முன்னுரை
மனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சி பெற்ற அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் கலைகளும் தோன்றிவிட்டன என்று கூறலாம். நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்க்கை முறைகளையும், வரலாற்றின் குறைகளையும் நிரைகளையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்களே எனில் மிகையன்று. அவை மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் வாழ்வில் நெறிமுறைகள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் கண்ணாடி என்று கூறலாம்.
ஆய்வு பொருள்
திருவண்ணாமலை மலை மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினாக விளங்கும் இந்து மலை மலையாளி மக்களின் வாழ்வியல் முறைகளை ஆய்வதே இவ்வாய்வின் பொருள் ஆகும்.
ஆய்வு நோக்கம்
திரு+அண்ணாமலை = திருவண்ணாமலை என்றாயிற்று. இந்த மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் சவ்வாது மலை உள்ளது. சந்தனம், சவ்வாது போன்ற வாசனை பொருட்கள் அங்கு விளைந்த காரணத்தால் சவ்வாது மலை என்று பெயர் பெற்றது. இந்த சவ்வாது மலையில் மலையாளி எனும் சமூகத்தினர் தங்களது வாழ்வியல் சடங்கு முறைகளை மரபு வழுவாமல் தங்கள் முன்னோர்களின் வழியே பின்பற்றி செய்து வருகின்றனர். இதுவரை எவ்வித ஆய்வும் செய்யவில்லை. இவ்வாய்வே முதன் முறையாகும். அம்மக்களின் வாழ்வில் கடைபிடிக்கும் சடங்கு முறைகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பிற மலைவாழ் மக்களிடமிருந்து இவ்வினத்தினர் வேறுபடும் தன்மையைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வு மூலங்கள்
இக்கட்டுரையின் ஆய்விற்காக கள ஆய்வில் சேகரித்த தரவுகளே முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன.
ஆய்வுகளம்
தென் தமிழகத்தில் பரவலாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மையமாகக் கொண்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள இந்து மலையாளி, மலையாளி இன மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றைச் சேகரிக்க இக்களஆய்வு துணைபுரிந்தன.
ஆய்வு எல்லை
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சவ்வாது மலை.
மலையாளி மக்கள் அறிமுகம்
தமிழக மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்திலுள்ள சவ்வாது மலையானது கடல்மட்டத்திலிருந்து சராசரி 3000 அடி உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அமைந்துள்ளது. 2016ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 40904 ஆகும். இப்பகுதி ஊராட்சி அமைப்பில் செயல்பட்டு வருகிறது. முழுமையும் வட்டாச்சி எல்லைக்குள் உட்பட்டே வருகிறது. தமிழக மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு மதப்பிரிவினர் வசித்து வருகின்றனர். அங்கு இந்து மலையாளி இன மக்கள் 279 கிராமங்களில் (குடில்களில்) வசித்து வருகின்றனர். ஆண்கள் 23,952 பேரும் பெண்கள் 23,129 என்ற கணக்கு விகிதத்தில் உள்ளனர். இவர்கள் கல்வியிலும் தொழில் ரீதியிலும் முன்னேறிய பழங்குடியினராகக் காணப்படுகின்றனர்.
ஆட்சி எல்லை
சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ஜமுனா மத்தூர் என்ற ஒரே வருவாய் கிராமத்தை உள்ளடக்கிய 33,004 ஹெக்டெர் நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
1. மாவட்டத்தின் பெயர் – திருவண்ணாமலை மாவட்டம்
2. ஊராட்சி பெயர் மற்றும் நிலை – ஜமுனா மத்தூர் நான்காம் நிலை
3. வருவாய் கிராமங்கள் – 5, 36 (சவ்வாது மலைக் குன்றுகள்)
4. பரப்பளவு – 33,0004 ஹெக்டெர்
5. மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள் – 279
இந்து மலையாளி
மலைவாழ் மக்கள் வசிக்கும் 229 குடிகளில் இந்து மலையாளி மக்கள் வசிக்கின்றனர். சவ்வாது மலை முழுமையிலும் இந்து மலையாளி மக்கள் வசித்து வருகின்றனர். சவ்வாது மலை அல்லாமல் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள புதூர் மலையிலும், கொல்லிமலை ஏலகிரி மலையிலும் இவ்வின மக்கள் வசித்து வருகின்றனர்.
