கவிதை : உன் மனம் கல்லோ?

ஶ்ரீராம் விக்னேஷ்

பெண்  கண்ணை  மீன்  என்று,
பெருங்  கவியில்  எழுதிவைத்  தேன் !
உன்  கண்ணோ  தூண்டி  லதாய்,
உடன்  என்னைக்  கவ்விய  தேன் ?

சிலைபோல்  நீ  அழகு  என்று,
சிறப்பாய்  நான்  உவமையிட்  டேன் !
சிலைபோல்  நீ  கல்லு  என்று,
சிரத்தினை  ஏன்  முட்டவைத்  தாய் ?

கவி  சொன்ன  வார்த்தையெல்  லாம்
கற்  பனையின்  எச்சமென்  று….
புவி  சொல்லும்  ஓர்கருத்  தைப்,
பொன்  னாக்கித்  தந்தவ  ளே !

புவி  சொல்லும் : கவி  சொல்லும்
போய்ப்  போய்த்தான்  மோத  விட்டு,
செவி  சாயா  திருப்பது  மேன்?
செவி  டோவுன்  மனம்  கல்லோ?

bairaabaarath@gmail.com