திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன் – கோவில் கல்வெட்டு

வரலாறுஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்
செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால்
வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி
ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்
பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு
டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _ 

வேளான் – அரசன், அரசமரபினர், ஆட்சியாளன்.

விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேந்தன், மன்னர், அரையன், நாட்டுக் கிழான் அல்லது கோன் ஆகிய நான்கு அதிகார அடுக்கு ஆட்சியாளரும் 10 ஆம் நூற்றாண்டு அளவில் சோழர் ஆட்சியில் தம் பெயருக்குப் பின்னே வேளான் என்ற பட்டத்தை இட்டுக் கொண்டனர். வேந்தனும், மன்னனும் தந்தைக்குப் பின் மகன் என்ற மரபு வழியில் ஆள வந்தவர்கள். ஆனால் அரையர் மற்றும் நாட்டுக் கிழான்கள் வேந்தர், மன்னர் விருப்பில் அரையராக கிழானாக அமர்த்தப்பட்ட எளியோர். இது அவர்களது தகுதி, உண்மைத் தன்மை பொறுத்து அமைந்தது. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவன் மகன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன்கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ளவரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

இக்கல்வெட்டில் சந்தி விளக்கேற்ற இருவரும் சுற்றத்தாரோடு கோவிலில் நுழைந்திருக்க வேண்டும்.  இருவரும் பறையர் சாதியை சேர்ந்தவர்கள் என்பது அந்நாளில் இவர்கள் தாழ்த்தப்படவும் இல்லை, ஒடுக்கப்படவும் இல்லை. தீண்டாமையும் இல்லை. அதோடு பறையர்கள் நாட்டுக் கிழான்களாக ஆட்சியில் இருந்துள்ளனர். செயங் கொண்டன் தன்னை பாட்டாலி காவலன் என்பதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள் வரிசை எண் 41, பக். 11, 2012. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

On Sun, 30 Sep 2018 at 20:28, N. Ganesan <naa.ganesan@gmail.com> wrote:
On Saturday, September 29, 2018 at 6:05:46 PM UTC-7, சேந்தன் கூத்தாடுவான் wrote:

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன்
கல்வெட்டு எண் 362  வடக்கு சுவர்

1.   _ _ _ _ யாண்டு இருபத்து எட்டாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து கூவமான தியாகசமுத்திர நல்லூர் ஆளுடையான் திருவிற்கோலமுடைய நாயனார்க்கு இம்மண்டலத்து மணவிற் கோட்டத்து சிவபுரத்து
2.   _ _ _ _ _ பரையன் பக்கல் இக்கோயில் சிவபிராமணரில் கௌதமன் அரசபட்டனும் கௌதமன் தாழிபட்டனும் கௌதமன் திருவல்லமுடையான் உலகாளுடையான் பட்டனும் காசிவன் பொற்கோவில் நம்பி சோமனாத தேவபட்டனும் இவ்
3.   _ _ _ _ _ _  கைக்கொண்ட பணம் பத்து. இப்பணம் பத்துக்கும் ஒரு சந்தி விளக்கு சிந்திராதித்தவரை எரிப்பதாக பொலியூட்டாகக் கைக்கொண்டோம் இவ்வனைவோம் இவை சென்னெல் பெற்றான் அரசபட்டஸ்ய, இவை பொன்னம்பலக் கூத்தன் தாழி பட்டஸ்ய, இவை உலகாளுடைய பட்டஸ்ய இவை சோமநாத தேவபட்டஸ்ய

விளக்கம் வேந்தன் பெயர் கட்டட மறைப்பால் விடுபட்டுள்ளது. சிவபுரத்தை சேர்ந்த (கட்டடத்தில் பெயர் மறைந்துள்ள) பரையன் சந்தி விளக்கு எரிக்க 10 காசுகளை வட்டிக்கு விட பொலியூட்டாக கொடுத்துள்ளான். 10 காசில் வரும் வட்டியில் சந்தி விளக்கு எரிப்பதாக சிவபிராமணர் மூவர் ஒப்புக் கொண்டனர். சந்தி விளக்கு எரிக்கும் முதல் சிலநாளில் இப்பரையர் தாம் மட்டும் அல்லாது தம் உற்றார் உறவினர் சொந்த பந்தம் ஆகியோருடன் கோவிலுக்கு வந்து மற்றவரைப் போல  இறைவனை தொழுதிருக்க வேண்டும்.  அப்படியானால் பரையர்கள் தமிழ் வேந்தர் ஆட்சியில் தீண்டாமைக்கு உட்பட்டிருக்க வில்லை என்று தெரிகின்றது. அப்படியானால் இந்த வழக்கம் பிற்பட்டு ஏற்பட்ட அயலவர் ஆட்சியில், விசயநகர ஆட்சி அல்லது நாயக்கர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் என்று புலனாகின்றது. இக்கல்வெட்டு சமூக நோக்கில் பரையர் அக்காலத்தே நல்ல முறையில் நடத்தப்பட்டதை தெரிவிக்கின்றது.  ஒரு மிக முக்கியமான கல்வெட்டு.

பார்வை நூல் தென்னிந்திய கல்வெட்டுகள் மடலம் 26

கோவில் தொடர்பான தொடுப்பு https://www.dharisanam.com/temples/sri-thiripuranthakeswarar-temple-at-thiruvirkolam-koovam

கல்வெட்டில் பெயர் முழுமையாக இல்லை. எனவே, தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர், சேசாத்திரி.

….பரையன் என்பது சோழ நாட்டு அதிகாரிகளைக் குறிக்கும் பெயர். விழுப்பரையன், பொருப்பரையன், மூப்பரையன், …. என்ற பெயர்களில் முன்பகுதி கல்வெட்டில் அழிந்துள்ளது. அவ்வளவுதான்.

விழுப்பரையர்கள் விழுப்புரம் அருகே அண்ணமங்கலம், காராணை என்ற ஊர்க்காரர்கள்.  சோழர்கள் தமிழகம் முழுதும் ஆண்டபோது சோழநாட்டிலும், பாண்டிநாட்டிலும் மெரும் அதிகாரிகளாகப் பதவிவகித்தவர்கள். அவர்களில் ஒருவன் ஆதிநாத விழுப்பரையன். தமிழிலே செய்தற்கு அரிதான வளமடல் பிரபந்தம் அவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மிக அரிதான பொருளடக்கம் கொண்ட நூலை கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார் பாடியுள்ளார். அதன் சுவடி தமிழின் இசைநூல் பஞ்சமரபு சுவடி போன்றவை தேடிக் கண்டெடுத்த மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் காப்பாற்றி வைத்தார். அதனைப் ப்ராஜெக்ட் மதுரை திட்டத்துக்கு அளித்தேன்.

விழுப்பரையர்கள் மதுரையில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் மீனாட்சி திருக்கலியான மகோற்சவத்தில் அவர்களுக்கு மரியாதை உண்டு. மீனாட்சி திருமுன் வரவு செலவு கணக்கைப் படிப்பவர்கள் இந்தக் காராணை விழுப்பரையன்மார் ஆவர்.

– நா. கணேசன் –

sseshadri27@gmail.com