இனப்பிரிவு
ஒவ்வொரு இன மக்களுக்கும் அவ்வினம் தோன்றியதற்கான காரணம் ஏதேனும் ஒன்று இருக்கும் என்று முன்னோர்கள் கூறுவது மரபு. அது போன்றே இந்து மலையாளி என்னும் இனத்திலும் இவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றுவதால் இந்து என்றும் மலைகளில் வசிப்பதால் மலையாளுபவர், மலையாளி என்றாயிற்று. 1877ம் ஆண்டு மேல்பட்டு என்ற இடத்தில் ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற அறிவியல் ஆராய்ச்சி மையமே இக்கண்ணாடி மாளிகை ஆகும். அது அமைக்கப்பட்ட பின்னரே இந்து மலையாளி மக்கள் அங்கு வசிப்பதாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
வாழிடத் தேர்வும் – வீட்டமைப்பும்
மனிதனாகப் பிறந்த அனைவருக்குமே அவர்களின் வசதிக்கேற்ப குடியிருக்க ஓர் இடம் அவசியத் தேவையாக உள்ளது. என்பதை யாராலும் மறுக்க முடியாது. பண்டையத் தமிழர்கள் தங்களது இருப்பிடங்களை முறையாக பகுத்து வாழ்ந்தனர். அவற்றை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனப்பெயரிட்டு வழங்கினர். நிலத்திற்கு ஏற்ப தொழில் செய்தனர் செய்யும் தொழிலுக்கு ஏற்ற தெய்வத்தையும் தொழுதனர். காடுகளில் வாழும் ‘இந்து மலையாளி’ தங்களின் சூழ்நிலைக்குஏற்ப வாழிடங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்புப்பெற்றுத் திகழ்கின்றனர்.
இம்மக்கள் வீடுகட்ட சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் பார்க்கின்றனர். வசதியுள்ளவர்கள் காறைவீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் வசதியற்றவர்கள் ஓலை குடிசையிலும் வாழ்கின்றனர். ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அறைகள் கூட உண்டு. பெரும்பான்மையான வீடுகளில் திண்ணை அமைப்பும் உண்டு.
இந்து மலையாளிகளின் தோற்றம்
இந்து மலையாளி இன மக்களில் பெரும்பான்மையானோர் சராசரி மனிதர்களைப் போன்று காணப்படுகின்றனர். சிலர் இதிலிருந்து வேறுபட்டு வெளிர் நிறத்திலும், கோதுமை நிறத்திலும் வட்டமுகம், சப்பை மூக்கு, தலைமுடி நீட்டமாகவும் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். நல்ல நிறமுடையவர்களாகவும் உள்ளனர். பெண்கள் சாதாரண பெண்கள் அணியும் ஆடையையே அணிகின்றனர்.
தொழில்முறை
நாட்டில் போர் கருதியோ, பொருள் ஈட்டல் கருதியோ தலைவியைப் பிரிதல் ஆடவரின் கடமை, கற்புடை மகளிர் அத்துயரையும் பொறுத்து ஒழுகுதல் வேண்டும்.
‘கொங்கு வேளிர் ஆண்கடன் அகறல் அது நோன்றொழுகுதல் கற்புடை மகளிர் கடன்’
என்று சங்கப்பாடல் கூறுகிறது.
