சிறுகதை: அவனும் அவளும்

எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வர- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -வில்லை. அப்படி  எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புக்களும் வேண்டாம். பொறு ஒரு கதை எழதி ரைப் செய்து கொண்டிருக்கிறன். விரைவில் அனுப்பி விடுவேன். அதைப்பார். அதைப்பார்த்திட்டு என்ன மாதிரி எண்டு சொல்லு. கவிதைகள் எழுதுவது நல்லாயிருக்கு ஆனால் சிறுகதை… அந்தரப்படாதை நல்லா வாசி நல்ல புத்தகங்களை வாசி. சும்மா வாசிக்கிறதில்லை. நல்லாக உள்வாங்கிää அதுக்குள்ள போய்த்திளைத்துää ரசித்து வாசிக்கவேண்டும். இவைகள் அவனின் அறிவுரை.

நல்ல காலம் இவர் ஆசிரியத்தொழில் பார்க்கவில்லை. நறுக்காக நேருக்குநேர் பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி மாணவர்களை வழிநடத்தினால் மனமுறிந்து தொடர்ந்து கல்வி கற்பதை விட்டுவிட்டு வேறு ஏதாவது தொழில்தான் பார்த்திருப்பார்கள்.

ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான அறிவும்ää அனுபவத் திரட்டுக்களும்ää கற்பிக்கும் பாடத்தில் பூரண தீர்க்கமான சிந்தனையும் நிறைந்திருக்க வேண்டும் என்று அறிந்திருந்தாள். மாணவர்களின் மனது பாதிக்காவண்ணம் கல்வியைப்; புகட்டுவதில் கையாளும் பல்வேறு முறைகளை பரீட்சித்த காலங்கள் அவள் கண்முன் கரைபுரண்டு ஓடிவிட்டன.

நேருக்கு நேர் சுட்டிக் காட்டும்போது மனதிருத்தித் திருந்தும் பக்குவமும் பெற்றிருந்தாள்.

எவ்வளவு நல்ல குணம் அவனுக்கு. மறைவின்றிக் கூறுவது. நேருக்கு நேரே ஆளைத்தெரியாத போதே அவனின் எழுத்தில் ஒரு கவர்ச்சி. வீட்டிற்கு வந்த ஒரு கடிதம் தான். ஆனால் அவளின் பெயர் குறிப்பிட்டும் வரவில்லை. சம்பிரதாயத்திற்குச் சரி. பரவாயில்லை. அவள் அந்தக் கடிதத்தினைப் பத்திரப்படுத்தி ‘பைலில்’ இன்னும் வைத்திருக்கிறாள். கடிதத்தில் எழுதிய விடயங்கள் அல்ல அதனை எழுதிய முறை. கடிதம் எழுதுவதற்கும் கலை வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
ஆருக்குத் தெரியும்? இலங்கையில் எங்கெங்கோ இருந்த நாங்கள் பிரான்ஸ்ää  இங்கிலாந்து என்று வந்து வாழ்வோம் என்றுää அதுவும் அவனும் இங்கிலாந்துக்கு வந்து எங்கட வீட்டுக்கு வருவான் என்று.

அவனின் சிறுகதையும் வந்தது. அவள் இழைத்துää ரசித்து வாசித்து அதில் அவனைக் கண்டாள்.

அவனோடு பழகும்போது இப்படித்தான் இருப்பான் எனக் கற்பனை செய்தாளோ அப்படியேதான் இருக்கிறான். மாற்றமில்லை. சிரிää சிரி என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள். கதை நல்லம். அனுபவத் திரட்டுக்கள் செறிந்து இருந்தது. கடந்த காலம்ää நிகழ்காலம்ää எதிர்காலத்திற்கு அறிவுரை கூட இருந்தன. இதுதான் சமூகமாற்றத்துக்கான இலக்கியம். எந்த ஒரு இலக்கியமும் வாசகனைச் சிந்திக்கத் தூண்டியது என்றால் அந்தப் படைப்பாளிக்கு வெற்றி என்று அவளின் அப்பா அடிக்கடி கூறுவார்.

கதையை வாசித்து முடிந்ததும் அளவில்லாத சந்தோஷம் அவளுக்கு. தான் சிறுகதை எழுதியது மாதிரி. அவனோடு கனக்க கதைக்க வேண்டும்போல இருக்கு. அது எப்படி? கருத்துக்கள் கட்டாயம் பரிமாற வேண்டும். அவனோடு கதைத்தால் கனக்க விடயங்களை அறியலாம். அறிவை வளர்க்கலாம். மனிதர்கள் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும். ‘உம்’ என்று சும்மா இருக்கக்கூடாது. மனிதர்களின் தேடலின் வெற்றியே இன்றைய உலகின் நவீன வாழ்க்கை.

