடல்’ கண்டுப்பிடித்த டிரில் என்ற இயந்திரம் மூலம் நிலத்தை உழுவதற்கும் விதைகளை தூவவும் ஊக்குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்தின் உற்பத்தி பெருகியது. பின் ஐரோப்பிய நாடுகளும் இக்கருவியை பயன்படுத்தி விவசாயத்தில் தன்னிறைவு அடைந்தன.
1951 முதல் 1956 வரை
“நேருவிஸ் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் ஐந்தாண்டு திட்டதில் அரசு ரூபாய் 1960 கோடியும், தனியார் துறைகள் ரூபாயில் 1800 கோடியும் முதலீடு செய்தன. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்தது.”3
தமிழ் நாட்டில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையங்கள் புதுப்புது விதைகள், நடவு முறைகள், புதிய பாசன வசதிகள் மற்றும் நவீன உத்திகளை விவசாயிகளுக்கு அளித்து தமிழ் நாட்டின் விவசாய முன்னேற்றத்திற்கு வித்திட்டது. கல்விஅறிவில் முழுமைபெற்றஎ நிலையில் இயற்கையை அழ்ப்பது சரியல்ல, வளமான இயற்கையும், நல்ல சுற்றுச் சூழலும் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. டன் கணக்கில் மரங்களை வெட்டி அழித்து கொண்டிருக்கும் மக்கள் இதுபோன்று இயற்கையை அழிக்க கூடாது என்பதையும் இக்கருத்துப்படம் விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
நாளைய மன்னன்
ஞானதூதன் இதழின் கருத்துப்படம் மிகவும் மாறுப்பட்டது. “நானைய மன்னன்” என்பதே கருத்துப்படத்தின் தலைப்பு. இப்படமானது நாம் கடந்து வந்த பல தவறான பல பாதைகளை நமக்கு நினைவூட்டுகிறது. மக்களாட்சி நடைபெறும் நமது நாட்டில் “நாளைய மன்னன்” என்ற கருத்துப்படம் நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் அந்நாட்டின் மன்னன் தான் என்பதை கருத்துப்படம் மெய்ப்பிக்கின்றது.
பொதுவாக மன்னன் எப்படி இருப்பார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தலையில் மணிமுடி, விலையுயர்ந்த ஆடை, நிமிர்ந்த தோள், கழுத்தில் அணிகலன்கள், வீரவாள், முறக்கேறிய மீசை, சிங்கநடை, முதுகில் வில், அம்பு முதலானவை இடம் பெற்றிருக்கும்.
“நாளைய மன்னன்” என்னும் கருத்துப்படத்தில் வித்தியாசமாக ஒரு மாணவன் மன்னனாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். மன்னனுக்குரிய அடையாளங்கள் வேறுபட்டுள்ளன. பள்ளிக்குச் செல்லும் சிறுவன் சாலையில்படும் இன்னல்கள் படமாகக் காட்டப்பட்டுள்ளது. போருக்குச் செல்லும்போதுதான் மன்னன் தலைக்கவசம் அணிவான். ஆனால் சாலையில் ஆடுமாடுகள், பள்ளிக்கூடம், வாகனங்கள், தொழிற்சாலை சுற்றுச்சூழல் கேடு, சுகாதாரமற்ற வீடுகள், தெருக்கள் காட்டப்பட்டுள்ளன.”4
பல தலைமுறைகள் தாண்டி நம்முடைய சந்ததிகள் வாழவிருக்கும் நிலை அற்புதமாகக் சித்திரிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகை பெருக்கம், இடநெருக்கடி, சுற்றுச்சூழல் சீரழிக்கப்பட்டு ஏற்படப் போகும் மாசு, சுகாதாரமற்ற வாழ்க்கைச்சூழல், சுயநலத்திற்காகப் பிறரைச் சுரண்டுதல், குடியிருப்புக்கு அருகிலேயே தொழிற்சாலைகள் இவற்றால் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுதல் முதலியவற்றை சுட்டிக்காட்டுகின்றது. முகஉறை, பிராணவாயு சிலிண்டர் இல்லாமல் உயிர்வாழ முடியாது என்பதை தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்துக்காட்டியுள்ளது. இயற்கையோடு ஒன்றிவாழ்ந்தால் பல நூற்றாண்டுகள் மனித இனம் அழியாமல் பாதுகாக்கப்படும் எனபதையும் இயந்திர வாழ்க்கை வாழும் நமக்கு இனி இயந்திரமே வாழ்க்கை ஆகிவிடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
தொலைக்காட்சி
