பதிவுகள் இணைய இதழில் பதிப்பகங்களின் அறிமுகம் இடம் பெறும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ்ப்பதிப்பகங்கள் பல நூல்களை வெளியிட்டு தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. உலகளாவியரீதியில் தமிழ் மக்களால் வாசிக்கப்படும் பதிவுகள் இணைய இதழில் உங்களைப்பற்றிய அறிமுகங்கள் மூலம் உலகளாவியரீதியில் உங்கள் நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றித் தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பதிப்பகங்கள் தம்மைப்பற்றிய விபரங்களை அனுப்பி வைத்துப் பயனடைய வாழ்த்துகின்றோம். இப்பகுதிக்கு விபரங்களை அறிவிக்க விரும்பினால் பதிப்பகத்தின் பெயர், வெளியிட்ட நூல்கள், தொடர்பு விபரங்கள் போன்ற விபரங்களை உள்ளடக்கிய சுருக்கமான அறிமுகக் குறிப்பினை அனுப்பி வையுங்கள். அவை பதிவுகளின் ‘பதிப்பகங்கள் அறிமுகம்’ பகுதியில் பிரசுரமாகும். அனுப்ப வேண்டிய முகவரி: ngiri2704@rogers.com
1. பூபாலசிங்கம் புத்தகசாலை, இலங்கை
இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்துக்குக் காலம் பதிப்பகங்கள் பல தோன்றி மறைந்துள்ளன. அவற்றில் பல தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன. அவற்றில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குத் தனி மதிப்புண்டு. தற்போதைய அதன் உரிமையாளரான ஶ்ரீதர்சிங் அவர்களின் தந்தையாரான பூபாலசிங்கம் அவர்களுக்குத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புண்டு. இலங்கைத்தமிழர்களை, இலங்கைத் தமிழ்ச்சஞ்சிகைகளை, பத்திரிகைகளையெல்லாம் வரவேற்று ஊக்கமும் , ஒத்துழைப்புமளித்தவர் அவர். அவரைப்பற்றி இலக்கிய ஆளுமைகள் பலர் தம் நினைவுக்குறிப்புகளில் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் நிலவிய போர்ச்சுழலில் எரிக்கப்பட்டபோது மீண்டும் உயிர்ந்தெழுந்து சாதனை படைத்துள்ளது. தற்போதும் பூபாலசிங்கம் புத்தகசாலை இயங்கி வருகின்றது. புத்தகசாலையுடன் பதிப்பகமாகவும் இயங்கி நூல்களை வெளியிட்டு வருகின்றது.