‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்
பதிவுகள் ஏப்ரில் 2008 இதழ் 100
ஹவானாவின் வீதிகளில் நடக்கும் பொழுது இரண்டாம் உலக போரின் அழிவுகளில் இருந்து இந்த நகரம் இன்னமும் மீளவில்லை என்ற எண்ணமே தோன்றும். அதிகாலை அத்திலாந்திக் கரையோரம் நடந்த பொழுது. என்னுடன் நடந்து வந்தவருடன் கதைக்க ஆரம்பித்தேன். அவரது உரையாடல் முதலில் சில ஆச்சரியங்களை எனக்கு ஏற்படுத்தியது. ஆங்கிலம் சரளமாக கதைத்தார். அடுத்து அவர் ஓர் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பது. மூன்றாவது ஹவானாவின் அதி உயர் கட்டிடம் ஓர் வைத்தியசாலை என்பது. கியுபாவில் ஊதியம் ஓரளவிற்கு அனைவருக்கும் ஒரே தளத்தில் வைத்திருக்கப்படும். இதனால் தொழில் நிலை மாற்றங்கள்- ஏற்ற இறக்கங்கள் குறைவு. ஏங்கு சென்றாலும் சேகுவராவின் படங்களை காணலாம். ஹவானாவிற்கு செல்வதற்கு முன்பாக ஜமெக்காவுக்கும் சென்றுள்ளேன். பாழடைந்த தண்டவாளங்கள். எங்கு பார்ப்பினும், உல்லாச விடுதிகள். அமெரிக்க டொலரைத்தான் எங்கும் பயன்படுத்த வேண்டும். அதி உயர் வளங்கள் கொண்ட ஜமேக்கா தீவு, இன்று அமெரிக்கர்களின் அந்தப்புர உல்லாச விடுதியாகிவிட்டது. அமெரிக்காவிற்கு மிக அருகில் உள்ள (90 கி.மீ) கியுபா தன்னிறைவுள்ள நாடாக மாறிவிட்டது. என்னுடன் நடந்து வந்த வைத்தியர் கூறிய கூற்று “இன்னமும் நாலு சந்ததிகளுக்கு தேவையான வசதிகள் இப்பொழுதே ஏற்படுத்தியாகிவிட்டது “ என்பதேயாகும்.
கியுபா சென்ற பல நண்பர்கள் கியுபா மிகவும் ஏழ்மையான நாடு எனக்கூறுவார்கள். அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிப்பூச்சுக்கு, வான் உயர் கட்டிடங்கள், ராஜ, ராஜ சோழக்காலத்து கட்டிடங்கள், அந்தப்புரங்கள், புஷ்பக விமானங்கள். உள்ளே சென்று மிச்சிகனின் அந்தப்புரங்களையும், சிக்காகோவின் வெளி வட்டங்களையும் பார்ப்போருக்கு அமெரிக்கர் பலர் வறுமையால் வாடுவது தெரியும். உடுக்க உடை, உண்ண உணவின்றி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினையே அழித்து விடுவோம்” எனக் கூறி, ஈராக்கிய மக்கள் மீது குண்டு மழை பொழியும், வெற்றி பெறாத ஜனாதிபதிகளின் பேச்சுகளைக் கேட்டு பேஸ் போல் விளையாடித் திரியும் மக்களது அவலங்கள் தெரியும்.
