கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்…

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்...

“கார்மேகமே வண்ண முமானதோ
கருவண்டே யிரு கண்ணென வானதோ
தூம்பு வடிவே சிரம ணிந்த இருகொம்பென யானதொ
முடிசூடிய கோனே யென்றலும் மணிமகுட மொன்றே;
தன்தலை யதனிலே மகுடமென வீற்றிருக்கு மிருகொம்புடனே
முடிசூடா மன்னனென உலவும் கோலங்கொண்டே
புவியழியும் தருண மெனினும் சிறுசலனமே துமற்றே
கூற்றுவனின் ஊர்தியாகிய தென்றதாலெ
தூற்றுவோ ராயிரமிங்கே.

மனமது குன்றஆது மடிசோர்ந்த பாலது பயமறியாக்க ன்றோ
களவுக்கலை வித்தகரோ
மேதினி முற்றமும் மேவிய
பரம்பொருளோ வெனும் பேதமே யறியாது தான் வழங்கி;
கதம் கொள்ளா குணமும் கதறியழுதிடஆ திடமும்
ஒருசேர்ந்த யிடமுமாகி;
அருமை அறியா மானிடமும்
எருமை யென்றே ஏசினாலும்
பொறுமை எனும் அணிகலனோடே
நேர்செருத்திடா நிலையதனில்
வாழ்வது உம் சாத்தியமோ!”

jambu.ganesh@gmail.com