‘நாட்டியப் பேரொளி’ பத்மினியுடன் கனடாவிலிருந்து இயங்கும் TVI தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடாத்திய நேர்காணலை இரு பகுதிகளாகத் தனது ‘முகநூல்’ பக்கத்தில் நணபர் வரன் மகாதேவன் பதிவு செய்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நன்கறியப்பட்ட நாட்டியத் தாரகை, நடிகை இவர். ரஷியத் திரைப்படமொன்றில்கூட அம்மொழியினைக் கற்று நடித்திருக்கின்றார். அதன்பொருட்டு ரஷியாவில் கூட அந்நாட்டு அரசு அவரது உருவத்தைத் தாங்கிய முத்திரையொன்று வெளியிட்டுள்ளது. இவ்விதமாக அனைத்து இந்தியாவும் பெருமைப்படத்தக்க நடிகையான இவர் மறைந்தபொழுது அவருக்கு உரிய கெளரவத்தினை அன்றைய தமிழக அரசோ அல்லது இந்திய அரசோ கொடுக்கவில்லை. அதே சமயம் தமிழகத்து நடிகையான ஸ்ரீவித்யா கேரளாவில் மறைந்த பொழுது கேரள அரசு அவருக்கு அரச மரியாதை கொடுத்து இறுதி யாத்திரையைச் சிறப்பித்தது. வரன் மகாதேவன் பத்மினியின் மறைவிற்கு முன், 2004இல் நியூஜேர்சியிலுள்ள பத்மினியின் இல்லத்தில் வைத்து நடாத்திய இந்நேர்காணலில் பத்மினி பல்வேறு விடயங்களைப் பற்றி மனந்திறந்து பேசுகின்றார். பல்வேறு தகவல்களை அவரது நேர்காணலிலிருந்து அறிய முடிகின்றது. பதிவுகள் வாசகர்களுக்காக மேற்படி நேர்காணலிற்கான You Tube இணையத் தொடுப்புகளைக் கிழே தருகின்றோம்:
நாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 1: http://youtu.be/Rh1TaM09hdw
நாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 2: http://youtu.be/sbzd0XwWqDA