ஒரு தீர்மானத்துடன்
உட்கார்ந்திருந்தேன்.
இன்று
எங்கு செல்வதில்லை..
எதுவும் படிப்பதில்லை..
யுத்தம்,மரணம்,
கொலை,வன்முறை
எது
நடந்தாலும்
தெரியாமலேயே
இருக்கட்டும்..
இணையத்தை நிறுத்தி வைத்தேன்…
மனைவியும்
குறிப்பறிந்து
தொலைக்காட்சியை
அணைத்து விட்டு சென்றாள்..
அன்றைய தினசரிகளை மகள் ஒழுங்கு செய்தாள்..
குப்பையில்
போடவா என்று என் பதிலுக்கு
காத்திருந்தாள்.
எனி
எதுவும் படிப்பதில்லை..
பார்ப்பதில்லை..
யுத்தம் வேண்டாம்..
வன்முறைச்
செய்திகளைப்படிக்கவேண்டாம்..
உலகில்
எது நடந்தால் எனக்கென்ன?
ஜன்னலை
இழுத்து மூட அருகே சென்றேன்…
பலமான
காற்று
என் காதுள்
இறங்கியது
வன்முறைகளோடு..
mullaiamuthan@gmail.com