நிகழ்வுகள்: கனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்!

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம்        16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர்  நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர்  )  தலைமை வகித்தார்.

தி தமிழ் ஸ்டோரி “ ( The Tamil story) என்ற ஆங்கில நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நூலில் வவேசு அய்யர், புதுமைப்பித்தன், பாரதி முதற்கொண்டு 88 தமிழ்ச்சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன் இதில் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில்..” என்ற கதையும் இடம்பெற்றுள்ளது. மற்றும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சி.ஆர் ரவீந்திரன், சு. வேணுகோபால் ஆகியோரின் கதைகளும் இடம் பெற்றுள்ளன Tranquebar Press, NewDelhi வெளியிட்டுள்ளது. விலை ரூ 850 .

புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பழைய தலைமுறையினரின் வாழ்க்கையையும் எழுத்துப்பாணியையும் அறிந்து கொள்ள இத்தொகுப்பு பயன்படுவதாக கருத்துரைகள் வழங்கப்பட்டன.  சொக்கலிங்கனார் “ அறிவுத்தொழிலும், இலக்கியமும்  ‘ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Kanavu       8/2635, Pandian nagar, Tiruppir  641 602  ( ph. 9486101003 )


subrabharathi@gmail.com