இலங்கை தேசிய இன ஒடுக்குமுறை குறித்த கருத்துப்பரிமாற்றத்திற்கான சந்திப்பு ஒன்றை பிரான்ஸ் சமூகப் பாதுகாப்பு அமைப்பும் (CDS – Comité de Defense Social -France) அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கமும் இணைந்து சனிக் கிழமை 22.10.2011 பாரிசில் ஒழுங்கமைத்திருந்தன . இதில் கலந்துகொள்ள பிரான்சில் இருக்கும் பல்லின இடதுசாரி செயல்பாட்டு ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். “திட்டமிட்ட இனப்படுகொலை” என்ற எல்லைவரை சென்றிருக்கும் இலங்கை தேசிய இன ஒடுக்குமுறை தொடர்பாக சர்வதேச இடதுசாரி அமைப்புக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை காணப்படுவது பற்றியும் பிரதானமாக உரையாடப்பட்டது.
தெற்காசியாவின் அரசியல் ஈர்ப்பு மையமாக தேசிய இன ஒடுக்குமுறை உருவாகியுள்ள நிலையில் உலகளாவிய இடதுசாரி இயக்கங்கள் மத்தியில் அதனை அறிமுகம் செய்வதும் ஒடுக்குமுறைக்கு எதிரான உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியமானதாகக் கருதப்பட்டது.
இதனை நிவர்த்தி செய்யும் முகமாக பல்வேறு இடதுசாரித் தோழர்கள் ஒன்றிணைந்து இலங்கை இனப் பிரச்சனையை முன் வைத்து பொதுத்தளம் ஒன்றில் இயங்குவதென்றும், இதனை நோக்கிய அமைப்பு ஒன்றின் உருவாக்கம் பற்றியும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அத்தோடு இவ் அமைப்பு ஊடாக சர்வதேச இடதுசாரி அமைப்புக்களோடும், கருத்தியலாளர்களோடும் தொடர்பு கொண்டு இலங்கை தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான சர்வதேச அழுத்தம் ஒன்றை கொடுப்பதன் அவசியம் பற்றியும் உரையாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்த சந்திப்பை நவம்பர் நடுப்பகுதியில் நடத்துவதென்றும் அதில் இவை தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்வதென்றும் தீர்மானி க்கப்பட்டுள்ளது .
தகவல் : CDS – Comité de Defense Social -France
தொடர்புகளுக்கு: cdssocial@yahoo.fr
asai.marx@gmail.com