அமெரிக்காவிற்கு அருகில் தொடாச்சியான, பயமுறுத்தல்களை சந்தித்து, தொடர்ந்து 12 அமெரிக்க ஜனாதிபதிகளால் பயமுறுத்தப்பட்டு. தலை நிமிர்ந்து வாழும் நாடு கியுபா. சோவியத் யூனியன் போன்ற பலம், பொருந்திய நாடுகளே, அமெரிக்காவிற்கு எதிரான போரில் வீழ்ச்சி கண்ட பொழுதும், கியுபாவை அமெரிக்காவால் வீழ்த்த முடியவில்லை. வியட்நாமில் தோல்வி கண்டுவிட்டு, ரம்போ போன்ற படங்களிற்கூடாக ஆத்ம திருப்திக் காணும், அமெரிக்காவால். திரையில் கூட கனவு காணமுடியவில்லை. கியுபாவின் இந்த ஏற்ற வாழ்விற்கு காரணகர்த்தாவிற்குள் ஒருவரான பிடல் கஸ்ரோவைப்பற்றி, அமெரிக்காவின் பிரபல இயக்குநர்களுள் ஒருவரான ஒலிவர் ஸ்ரோன், ஹவானா சென்று இரண்டு விவரணத்திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டார். இவற்றை அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்ப மறுத்து விட்டன. வழமை போல் சி.பி.சி தஞ்சம் கொடுத்து ஒளிபரப்பியது. இதனை பல அமெரிக்கர்களும் கண்டுகளித்தனர்.
காஸ்ட்ரோ ஒலிவருடனான பேட்டியின் போது “ நான் ஒரு நல்ல தகப்பனாக இருக்கவில்லை” எனக் கூறியுள்ளார். . தனது மனைவிகள், தனது முதல் காதல், மது அருந்துதல், போன்ற பல தனிப்பட்ட விடயங்களை தெரவித்துள்ளார். இதே நிலை ‘சே’வுக்கும் இருந்தது. சே அங்கோலாவில் இருந்து திரும்பிய பொழுது, ‘சே’வின் பிள்ளைகளில் நால்வருக்கு சே “மாமா ரொமன்” எனவே அறிமுகப்படுத்தப்பட்டார். 1959ல் கியுபாவை கஸ்ரோ வென்ற பின்னர் சுமார் 15 தடவைகள் அமெரிக்காவால் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டார். “Alpha 66” என்ற அமைப்பு புளோரிடாவை மையமாகக் கொண்டது. இந்த அமைப்பினர், தொடர்ச்சியாக கியுபாவிற்கும், கஸ்ரோவிற்கும் எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவற்றுடன் Radio Martí and TV Martí போன்ற ஒலி, ஒளிபரப்பு சேவைகளையும், புளோரிடாவில் இருந்து. கியுபாவிற்கு எதிராக செயற்படுத்தினார்கள். இந்த அமைப்பினருக்கு, அமெரிக்க அரசாங்கமே நிதி உதலி வழங்கியது.
பூர்விகக் குடிகள் வாழ்ந்து வந்த இடத்தை 27 – ஜப்பசி 1492 ல் கொலம்பஸ் வந்தடைந்ததார். அன்று தொடங்கி 1902ல் ஸ்பானிய படைகள் வெளியேறும் ஸ்பானியக் குடியரசாக இருந்த கியுபா விடுதலை பெற்றது. 1959ல் பிடல் அதிபராக வரும் வரை கியுபா அமெரிக்க கூலிகளால் ஆட்சி செய்யப்பட்டது.
பிடலின் ஆட்சியின் போது பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆவணி 1960 ல் கியுபாவில் இருந்த அமெரிக்க நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. படிப்படியாக பல தனியார் நிறுவனங்கள் அரசமயமாக்கப்பட்டன. 1961 ல் சி.ஜ.ஏ யினால் பயிற்றுவிக்கப்பட்ட 1500 முன்னால் கியுப பிரசைகள் கியுபாவின் பன்றிக் குடாவை அடைந்தனர் (Bay of Pig). ஆனால் இவர்களால் கியூபாப் படைகளை எதிர் கொள்ளமுடியவில்லை. சுமார் 115 பேர் கொல்லப்பட்னர், 1189 பேர் கைது செய்யப்பட்னர். அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி இந்த சி.ஜ.ஏயின் முயற்சிக்கு ஆதரவாக இராணுவ, கடற்படை உதவிகள் செய்ய மறுத்துவிட்டார். இதனால் இம் முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது. .