தொலைக்காட்சிகளில் வெளிவரும் தொடர்கள் இக்காலப் பெண்களின் அன்றாட வேலைகளைக் கூடச் செய்யவிடாமல் பாதிப்பது குறித்து இதழில் கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
“ஒரு வீட்டின் சமையலறையிலிருந்து தீ வருவது போலவும் மற்றொரு அறையில் ஒரு பெண் தொலைக்காட்சியில் தொடர் பார்ப்பது போலவும் சமையலறையிலிருச்து அப்பெண்ணின் மகள் அம்மாவிடம் சமையலறை தீப்பிடித்து எரிகிறது. தீயை அணைப்பதற்காக ஓடிவா என்பதைக் கூடச் சரியாக காதில் வாங்காமல் பொறு இப்போதுதான் தொடரைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன் என்று தாய் சொல்வது போலவும் மிக அழகாகக் கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது.”5
குறிப்பாக நடுத்தரக் குடும்பப் பெண்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இன்றைய நடுத்தரக்குடும்பத்துப் பெண்கள் அடிமையாகிவிட்டனர் என்று கூறினால் மிகையாகாது. பெண்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றன. மின்சார விரயம், பார்வை குறைதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இக்கருத்துப்படம் அமைந்துள்ளது.
அப்துல் கலாம்
புது இந்தியக்கலாம் என்ற தலைப்பில் ஜூன் 2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் அவர்கள் போட்டியிடுவது குறித்துக் கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
“அப்துல்கலாம் சாதாரணமான அரசியல்வாதி அல்ல அவர் ஓர் அணுவிஞ்ஞானி. ஞானதூதனின் கருத்துப்படத்தலைப்பில் கலாம் என்று அச்சிடப்பட்டிருந்தது, துணை எழுத்தைச் சேர்த்துப் படித்தால் அவர் பெயராகிவிடும். துணை எழுத்தைவிட்டு விட்டுப் படித்தால் ‘கலம்’ என்று பொருள்படும். தனது ஐந்து வருட பதவிக் காலத்தில் உலக அளவில் பாரதநாடு தலைநிமிர்ந்து நிற்கும்படியான பல செயல்களில் ஈடுபட்டார்”6
“1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ஏவுகனையை உருவாக்கிய பெருமை இவரைச்சாரும். இந்திய விண்வெளிக் துறையில் அவருக்கிருந்த சுழமான படிப்பு, ஆய்வு, கடின உழைப்பு உறுதி கொண்;ட மனம், ஆகியவையாகும். இந்தியாவின் அணு ஆயுத பலத்தைக் கூட்ட அரும்பாடுபட்டார். நாட்டின் பாதுகாப்புத்துறை அறிவியல் ஆமலாசகராகப் பணியாற்றியுள்ளார்.”7
அறிவியல் ஆய்வும், அணுஆய்தத் தயாரிப்பில் தேர்ந்த அறிவும் கொண்ட விஞ்ஞானியை நாட்டின் குடியரசுத்தலைவர் பதவியில் அமர வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இலவசங்களில் அரசியல்
“வாடியுமா” என்ற தலைப்பில் தேர்தல் குறித்துக் கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளின் சின்னங்களான, கை தாமரை, உதயசூரியன், மற்றும் இரட்டை இலை ஆகியன கம்பீரமாக காட்சியளித்தன. சின்னங்களுக்கு அருகே ஒரு விவசாயி வியப்புடன் நின்று வெண்டுள்ளார். ஆஹா! அற்புதம்! தேர்தல் வருது! தேறுதல் வருமா? ஒவ்வொரு சராசரி மனிதனும் இவ்வாறு சிந்திப்பது இயல்பான ஒன்றாகும்.”8
பாராளுமன்றம் சட்டமன்றத் தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்துகொண்டுதான் இருக்கின்றன. அச்சமயத்தில் அனைத்து கட்சியினரும் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். வெற்றி பெற்ற நாள்முதல் அனைத்தையும் மறந்து விடுகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்ற நாள்முதல் எத்தனையோ தேர்தல்களை மக்கள் சந்தித்துவிட்டனர். அதன் அடிப்படையில் தான் தேர்தல் வருகிறது தேறுதல் வருமா? என்று ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது போன்று கருத்துபடம் வெளியிட்டுள்ளது.