அவள் தன் தந்தையோடு தர்க்கித்த சில விடயங்கள் வந்து போயின. ஆனால் அவரின் அனுபவங்களைத் திரட்டுவதில் தவறிவிட்டாள். எத்தனை தரம் கேட்டிருப்பார். என்னிடம் கேள்விகள் கேள்?ää என்னோட கதை. கருத்துக்களைப் பதிவு செய்து வை. நல்லாக நூல்களை வாசி வாசி என்று. கேட்டாளா? கழுதையாட்டம் இருந்துவிட்டாள். அனுபவமுள்ளவர்கள்ää தத்துவங்களை விளங்கிக் கொண்டவர்கள் ஏதாவது கூறினால் கேட்கவேண்டும். வயதுக்கோளாறுகளினால் ஏற்படும் ஆசைகளில் கவனத்தைச் செலுத்துவதில் காலத்தைக் கோட்டை விட்டு விடுவார்கள். பேந்து என்ன? பேந்தென்ன நினைத்து நினைத்து முழுசிக் கவலைப்படுவதுதான். என்ன பிரயோசனம்? அந்தச் சுதந்திரம். இப்போ இருக்கா? கழுதைää கழுதை. தன்iயே திட்டக்கொண்டாள்.

இப்போ அவள் யாரிடமாவது கதைக்க முடியுமா? முடியாது. கதைச்சால் போச்சு. தனது குடும்பம்ää மற்றும் வேலைகளைச் சிந்திக்கவும் முடியாது. கனாக் காணுவதாகக்கூடப் பேச்சு. எப்படி விளங்கப்படுத்துவது? எமது சமூக அமைப்பு அப்படிப்பட்டது. நாகரீக நாடுகளில் ஆண்டுக் கணக்காக வசித்தும் என்ன திருத்தம்? பெண்களுக்கு எங்கே சுதந்திரம் கிடைக்கிறது? சில ஆண்கள் தாங்கள் எதையும் செய்து கொள்ளலாம். அது ‘சோஷல்’ என்றாக்கிவிடுவார்கள். ஆனால்ää பெண்கள் மட்டும் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டும். மற்றவர்களோடு கதைக்கக்கூடாது. கதைத்தால் அதற்கு வேறு பெயர். மாற்றுக் கருத்துச் சொல்ல முடியாது. அதற்கு ஒரு பட்டம். எதைச் செய்தாலும் பாராட்டுக் கிடையாது. மனதைப் பொடியாக்கும் கதைகள். எதையும் எழுத முடியாது. அதுக்கும் ஒரு பெயர். உற்சாகப்படுத்துதல் கிடைப்பதில்லை.

மௌனத்தில் தாக்குதல். அவள் எதிர்நீச்சல் போட்டல்லவா வாழ்வில் முன்னேற வேண்டியுள்ளது. என்ன செய்வது?

சில வேளைகளில் ‘செல்’ போனில் அவனை அழைத்து சந்தோஷம்போல் காட்டிக் கதைப்பாள். அப்போ என்னää வீட்டுச் சுவர்களோடா பேசுவது? இயற்கையும் அவளோடு பேசும். கவிதையும் பாடும். இல்லாவிட்டால் பைத்தியம்தான் பிடிக்கும். சில வேளைகளில் அழுகையும்வந்துவிடும் அவளுக்கு.

என்ன செய்வது? அவள் சொல்லிக்கொண்N;டயிருப்பாள். அவன் கேட்டுக்கொண்டேயிருப்பான். அவள் கேள்விகள் கேட்பாள். அவன் பதில்கள் சொல்லிக்கொண்டே இருப்பான். மீற்றர் ஓடிக்கொண்டேயிருக்கும். ‘சட்’டென்று வெடித்து அழுவாள். எதுவுமே அவனால் செய்ய முடியாது. ஆறுதல்படுத்திக் கதைப்பான். எப்படி? சரி… அழாதை. முகத்தைத் துடை. சுடுதண்ணீரில் குளி முதலில். கண்களை மூடு. ஓன்றையுமே சிந்திக்காதே. பின்னர் அந்தப் படத்தைப் பார்.