இவ்வாறு அகற்றிய சி.ஜ.ஏவால் இதில் தோல்வியே கிடைத்தது. கென்னடியின் கொலைக்கு இதனையும் காரணமாக கூறுவார்கள். பிடல் பொறுப்பேற்று இரு வருடங்களில் கியுபாவில் உள்ள அனைவரும் படித்தவர்களாக மாற்றப்பட்டார்கள். இந்த நிலை 1970 களில் இலங்கையிலும், கேரளா,வங்களாத்திலும் காணப்பட்டது. 1962ல் ரேசன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தேவையான உடையும், உணவும் சகலருக்கும் கிடைக்கும் வழி செய்யப்பட்டது. தங்குமிட வாடகை 70 வீதத்தால் குறைக்கப்பட்டது. வைத்தியாகள் முதல் இரு வருடங்களில் கிராமங்களில் சேவை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் நிறுத்தப்பட்டன. புரட்சிக்கு முன்னர் பாலியல் தொழிலானிகளாக கடமைபுரிந்தோர், புரட்சியின் பின்னர் கல்வி கற்று சமூக நிலை மாற்றப்பட்டார்கள். பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் அற்ற நாடு. ஆனால் இவருக்கு பல மனைவிகள். வாழ் நிலை 1959ல் 59 வருடஙகளாக இருந்தது. 1993 ல் இது 76 வருடங்களாக மாறிவிட்டது. சோவியத் யூனியனுடான நெருக்கமான உறவு, சர்வதேச வர்த்தகத்துக்கு வழி கோலியது. விவசாயம் பெரும் முன்னேற்றம் கண்டது. குறிப்பாக சீனி உற்பத்தி உச்ச நிலையை அடைந்தது. ஜரோப்பாவின் பெரும் பாலான நாடுகள் சோவியத் யூனியன் வசமும், இடது சாரி ஆட்சியானளர்கள் வசமும் மாறியமை, அமைரி;க்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. மூன்றாம் உலக நாடுகள் பல இவற்றை பின்பற்றின.
பிடலின் முதலாவது அமைச்சரவையில் இருந்த 15 அமைச்சர்களில் 6 பேர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர். இதனைக் கண்டு கஸ்ரோ அசையவில்லை. 1926 ஆவணி 13ல் ஓர் கிராம தோட்டத்தில் பிறந்த கஸ்ரோ, கட்டுப்பாடுகள் மிகுந்த கத்தோலிக்க காடசாலையில் கல்வி கற்றார். இவரது தந்தை அமெரிக்க பழத் தோட்டத்தில் வேலை பார்த்தார். ஏழு பிள்ளைகளில் ஒருவராக பிறந்த இவர் ஆதிக்கம், அதிகாரத்தை எதிர்த்தார். சட்டம் படித்து வழக்கறிஞரான கஸ்ரோ அப்போதைய அரசின் கடுங்கோலாட்சிக்கு எதிராகப் போராடினார். இதனால் இரு வருட சிறைவாசத்தை அனுபவித்து விட்டு வெளியேறி ஓளிந்து வாழ்ந்த காலத்தில் முதன் முறையாக சே யை சந்தித்தார். பின்னர் இரு மாதங்கள் சே யுடன் ஒன்றாக சிறையில் இருந்துள்ளார்.
