காலத்துக்காலம் நாடுகளில் இலக்கியக் குழுக்கள் இயங்கும். இவற்றின் பின்னால் இவற்றின் சீடர்கள் இணைந்து இவர்களின் அங்கீகாரத்துக்காக அலைவார்கள். ஆதரவாகச் செயற்படுவார்கள். பதிலுக்கு இவர்கள் சீடப்பிள்ளைகளின் படைப்புகள் அவை எத்தகையவையாகவிருந்தபோதும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் அங்கீகாரம். இதுதான் இதன் பிரதான நோக்கம். இக்குழுக்கள் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் & சஞ்சிகைகளைக் கைகளில் போட்டுக்கொள்வார்கள். அவையும் இக்குழுக்களின் பிதாமகர்களைத் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். இவை போன்ற இலக்கியக் குழுக்களின் ஆதிக்கம் முன்பு பலமாக இருந்தது. ஆனால் இன்று இணையத்தின் வருகை, முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் வருகை அவ்வகையான ஆதிக்கத்தை ஆட்டங்காண வைத்து விட்டது. இணையத்தின் மூலம் உலகத்தின் பல்வேறு பாகங்களிலுமுள்ள வாசகர்களை இலகுவாக எழுத்தாளர்கள் அணுக முடிகின்றது.
கனடாவைப்பொறுத்தவரையில் தற்போதுள்ள குழுக்களில் முக்கியமானது மூன்று குழுக்களின் கூட்டிணைப்பு. ‘அன்னை -இல்லம்’ பத்திரிகை, ‘நேரம்’சஞ்சிகை மற்றும் ‘தமிழ்-விருது’ ஆகிய குழுக்கள் இணைந்து கூட்டுக் குழுவாக இயங்குகின்றன. இக்குழுக்களில் இணைந்து முனைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் தீவிரமாக இயங்குகின்றார்கள். இவர்கள் தம் குழுக்களைச் சாராதவர்களின் படைப்புகளை வாசிப்பதில்லை. அவை பற்றிக் கதைப்பதோ , எழுதுவதோ இல்லை.
எழுத்தாளர்களே! முதலில் இக்குழு மனப்பான்மையை விட்டு வெளியே வாருங்கள். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டியது போதும். இருப்பு சிறிது. இதற்குள் இவ்வகை ஆட்டம் எதற்கு? விருதுகளுக்காக , அங்கீகாரத்துக்காக அலையாதீர்கள். உங்கள் படைப்புகளே உங்கள் பலம். உங்கள் படைப்புகள் மூலம் உங்களை நிலை நிறுத்துங்கள். உங்களுக்குக் குழுக்களின் தயவோ , அரவணைப்போ தேவையில்லை. நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். இணையத்தை நன்கு பயன்படுத்துங்கள். உங்கள் படைப்புகளை எல்லைகளைக் கடந்து வாசகர்களிடம் கொண்டு சேருங்கள். பயனை எதிர்பாராதீர்கள். உங்கள் படைப்புகளில் சிறப்பிருப்பின் அவை நிச்சயம் உங்களை நிலை நிறுத்தும். உங்கள் படைப்புகளில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையெனில் இலக்கியக் குழுக்களை நாடுங்கள்.
ஒன்றைக் கவனத்தில் கொள்ளுங்கள். பாரதியாருக்குப் பெரிதாக யாரும் விருதுகளைக் கொடுத்ததில்லை. ஆனால் இன்று அவரது படைப்புகளை வைத்துப் பலர் விருதுகள் பெறுகின்றார்கள். முனைவர் பட்டம் பெறுகின்றார்கள். பாரதியாரை முன் மாதிரியாகக் கொண்டு வாழுங்கள்; வாசியுங்கள்; சிந்தியுங்கள்; எழுதுங்கள். அவற்றால் நிச்சயம் மானுடர்கள் பயனடைவார்கள்; இன்புறுவார்கள்.
முகநூலில் மேற்படி பதிவுக்கு இடப்பட்ட எதிர்வினைகள்:
Noel Nadesan: Canada got this kind of literature engineers. I know .
Sivakumary Jeyasimman: Agree
Sreeno Sri Sreesu: 1993 இலேயே(19 June,1993) மொன்றியலிருந்து ரொறொன்ரோ வந்து, கனடாவின் முதலாவது தமிழ் இலக்கிய அமைப்பான ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணைய’த்தை உருவாக்கியவன்.(FOUNDING SECRETARY) தொடர் வரலாறு நம்பிக்கை தருவதாக இல்லை..!! எட்டாந்தர எழுத்தாளர்கள் தான் மௌலி சூட்டப்படுகிறார்கள்..!! சந்தோஷமென்றால் சரி..!!
Rajes Bala: Well said.
SK Rajen காலத்திற்கேற்ற பதிவு. தைத்திருநாளுக்கு முதல் நாளில் பழையனவற்றைப் புறத்திலிருந்து மாத்திரமல்ல அகத்திலிருந்தும் அகற்றி புதிய எண்ணங்களை மனதில் பதித்து ஒழுகுதல் யாவர்க்கும் நன்றே!
Thuvaraka Thavaththurai : Correct
Tam Sivathasan: Another form of organized crime, as old as prostitution 😉
Balachandran Muthaiah: Tam Sivathasan could be “as same as..’
Siva Sivapalan : அருமையான கருத்துகோள்????????
Akathiyan Tholkapiyan : அரசியலென்பது ஒரு அரச முறைமைச் செயற்பாடு என்பதனைக் கடந்து அதுவே அனைத்து மானிட வாழ்வியல் தில்லு முல்லுகளுக்கான கோட்பாடாகி விட்டது , அரசியல் சித்து விளையாட்டுகள் தெரியாததனால் தான் அன்று பாரதியின் இழப்பு வீடு வெறும் பதின்நான்கு பேருடன் ஒப்பேறியது , இன்று அவன் எழுத்து உலகாள்கிறது.. திறமையே வெற்றியின் உண்மையான திறவுகோல்… நல்ல பார்வை…!
கணன் சுவாமி: படைப்பை அடிப்படையாக வைத்து எதுவும் இங்கு இல்லை என்பது தான் பிசகு. படைப்பாளி என்ற ஒரு ஆட்டிபிஷல் முத்திரையை வைத்து சாகசத்தை நிகழ்த்த முடியாது என்பது படைப்பாளிகள் என்று சொல்பவர் பலருக்கு தெரிவதில்லை.!
Manoharan Periyasamy Manoharan Periyasamy: பாரதியாரை முன்மாதிரியாக வைத்து வாழுங்கள்.வாசியுங்கள்.சிறப்பு நண்பரே…
Alex Paranthaman: கருத்தாழம்மிக்க பதிவு. வரவேற்கிறேன்.
ngiri2704@rogers.com