எந்தப் படத்தை? அவள் சிரித்தாள்.

யேசு படத்தைத் தான்.

அவனும் சிரித்தான்.

எனக்கு அதிகம் வேலை இருக்கு. பேந்து போன் செய்வேன். ஓன்றுக்கும் யோசிக்காதை. ஏதாவது எழுது அல்லது வாசி.

என்ன மூளை அவனுக்கு. சிரிக்க வைத்துவிட்டான். அவனுக்குச் சிரிப்புத்தான் தொழில். அவளும் முன்பு அப்படித்தான் இருந்தாள். உண்மையில் மனிதர்கள் சிரித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். இதயத்திலிருந்து தனக்குள் கூறினாள்.
வெளியில் பார்த்தால் எல்லோரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் என்று எடைபோட்டுவிடுவோம். ஆனால் ஒவ்வொரு மனிதர்களுக்கிடையிலும் ஒரு மகாபாரதக் கதை உண்டு.

ஊரில் பாடசாலைப் படிப்பு முடிந்ததும்ää சிலர் படிப்பை மேலும் தொடர்வார்கள். சிலர் குடும்பப் படிப்பைத் தொடர்வார்கள். குடும்பம்ää பிள்ளைகள்ää வேலைகள்… தனக்கு வயது போய்விட்டது. இதுதான் வாழ்க்கை என்றாகிவிடும். ஆனால் வெளிநாடுகளில் அப்படியில்லை. வயதைப்பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அறிவைத் தூண்டும் வகையில் ஏதாவது கற்றுக்கொண்டே இருப்பார்கள். உடலிலும்ää உள்ளத்திலும் இளமையை உணர்வார்கள். எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? வாழ்க்கையை நிமிடம் நிமிடமாக மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வர்கள்.

அப்பாடி லண்டனில் படிப்பதற்கு என்னென்ன வசதிகள் இருக்கின்றன. இரவு வேளைகளில் கொம்பியூட்டர் வகுப்புகள். ஒரு நாள் வகுப்புக்கு வந்த நண்பியின் முகம் வீங்கியிருந்தது. கண்ணடியில் கறுத்தும் இருந்தது. வகுப்பில் இருந்தவர்கள் எல்லோரும் நண்பியை ஒரு மாதிரிப் பார்த்தார்கள். இவளும் பார்த்துச் சிரித்துவிட்டு இருந்துவிட்டாள். வகுப்பு முடிந்து விட்டது.

‘உடம்பு சரியில்லைப்போல’ … நண்பியிடம் கேட்டாள்.

‘உடம்பும்தான். உள்ளமும்தான். பட்டென்று பதில் சொன்னாள்.

‘ஏதாவது கவலைகள் மனதை வாட்டினால் மனமிசைந்த யாருக்காவது சொல்லிவிட வேண்டும். இல்லாவிடில் அது உடம்பைத் தாக்கி ஆளையே அழித்துவிடும்.

நண்பி; ஒரு பட்டதாரி. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஏற்பட்ட காதல். கருத்துக்கள்ää உணர்வுகளும் ஒன்றுபட்டபோது ஏற்பட்ட காதல். இன்னும் அவளுள் அவன் மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறான் போல இருக்கு. இலங்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவன் கைது செய்யப்பட்டு காணாமல் போய் விட்டான். இதுவரை அவனுக்கு என்ன நடந்ததென்றே யாருக்கம் தெரியவில்லை. காணாதவர்களின் பட்டியலில் அவனும் ஒருவன். பின்னர் குடும்பத்தின் வேண்டுதலில் நண்பிக்கு வேறு திருமணம். கணவரோ பட்டதாரியுமல்ல. பிள்ளைகளும் பெற்றுவிட்டோம். ஆனால் வீட்டில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் எனது காதலை விபரித்து பிள்ளைகளக்கு முன் வைத்துப் பேச்சும்ää அடியும்தான். நான் என் காதலனை மறந்தாலும் என் கணவரால் அவரை மறக்க முடியாதுள்ளது. என்னை வேதனைப்படுத்துவதுதான் வேலை. நான் என்ன செய்ய? நண்பி தன் மனதைக் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
எமது சமூக ஆண்களுக்கிடையில் எப்போதுதான் மனங்கள் பக்குவப்படப் போகுதோ? நண்பியை ஆறுதல்படுத்திக்கொண்டாள் அவள்.

