சித்திரையே வருக! கவிதைகளிரண்டு!

1_greetings.jpg - 4.88 Kb

சித்திரைப் பெண்ணே சித்திரைப்பெண்ணே
சேதி தெரியுமா?
தமிழர் இனம் இங்கே
தடம் புரண்டு; தறிகெட்டு
பல்லாண்டுத் தரிசுகளாய்
வாழ்கின்றார் கொடுமைதன்னில்
மீட்டெடுப்பாரில்லை
கடைக்கண் பார்வை வேண்டுகின்றோம்
சித்திரைப் பெண்ணே
மடிதனிலே பால் வார்ப்பாய்
மாந்தராய் வாழவைப்பாய்
சிகரத்தில் வைத்தே அழகு செய்வாய்…….!

பூ மணக்கும் புத்தாண்டில்
புதுமைகள் மலரட்டும்
புதிய வரவுகள் மலையாகட்டும்
பிரிவுகள் மறையட்டும்
ஒற்றுமையால் சாதிப்போம்
தூற்றியோர் மலைக்கட்டும்
புறம் பேசியோர் தொலையட்டும்
குணக்குன்றாய்த் தமிழர் எழட்டும்
குறைகள் புறம் தள்ளி இனியென்றும்
வளங்களுடன் வாழ்விப்பாய்
சித்திரைப் பெண்ணே தளராமல்
பாதம் வணங்குகின்றோம்
கண் திறந்து பார்தித்திடுக
சித்திரைப் பெண்ணே…………!

மொழி அழிவிற்கு இனமே
அரிவாள் ஏந்தும் கொடுமை
புனித பூமியில் நிகழ்வது
சிசுவின் வாயில் ஈன்றவளே
குண்டு வைத்தல் தகுமா?
கலையும் பண்பாடும்
சிதறு தேங்காய் ஆனபின்னே
வீரிய இனத்திற்கு வீர வணக்கம்
ஒரு கேடா?
மூளைதனைச் சலவைச் செய்திடு
சுயச்சிந்திப்பைப் பதிப்பாய் 
காலங்கள் கடக்குமுன்னே
கரை சேரும் திக்கைக்காட்டு
தவளைகள் தெளியட்டும்
பிசகின்றிப் பிழைக்கட்டும்
சிந்தையில் உதிப்பாய்
சித்திரைப் பெண்ணே….!

உழைப்பு புவியை மாற்றும்
உழைப்போர் உயர்வார்
மானம் காக்கும் மன்னர்களே
மனித நேயம் துளிர்க்கும்
தேடிய தருணத்தில் இனமானம்
உயர்ந்த நிற்கும் அன்று
தமிழினமே வாழ்த்தும்
சித்திரைப் பெண்ணே……..!

இனிமையின் உச்சம் உன் வரவு
ஏங்கிய உள்ளங்கள்
கொள்வார் தன்னிறைவு
வாழ்க சித்திரைப் பெண்ணே……….!

                    
arunveloo03@gmail.com


ஜய வருட வாழ்த்துக்கள்

– மீ. ராஜகோபாலன் –

1_greetings.jpg - 4.88 Kb

சுற்றிவரு மேபுவியை உற்றுஅள வேயறிவில்
பெற்றவெளி யேகணமும் பெறுஞானம்
கற்றுணர வேநிமிடம் பற்றியிழுத் தேநொடிகள்
அற்றுவிழ வேவிரையும் அறிவோமே

நற்றுவள மேயுற்று கற்றுயர வேபெற்ற
சற்றுநொடி யேபற்றிச் சரியாகப்
பெற்றுயர வேயறமும் நற்றவமு மேதிறனும்
மற்றமன மேநிறைவும் மகிழ்வாக

வெற்றிதர வேவிஜய வெற்றிவர வேஜயமாய்
நற்றபுது வேவருட நலமாக
இற்றுவிழ வேதுயரம் முற்றுணர வேயுயரம்
நற்றமிழி லேஅமுதம் நவில்வோமே

வெற்றியென வேமலரும் சுற்றியநற் சூழ்நிலையும்
குற்றமற வேமதியும் குணமாக
உற்றவரென் றேயெவரும் உறவினமு தேஎனதாய்
அற்புத மேயானசுகம் அடைவோமே

14-04-2014

rajjag@gmail.com