இவ்வாறே மலையாளி மக்கள் தேன் எடுப்பதையே தமது பாரம்பரியத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதை தவி, விறகு சேகரித்தல், சாமை, திணை, கொல்லு, எள், மக்காச் சோளம், கரும்பு உணவுகளுக்கென்று தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்து கொள்கின்றனர். பண்டம் மாற்றுவதற்கும் அவசியத் தேவைகள் இருக்கும்போது மட்டுமே தங்களின் இருப்பிடங்களை விட்டு நகரங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
புழங்கு பொருட்கள்
காடுகளில் வாழும் மலையாளி வாழ்வும் மேம்பாடுடையதாகவே காணப்படுகின்றது. முன்னோர்களின் காலத்தின் போதுதான் மண்ணால் செய்த பொருட்களை உபயோகப்படுத்தியுள்ளனர். நகர வாழ்க்கையின் தாக்கம் இவர்களிடம் காணப்படுவதன், மண் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்த்து அலுமினியம், எவர் சில்வர் மற்றும் ஈயத்தால் ஆன பொருட்களை தற்போது பயன்படுத்துகின்றனர்.
கல்வி நிலை
வாழ்விற்கு ஒளிவிளக்காக அமைவன கல்வி, பயன் பாட்டுக்கல்வியே. விஞ்ஞான உலகில் சிறந்த கல்வியாக மதிக்கப் பெறுகிறது.
எழுத்தறிவு தொழிலறிவு இயற்கைத் தத்துவ அறிவு ஒழுக்க பழக்கங்கள் இவை உணர்த்தும் முறையே கல்வி
என கல்விக்கு இலக்கணம் வரைவகுக்கின்றனர். மகரிஷி மனிதனின் வாழ்வில் நன்மை பயக்கவும், பழிச்செயல் நீக்கவும் கல்வி கருவியாக அமையும் கல்வியைக் குழந்தைப் பருவ முதலே கற்க வேண்டும். கல்விக்கு கட்டணம் செலுத்தாது இலவச கல்வியே குழந்தைக்கு தருதல் வேண்டும். அக்கல்வியும் பு முறையில் பயன்படுத்தும் கல்வியாக அமைய வேண்டும் என்கிறார். பத்து வயதிற்குள் எழுத்துக் கல்வியை முடித்து, இருபது வயதிற்குள் தொழில் கல்வியைக் கற்க வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு கல்வியில் மாற்றம் கண்டால் நாட்டில் கல்வி இன்மை இருக்காது.
கல்வி கற்றவர்கள் கற்ற கல்வியால் பயன் பெறுதல் வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தொடக்க காலங்களில் கல்வியின் தேவையை மலையாளிகள் தங்களுக்கு தேவை என்று சிறிதும் கருதவில்லை. ஆனால் இன்று அரசாங்கம் இம்மக்களின் கல்வி கரத்தை உயர்த்த திட்டமிட்டு SSA எனப்படும் “அனைவருக்கும் கல்வி” எனும் பணியைத் தொடங்கி மாணவர்களுக்குக் கல்வியை கற்றுத் தருகிறது. ஆரம்ப பள்ளியிலிருந்தே படிக்க இலவசவிடுதி வசதியுடன் கூடிய படிப்பினைத் தருகிறது. அதனால் மலையாளிகளின் வசதியுள்ளவர்கள் மட்டுமே கல்லூரி வரை பழக்க வைக்கின்றனர். குறைந்த பட்சம் 12 வகுப்பு வரையும் படிக் வைக்கின்றனர்.
முடிவுரை
எனவே சவ்வாது மலைவாழ் பழங்குடிகளான மலையாளி இன மக்களின் வாழ்க்கை முறை ஆகும். நமது சிதிலமடைத் நகல்களான நம் முன்னோர்களே இவர்களால், காலத்தால் இடத்தால் ஆதலால் மட்டுமே வேறுபடுகின்றனர். இவர்களின் வரலாறு பிற்கால சந்ததியினருக்கு உபயகப்பட்ட வேண்டும். ஒரு ஆய்வு நூலுக்காக எடுக்கப்படட தரவுகளின் இவர்களின் வரலாறு பிற்கால சந்ததியினருக்கு உபயோகப்பட வேண்டும். ஒரு ஆய்வு நூலுக்காக எடுக்கப்பட்ட தரவுகளின் சுருக்கமே இந்தக் கட்டுரை ஆகும்.
* கட்டுரையாளர் – – முனைவர் வி. இரா. பவித்ரா, உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராச்சி நிறுவனம், தரமணி, சென்னை-600113 –
mailto:puviarasu99@gmail.com