பதிவுகள் இணைய இதழில் கவிதைகள், நூல் விமர்சனங்களை எழுதிவருபவர் எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். இவர் அண்மையில் நடைபெற்ற கொழும்புப் பல்கலைக் கழக இதழியல் ‘டிப்ளோமா’ கற்கைநெறியில் சித்தியடைந்துள்ளார். கொழும்புப் பல்கலைக் கழக இதழியல் கற்கைநெறி (2012 /2013) க்கான பட்டமளிப்பு விழா அண்மையில் இலங்கை மன்றத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்ட கொழும்புப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி டபிள்யூ. குமார கிரும்பு ரேகமவிடமிருந்து பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்,துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுக் கொள்வதைப் படங்களில் காணலாம். [தகவல்: வெலிகம ரிம்ஸா முஹம்மத் / poetrimza@gmail.com ]