சே யும் கஸ்ரோவும் இன்றைய கியுபாவின் சிற்பிகளாவார்கள். உலகமயமாதலுக்கு எதிராக செயற்பட்டுவரும், ஓரெயொரு நாடு கியுபா ஒன்றுதான். “சோசலிசத்தை அறிந்தவர்கள் அதற்குள் உறைந்து எதிராக இயங்கும் முதலாளித்துவத்தை நன்கு அறிவார்கள். ஸ்ராலின் போன்ற தலைவர்கள் தத்துவாதிகள். இயல்பு நிலை அறிந்து செயல்படும் தலைவர். ஆதனால் தான் அவரது காலத்தில் சோவியத் யூனியன் வெகு வேகமாக முன்னேறியது. இன்றைய புஷ்ஷின் அரசு மிகவும் மோசமான அரசு. ஊலகத்தையே அழிக்கப் போகின்றது. மூன்றாம் உலக நாடுகளை உலக வங்கி ஆட்சி செய்கின்றது. உலக வங்கியை அமெரிக்கா ஆட்சி செய்கின்றது. மூன்றாம் உலக நாடுகளின் தேசிய உற்பத்தி இந்த சங்கிலியூடாக அமெரிக்காவை அடைகின்றது. கியுபா இவை அனைத்தையும் உணர்ந்துள்ளது. அதற்கான எதிர்ப்புச் சக்தி எங்களிடம் உள்ளது. ஈராக்கில் நுழைந்த அமெரிக்கா உலகின் சந்து பொந்துகைளை தேடுகின்றது. மிகவிரைவில் பல சந்துகளுக்குள் அமெரிக்காவை காணலாம்” இவ்வாறு கஸ்ரோ தெரிவித்துள்ளார்.
தென், லத்தீன் அமெரிக்காவின், பெரும்பாலான நாடுகள் இடது சாரி நாடுகளாக மாறுவதற்கு இவர் பக்கபலமாக இருந்தாலும், அமெரிக்காவே காரணகர்த்தா.
சேயுடன் கஸ்ரோ இணைந்து செயற்பட்டதனால் கியூபாப் புரட்சி சாத்தியமாயிற்று. சே பின்னர் கியூபாப் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார். கியூபாப் புரட்சிக்கு பிரதான காரணகர்த்தா சேகுவரா. சேயுடன் கஸ்ரோ இணைந்து செயற்பட்டதனால் கியூபாப் புரட்சி சாத்தியமாயிற்று. சே பின்னர் கியூபாப் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார். சே கியூபா விட்டு வெளியேறி, பின்னர் மீண்டும் கியூபா திரும்பிய பொழுது கஸ்ரோவுடன் நீண்ட உரையாடலில் ஈடுபட்டார். இவர்கள் இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது என்பதனை கஸ்ரோ மறுத்துள்ளார். சே யும் எத் தருணத்திலும் வெளிப்படுத்தவில்லை. சே யின் கொலைக்கு சி.ஜ.ஏ யே காரணம். இக் கொலை பற்றி கஸ்ரோ அறிந்திருக்கவில்லை என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கஸ்ரோ இன்றைய கியுபாவின் வளர்ச்சிக்கு உத்தரவாதமிட்டதுடன், நாளைய கியுபாவையும் வளர்த்தெடுத்துள்ளார். ஜோர்ஜ் புஷ்; இன்றைய உலகை மாத்திரமல்ல, நாளைய உலகையும் அழிக்கும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளார். அடுத்த அமெரிக்க அதிபராக ஒரு பெண்மணியோ, கறுப்பினத்தவரோ வரமுடியாது. அமெரிக்க பெரும் வணிக முதலைகள் அதற்கு தயாராகவில்லை. ஆதலால் தான் மக்கெய்ன் தன்னை இப்பொழுதே புஷ்ஷின் வாரிசாக நினைக்கத் தொடங்கி விட்டார். கஸ்ரோவும், புஷ்ஷும் ஒரே கால கட்டத்தில் விடைபெறுகின்றார்கள். கஸ்ரோவை நாளைய வாழ்விற்கு அத்திவாரமிட்டுள்ளார். வெற்றி பெறாத ஜனாதிபதி புஷ் உலகை பத்தையாக்கி விட்டு சென்றுவிட்டார். அமெரிக்காவை பாலைவனத்தை நோக்கி…. கஸ்ரோவின் மறுபக்கத்தை பிறிதொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
உசாத்துணை நூல்கள்
My life – Fidel Castro – Penguin Books
Che Guerva by Eric Luther and Ted Henken
Cuban Revolution Reader by Julio Garcia Luis
Latin America 2003
Castro and Cuba by Angelo Trento
Castro’s Daughter by Alina Fernandez
raguragu100@hotmail.com