பனி கழுவிய
பூக்களைப்போல்
சிரித்திருக்கும் பிள்ளைகள்
நிலம் பிடிக்கவென
புகுந்த ஆயுததாரி போல்
பிரம்போடு நுளையும் நான்
ஆள் அரவம் கேட்டு
மிரண்டு நிற்கின்றன கள்ளமில்லாத
பள்ளி முயல்கள்.
பொல்லாத மனிதனைக்கண்டு
இல்லாத மனிதன்
நடுங்குவதா…?
அது தான் படிப்பு
எனக்கான இன்றைய அச்சாத் தலைப்பு
சொல்லுங்கள் பிள்ளைகளே.
எந்த மிருகம் உலகில் பயங்கரமென்று…?
ஒரு வெள்ளை உள்ளத்திலிருந்து
பளீரென கொப்பழித்தது
சிங்கமென்று
தவறு பிள்ளாய்
தவறு
சிங்கம் பழகுவதற்கு அசிங்கமல்ல
வித்தை காட்டுபவன் முகத்துக்கு
முத்தமும் கொடுக்கிறதே.
அதனது வீட்டுக்குள்
மரங்கள்
சாமரை வீசும் காட்டுக்குள்
போவதனால் தானே
உயரைக்குடிக்கிறது
பசிதீர்க்க உணவாய் கடிக்கிறது.
வேறு என்னவென்று
அடுத்தவளைப் பார்த்தேன்.
நீருக்குள்ளே நெளிந்து
அதன் வேருள்ளே ஒழிந்து
ஊறுகள் செய்யும் முதலை என்றது
பிஞ்சுக்கிளையிலே
வெடித்த
முதல் துளிர் போலிருந்த
ஒரு பிள்ளை
முதலையின் குணத்தை
முற்கூட்டியே தெரியாதா குழந்தாய்.
நீர் வற்றிய ஆற்றுக்குள்
கால் புதையும் சேற்றுக்குள்
இரை வரும் வரை
பாத்திருந்து
இருள் திரையாய் காத்திருந்தே
கடிக்கிறது
தெரிந்தும் எதற்காக அங்கே
கால் வைக்கிறாய்.
வேறுபதில் ஏதுவென
பார்வையால் துளாவினேன்.
ஆள் அரவமற்ற காட்டுக்குள்ளோ
முள்ளுள்ள கூட்டுக்குள்ளே
ஒளிந்து
விசத்தை வீசிக்கொல்லும்
நீள் அரவமென்றது
குயில் குரலில் ஒரு குழந்தை.
அதுவும் தப்பு
பாம்பு
எமைக்கண்டு தான் நடுங்கிறது.
அந்தப்பயத்திலே தான்
பற்களால் எமை புடுங்குகிறது.
பதிலை சொல்லவா
கண்ணுகளா
என் முடிச்சை நானே அவிழ்க்கவா
மௌனப் பதில்
சம்மதம் சந்தது.
ஒரினம்
அது முதலையின் மூர்க்கம்
சிங்கத்தின் சீற்றம்
பாம்பின்விசம்
கொண்டு
சிலந்தி வலை இழைத்து
அருகே வரவழைத்து
உலையில் வைத்து உசிரோடு தின்னும்
அது நீரிலே
நெழியாது
காட்டிலே அலையாது
பற்றையில் பதுங்காது
அதன் பெயர் மனிதன் என்றேன்.
திகைத்துப் போயினர் பிள்ளைகள்.
ஆமாம் கண்ணுகளா
ம…னி…த…ன்
இன்னும் சொன்னேன்.
அது
முதிர்வடைந்த நரி
வரியில்லா புலி
பறித்துண்ணும் காக்கை
வலை பின்னா சிலந்தி
சீறும் பாம்பு
பொய் கூறும் கிளி
எல்லாம் கலந்த பிறப்பு
மிருகத்துக்கு
சூதுவாது தெரியாது
புறமுதுகு
பேசாது
குறிப்பாக காட்டிக்கொடுக்காது
மனிதனிடம் தேவை அவதானம்.
பிள்ளைகளே
சோக்கிரட்டீஸ் எனும் தத்துவ ஞானி
பகலிலும் விளக்கோடலைந்தானாம்
மனிதனைத் தேடி.
ஆகையால்
டார்வினின் கொள்கையை
பரிசீலனை செய்
குரங்கிலிருந்து தோன்றினான் மனிதனென்ற
கருத்தை மூடி