ஐரோப்பியர்கள் சில விடயங்களில் நாகரீகமாகத்தான் நடந்து கொள்கிறார்கள். நேற்று நடந்தவைகள் நேற்றோடு முடிந்தவிட்டன. அதனை  முடிந்தவரை மறந்துவிடுவார்கள். இன்று புதிய நாள் சந்தோஷமாக இருப்போம் என்று நிகழ்காலத்தையும்ää எதிர்காலத்தையும் சந்தோஷமாகக் கழிக்க விரும்புவார்கள். துக்கங்களை விரைவுபடுத்தி மறந்துவிடுவார்கள். எங்களால் முடியுமா?

பிரான்சில்; கொம்பனி ஒன்றில்  வேலை செய்த போதுää பிரெஞ்சுக்கார நண்பி கிறிஸ்தல். அவளுக்கு இருபது வயதுதான் இருக்கும். அவளோடு ஒட்டு என்றால் ஒட்டு இவள். காலையில் மெஷினில் கோப்பி அடித்துக் குடித்தாலும் இருவரும்தான். கன்ரீனில் சாப்பிடப்போனாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள். மாலையில் வீடு திரும்பும்போதும் ஒன்றாகத்தான் திரும்புவார்கள். அவளுக்கு இந்த அன்பு எப்படி வந்ததென்றே புரியவில்லை. ஆச்சரியம்தான். பிரெஞ்சுக்கார முதலாளிமாரிடம் மனிதாபிமானம் நிறைய இருக்கிறதை அவள் உணர்ந்தாள். காலை பத்து நிமிடம் மாலை பத்து நிமிடம் சிறிய ஓய்வு. மத்தியானம் சாப்பாட்டுக்கு ஒரு மணித்தியாலம் ஓய்வு கொடுப்பார்கள். சுக துக்கங்களையும் சக நண்பர்கள்போல் விசாரிப்பார்கள். மனது சந்தோஷப்பட்டு வேலை செய்யக்கூடியதாகவிருக்கும்.

ஓய்வு நேரம் என்றால் காணும் புக்கு புக்கு என்று நடுங்கும் குளிருக்குள் போய்ப் புகைத்துத் தள்ளுவார்கள்.

‘வாடி கோப்பி குடிக்க?’ கிறிஸ்தல் அவளை அழைப்பாள்.

‘வேண்டாம். நான் பின்பு எனது மேசையில் எடுத்துக்கொண்டு வந்து குடிப்பேன்; என்பாள் அவள்.

‘ஒரு சிகரெட் புகையடீ?’

‘எனக்குப் புகைக்கத் தெரியாது. சீ எனக்கு வேண்டாம். நாங்கள் புகைக்கிறதில்லை. வேண்டாம்.

‘சரி வேண்டாம் என்றால் பிரச்சினையில்லை. வா வெளியில்ää வந்து அந்த சுத்த காற்றையாவது சுவாசி. நாள் முழுவதும் கொம்பியூட்டருக்குள்ள மூழ்கி தலையைப் பழுதாக்காதே!’

கிறிஸ்தலின் வற்புறுத்தல். ஓய்வு நேரத்தில் வெளியில் செல்வாள். பனி;;ப்புகாரோடு ஆண்களும்ää பெண்களும் சேர்ந்து வட்டம் போடும் சிகரெட்டுப் புகையின் ஊதல்கள் எல்லாம் சேர்ந்து தலை வெடிக்கும் அவளுக்கு.

புறூனோ பிரெஞ்சுக்காரப் பொடியன்தான். கிறிஸ்தலைவிட ஒன்று ரண்டு வயது கூட இருக்கும். அவனும் வந்து எங்களோடு ஒட்டிக்கொண்டான். கிறிஸ்தலில் புறூனோவுக்குக் காதல் பிறந்துவிட்டது மாதிரியாகத்தான் இருந்தது அவளுக்கு. ஓய்வு நேரங்கள் என்றால் காணும் கட்டிப்பிடித்தபடிதான். கண்ணையும் கண்ணையும் பார்த்துக் கொஞ்சிக்கொண்டேயிருப்பார்கள். அவன் கிறிஸ்தலைத் தூக்கியும் சுத்துவான். யாருமே அவர்களைச் சட்டை செய்வதேயில்லை. இது என்ன ஆக்கினைக்கு இவர்களோடு வேலை செய்ய வந்தேன்? என்று இவள் எண்ணுவாள். ஆரம்பத்தில் இவளுக்கு அந்தரமாக இருந்தது. சில நாட்களில் பழகவிட்டது. அது அவர்கள் சுதந்திரம் என்றாகிவிட்டது. மற்றவர்கள்போல் நாகரீகமான முறையில் நடந்து கொள்வாள். கிறிஸ்தல்ää புறூனோ காதல் மிக விரைவாக வீடு வரை சென்றது. பெற்றோர்கள் எப்படி இதனை அனுமதிக்கிறார்கள். கொஞ்சம் வயது மூத்தவர்கள்கூட அதுகள் சின்னனுகள்ää அப்படித்தான் என்று பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்களே! அவளும் பார்த்து ரசிப்பதுண்டு;.

