‘ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்!

'ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்!‘ஞானம்’ சஞ்சிகையானது, ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்’ ஒன்றை 700 பக்கங்களில் கொண்டுவரவுள்ளது. இச்சஞ்சிகைக்கு பின்வரும் தலைப்புகளில் ஒன்றைத் தெரிவு செய்து கட்டுரை ஒன்று எழுதித்தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கனடாவில்ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் சிறுகதை முயற்சிகள்
கனடாவில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் கவிதை முயற்சிகள்
கனடாவில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் பெண்ணியம் சார்ந்த முயற்சிகள்
கனடாவில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் நாடக முயற்சிகள்
கனடாவில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் இலக்கியச் சந்திப்புகள் நோர்வேயில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் ஒலி ஔி ஊடகம் சார்ந்த முயற்சிகள்
கனடாவில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் சஞ்சிகை முயற்சிகள்
கனடாவில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் நடனம் -இசை சார்ந்த முயற்சிகள்
கனடாவில் ஈழத்துப் புலம்பெயர்ந்தோரின் குறும்படத் தயாரிப்பு முயற்சிகள்

மேற்குறிப்பிட்டது போன்ற வேறு ஒருதுறை சார்ந்தும் தாங்கள் எழுதி அனுப்பலாம். கட்டுரையை 30-03-2014க்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி உதவுங்கள்.

அன்புடன்,
தி. ஞானசேகரன்
பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்

editor@gnanam.info