நாட்டின் குடிமக்கள் முன்பு இருந்த ஆட்சியின் நிலைகளையும், தற்போது தேர்ந்தெடுக்க வருகின்ற கட்சியின் வாக்குறுதிகள், செயல்பாடுகள், நம்பகத்தன்மை முதலியவற்றையும் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மக்கள் சுயசிந்தனை அற்றவர்களாக ஆட்டு மந்தையைப் போல செயல் படுகிறார்கள். இலவசம் என்ற பெயரில் தேர்தலில் நிற்பவர்கள் மக்களை மூளைச்சலவை செய்கின்றன சிந்திக்க மறந்துவிட்ட மனித சமூகத்தின் போக்கு சிந்திக்கக்கூடியதாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
“மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பையும் பொருளாதார முன்னேற்றத்தையும் செய்து தருவோம் என்று எந்தக் கட்சியும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை. உண்மையில் ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுப்பது தங்களுக்கு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் தரவேண்டும் என்பதற்காகத்தான் உணவு, நிலம், வேலை எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு அரசின் அடிப்படையான கடமையாகும்.”9
மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், அரசு தனது கடைமைகளை நிறைவேற்றவும் பணியாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
முடிவுரை
ஞானதூதன் மாத இதழ் கிறித்தவ சமயம் சார்ந்த இதழாக இருப்பினும் அதில் வெளிவரும் கருத்துப்படங்கள் அனைத்து மதத்தினரும் படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுபான்னமையினரின் நலனுக்கும், அனைத்து மக்களின் நல்வாழ்க்கைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தேவையானச் செய்திகளை இதழ் தேர்ந்தெடுத்து வெளியிடுகின்றது. அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல், அரசியல், உலக அமைதி, ஆன்மீகம் போன்ற அனைத்து செய்திகளையும் இதழ் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை மிகச் செம்மையாக நிறைவேற்றி வருகின்றது.
அடிக்குறிப்புகள்
1. மா.பா. குருசாமி இதழியல் கலை, ப.183
2. ஜோசப் குமார் ராஐh. ஞானதூதன். ஜீன் 2001. ப.2
3. யு. குமாரசாமி, ஐரோப்பிய வரலாறு. ப.152
4. ஜோசப் குமார் ராஜா ஞானதூதன் ம 2002 ப.2
5. ஜோசப் குமார் ராஜா ஞானதூதன் ம 2002 ப.18
6. ஜோசப் குமார் ராஜா ஞானதூதன் ம 2002 ப.2
7. தர்மராஜ் -அறிவியல் தொழில் நுட்ப வரலாறு ப.26
8. ஜோசப் குமார் ராஜா ஞானதூதன் மார்ச் 2004 ப.2
9. தேவா. அரும்பு. மார்ச்-2004 ப.10
துணை நூற்பட்டியல்
1. ஜோசப் குமார் ராஜா – ஞானதூதன், ஆயர் இல்லம்,கத{ட்ரல் அஞ்சல், தூத்துக்குடி -01 பதிப்பு -2001-2004.
2. குருசாமி – மா.பா இதழியல்கலை, தேன்மொழி -117, சன்னதிதெரு,திருச்செந்தூர், சிதம்பரனார் மாவட்டம்.
3.தேவா. ஜோ – அரும்பு -49, டெய்லர் சாலை, சென்னை-10.
4.தியாகராஜன் – சமூக மதிப்பீட்டுக் கல்வி ராஜ் பதிப்பகம் மதுரை,
5.வின்சென்ட் சின்னதுரை – நம்வாழ்வு, 153- லஸ் கோவில் சாலை, சென்னை.
alfrosharmi@gmail.com