ஊரில பக்கத்துவீட்டு மலரக்கா யாரோ ஒரு பொடியனைக் காதலிச்சிட்டா. ஏதோ சாதியும் வேறையாம். பாவம் பஸ்சில் பக்கத்தில் இருந்து பிரயாணம் செய்துபோட்டா.

அந்த ஊர் ஆட்கள் பிடித்து என்ன போடு போட்டார்கள். அடியா அந்தப் பொடியனுக்கு. பாவம். மலரக்கா பின்னர் அவனைக் காதலிக்கவில்லை. மலரக்காவுக்கு அம்மாவும் இல்லை. அடுத்த நாள் அம்மம்மா இவளுக்குக் கட்டளை. ‘நீ மலரோட போய் கதைக்கக்கூடாதுää விளையாடப்படாது’

‘ஏன் அம்மம்மா கதைச்சா என்ன?’

‘கதைக்கப்படாது. அவ்வளவுதான்’

காதலிச்ச உடனேயே எப்படி வீடு சென்று வருகிறார்கள். இதென்ன கேவலம். கலியாணத்துக்கு முன்னர் இப்படி…

சில காலங்கள் சென்றதும் புறூனோவும்ää கிறிஸ்தலும் பிரிந்துவிட்டார்கள். இவளுக்கு ஆச்சரியமும்ää அதிசயமாவும் இருந்தது. எந்தவித மனக்கவலையோää தாக்கங்களோ இன்றிக் காணப்பட்டார்கள். உள் மனசுகள் எப்படிப்பட்டவையாக இருந்திருக்கும் என்று இவளுக்குத் தெரியாது. புறூனோவும் வேலை இடத்தை மாற்றிவிட்டான்.

இஞ்ச வாடி சனியனே கிறிஸ்தல். இவ்வளவு விரைவாக உன்னனுடைய காதல் முறிந்துவிட்டதே! காதல் சீக்கிரமே சலித்துவிட்டதா? கேட்கக்கூடாதுதான் ஆனால் கேட்டுவிட்டாள்.
‘ஓம் பழகிப் பார்த்தேன். எனக்குப் பிடிக்கவில்லை.

நீ எவ்வளவு படித்தாய்? கொஞ்ச வயதுதானே!

நடுத்தர வகுப்புத்தான் படித்தேன். தொடர்ந்து படிக்கவில்லை. எனக்கு வேலை செய்ய வேண்டும் போல இருந்தது.

அப்பா அம்மா ஒன்றம் சொல்லவில்லையோ?

இல்லை. பதினெட்டு வயது வந்ததும் நான் தானே முடிவு எடுப்பது. எனக்குப் படிக்க விருப்பமில்லை. காசு சேர்த்துக் கார் வேண்டப் போகிறேன்.

இந்த நாடுகளில் இப்படி வசதிகளை வைத்துக்கொண்டு அறிவுக்குக்கூட முழுக்கு வைத்து விடுகிறார்கள். நாமோ முற்றிலும் மொழிää கலாச்சாரத்துக்கு மாறுபட்ட இடத்தில் வந்து வேலை செய்கிறோம். எமது நாட்டுப் பிரச்சனைகளால் மேற்படிப்பை முடிக்கவில்லை என்று எம்மிடையே எத்தனை உள்ளங்கள் இன்றும் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் வசதிகளை வைத்துக்கொண்டு தவறவிடுகிறார்கள்.

