நிகழ்வு (திருப்பூர்) : பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும் ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )
* மக்கள் இசைப்பாடல்கள் ( துருவன் பாலா, து.சோ.பிரபாகர், கா.ஜோதி, சாமக்கோடங்கி ரவி )
* சிறப்பு கவி இரவு நிகழ்ச்சி
28/10/2018 ஞாயிறு மாலை 6 மணி முதல், என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி .,புதிய பேருந்து நிலையம் , திருப்பூர்
கவிதைகளோடும், பாடல்களோடும் , படைப்புகளோடும் வருக,.
– தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்
” திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்”
”திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.. திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் திரைப்பட ரசனையை முறைப்படுத்த பாடத்திட்டங்களும் ஒரு முக்கியப்பங்கு வகிக்க வேண்டும். தனியார் திரைப்படக்கல்லூரிகள்,திரைப்பட நிறுவனங்கள் தரும் படிப்பை மீறி அரசும் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் ” என்று திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஹைதராபாத் பிரகாஷ் ரெட்டி ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ) கூறினார்.
தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் திருப்பூரில் புதன்கிழமை அன்று வினாயகா ஓட்டலில், ( தொடர்வண்டி நிலையம் அருகில் ) நடைபெற்றது. சென்னை கோதண்டராமன் ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைச்செயலாளர் ) தலைமை வகித்தார், திரைப்படக்கலாச்சாரத்தை சீர்படுத்துவதில் திரைப்பட விழாக்களும் , ரசனை வகுப்புகளும் முக்கியப்பங்கு வகிப்பதை பெங்களூர் நஞ்சுண்டையா ( துணைத்தலைவர் – தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பு ) தெரிவித்தார்.
” சமூக அக்கறை, சமூக சீர்திருத்தம் , புதுமையானக் கருத்துக்கள் கொண்ட திரைப்படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். திரைப்பட சங்கங்கள் திரைப்படம் பார்க்கும் ரசனைக் கோணத்தை மாற்றியதில் பெரும் பங்கு வகித்தன “ . என்று எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்கூறினார் .. திருப்பூர் நியூலுக் திரைப்படச் சங்கத்தின் நிறுவனர் விடி சுப்ரமணியன் நீண்ட கால திரைப்படச்சங்கப் பணிக்காகப் பாராட்டப்பட்டார். ஹைதராபாத் திரைப்படச்சங்க நிர்வாகி ரவிக்குமார் நன்றி தெரிவித்தார். ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பு, திருப்பூர் நவகனவு திரைப்பட சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின ) செய்தி : சுப்ரபாரதிமணியன்
subrabharathi@gmail.com