வெளிநாட்டவர்களைவிட  எமது நாட்டவர்கள் எவ்வளவு கெட்டிக்காரர்கள். உண்மைதான். உலகத்தையே ஆட்டிப்படைத்த லண்டன் சாம்ராஜ்யத்துக்க வந்து எங்கட சனம் என்னென்னவெல்லாம் சாதிக்கிறார்கள். அதுக்கும் ஒரு ஸ்பெஷல் மூளை வேணும். லண்டன் அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டுவந்தால்ää அதையும் சுளியோடி பெயர் மாற்ற வேணுமோää வயது மாற்ற வேணுமோää இருப்பிடம் மாற்ற வேணுமோää லோன் எடுக்க புதிய கொம்பனிகள் வடிவமைத்துக் காட்ட வேணுமோ இன்னும் எத்தனை எத்தனை… எப்படியெல்லாம் மூளை ஓடும் தெரியுமா? கொம்பியூட்டர்கள் தோற்றுப் போய்விடும்.

லண்டனில் வந்து யார் யாருக்குக் களவுää பொய்ää தந்திரங்கள் தெரியுமோ அவர்கள்தான் கெட்டிக்காரர்கள். மூளைசாலிகள். பணக்காரர்கள். இது என்ன சிலபேர் சுவாமிமாரிட்டையும்ää சிஸ்டர்மாரிட்டையும் படிச்சுப்போட்டு வந்து எப்படி மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்கிறது. முடியாது. ஓட்டை வாய்கள். எனவே கஸ்டம்தான் வாழ்க்கை.

அவன் கூறினான் எமக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் பதியப்படவேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்துனை அனுபவம் இருக்கிறது தெரியுமா?

வாழ்க்கையில் இருந்து பெறகின்ற அனுபவம் எல்லாமே கல்விதான். இத்தகைய அனுபவங்கள் சிந்தனையைத் தூண்டும்போது அது புதுமை பெற்று பொதுச்சொத்தாக மாறவேண்டும்.

அறிவுச்சுடர் கொழுத்திய சோக்ரட்டீசுக்கு அநியாயமாக மரண தண்டனை வழங்கப்பட்டது. சிறையிலிருந்தபோது சக சிறைவாசிகளோடு  உரையாடிக்கொண்டிருந்தாராம். அவரின் சிந்தனை பல கேள்விகளை உதிர்த்துக்கொண்டிருந்ததாம். அப்போது மற்ற சிறைவாசியிடம் அது பற்றிக் கேட்டாராம். சிறைவாசிக்கோ சோக்ரட்டீசை  நினைக்கச் சிரிப்பு வந்ததாம். நாளை உனக்கு மரண தண்டனை நிறைவேறப் போகிறது. இன்று இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறாயே! ஏன்று கேலியாகக் கூறிக்கொண்டானாம். அதற்கு அவர் நாளை நான் சாவதற்கிடையில்கூட ஏதாவது புதிதாகச் சிந்தித்துவிட வேண்டும் என்றாராம். மரணத்தைத் தழுவும் நேரத்தில்கூட அவரது மனந்தளராத ஊக்கம் எத்தகையது. அதுதான் இன்றுகூட உலகின் தத்துவக் கருத்துக்கள் யாவும் சோக்ரட்டீசின் கருத்துக்களில் அடங்கியிருக்கின்றனவோ! அற்புதமான கருத்துக்கள். அவள் ஆர்ப்பரித்துக்கொண்டாள்.

அன்றுதான் அவன் வீட்டுக்கு வந்தான். சரியான சந்தோஷம் அவளுக்கு. சிறிய ஒரு பாட்டி ‘மாதிரி’ வீட்டில்.

‘சிறுகதை’ மாதிரி ஒன்று எழுதி வைத்திருக்கிறேன்.

கொண்டா பாப்பம். ஆக்கபூர்வமான கதைகள் என்றால் அவதானமாகக் கேட்பான். சோர்வின்றி துரிதமாக இயங்குவான். முக்கியம் தேவையானதொன்று.

‘பட பட’வென்று வாசித்தான். புhர்த்தியா? வாசித்த அவ்வளவும் நல்லாயிருக்கு எழுத எழுத வரும். எழுதி முடி. அது வரும். சரி இப்ப மிச்சத்தை நீ வாசி. நல்லாத் தள்ளியிருந்து வாசி.

அவள் வாசித்துக்கொண்டேயிருந்தாள்…

அவன் அதனைக் கணணியில் ‘ரைப்’ செய்துகொண்டிருந்தான்…

அவள் தொடர்ந்து எழுதவேண்டும்

அவன் தொடர்ந்து ரைப் செய்யவேண்டும்.

இவை சமாந்தரமாகத் தொடரவேண்டும்.

NavajothyBaylon@hotmail.co.uk