பதிவுகளில் அன்று: மாலனின் எதிர்வினை: கலாச்சாரம், பின்நவீனத்துவம், மார்க்ஸியம் ….

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


மாலன்பதிவுகள் இணைய இதழில் வெளியான எழுத்தாளர் மாலனின் எதிர்வினையொன்று.

பதிவுகள் யூன் 2002 இதழ் 30

ஜூன் 3,2002

அன்புள்ள வி.என்.ஜி, கலாசாரம் குறித்த என் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதற்காகவும் அவற்றைப் பதிவு செய்யவும் முன் வந்துள்ளமைக்கும் நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறேன். விவாதங்களில் – குறிப்பாக தமிழ் இலக்கிய உலகில்/ தமிழ் இணைய இதழ்களில் நிகழும் விவாதங்களில் இரு வகை அணுகுமுறைகள் காணப்படுகின்றன. தான் இருபது முப்பது ஆண்டுகளில் படிதறிந்தவற்றையெல்லாம், விவாதப் பொருளுக்குத் தேவையோ இல்லையோ, கொட்டி இரைத்து, விவாதத்தை அதன் தடத்திலிருந்து பிறழச் செய்வது. ‘எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார்’ என்ற மனோ பாவத்தில் மறுதரப்பை அச்சுறுத்தும் போக்கு அது. ஆங்கிலத்தில் sabre rattling என்றழைக்கப்படும் போக்குஅது. மற்றொன்று விவாதத்தை ஒரு இகழ்ச்சித் தொனியோடு அணுகி பொறுப்பற்ற, (flippant) சாரமற்ற கருத்துக்களைப் பொழிவது. பெரும்பாலும் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற மனக்குறை உள்ளவர்கள் பின் பற்றும் அணுகுமுறை இது.

இது தவிர இன்னொரு அணுகுமுறை உண்டு.விவாதங்களின் போது உலகெங்கும் பின் பற்றப்படும் முறை அது. தான் படித்தறிந்த கருத்துக்களை, தன் அனுபவத்தின், விழுமியங்களின் அடிப்படையில் தொடர்ந்து சிந்தித்து, அதைத் தன்வயமாக்கிக் கொண்டு விவாதங்களில் வெளிப்படுத்துவது. இஇவர்கள் நான்  இன்னின்ன படித்துள்ளேன் என்று சட்டையில் அந்து கொள்வதில்லை. குத்துச் சண்டைக்குப் போவதைப் போல ஒரு ‘தயாரிப்போடு’ ‘களம்’  இறங்குவதில்லை.விவாதத்தில் ‘வெற்றி’ ‘தோல்வி’களை எதிர்பார்ப்பதில்லை. காரணம் விவாதத்தையும் ஒரு கற்றல் அனுபவமாகக் கருதுபவர்கள்  இவர்கள்.

எனக்கு என்ன தெரியும் பார் என்பது ஒரு அணுகுமுறை. இந்த விஷயத்தில் என் நிலை என்ன என்பது  இன்னொரு அணுகுமுறை.ஜெயமோகன் விவாதங்களை கவனித்து வருபவர்கள் அவரது பாணி என்ன என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். நீங்களும், சதுக்க பூதமும் அவரிடம் அடிப்படையான விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். விரைவில் நீங்களே அவரது அணுகுமுறை பற்றி அனுபவ பூர்வமாக அறிந்து கொள்வீர்கள்.

 

அவரது விவாதங்களில் வெள்ளமென சுழித்தோடும் வசீகர நடையில் உள்ள வார்த்தைகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் சாரமாக என்ன மிஞ்சுகிறது என்று ஒரு முறை முயன்று பாருங்கள்.

ஜெயமோகனிடம் நான் கேள்வி எழுப்பக் காரணமாக அமைந்தது அவர் பயன்படுத்திய தமிழ்க் கலாசாரம் என்ற சொல்லாடல். என்னுடைய கேள்வி எளிமையானது: அவ்ருடைய பார்வையில் தமிழ்க் கலாசாரம் என்றால் என்ன? கலாசாரம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிற ஜெயமோகனால், இன்று வரை இதைத் தெளிவாக வரையறுக்க முடியவில்லை. இத்தனைக்கும் பணி ஆற்றுவதற்காக அவர் தெரிவு செய்து கொண்டிருக்கிற துறை அது.

பிரான்சிலேயே பின் நவீனத்துவம் 35 ஆண்டுகளுகு முன் மரித்துவிட்டது. தமிழ் எழுத்துலகில் ‘வித்தியாசமாக’ ஏதாவது செய்ய விரும்பிய சிலர் குழிப் பிள்ளையை எடுத்து வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

பின் நவீனத்துவம் பற்றிய விவாதங்களில் நோம் சாம்ஸ்கியின் கருத்துக்களையும் நீங்கள் கருதிப் பார்க்க வேண்டும். ·பூகோவின் கருத்துக்களை மதிப்பிட அவை உதவும். ( அவை  இணைய தளத்திலும் வாசிக்கக் கிடைக்கும். அவற்றைப் பெறுவதில் உங்களுக்கு சிரமம்  இருப்பின் தெரிவியுங்கள்) இடதுசாரி சிந்தனையாளர்கள இன்ன்றையப் போக்குக் குறித்த விவாதமும்  இன்று தேவைப்படுகிறது.சாம்ஸ்கி முன்பொருமுறை மேற்குலகின்  இடதுசாரி சிந்தனையாளர்கள் குறித்தும், அங்கு இயங்கி வந்த வேறு சில சக்திகள் குறித்தும் எழுதியதின் நறுக்கொன்றை கீழே தந்துள்ளேன். எனக்கென்னவோ இது இன்றைய இந்திய அரசியல், மற்றும் தமிழ்  இலக்கிய சூழலுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. உங்களுக்கு?

அன்புடன்,

மாலன்

“There has been a striking change in the behavior of the intellectual class in recent years. The left intellectuals who 60 years ago would have been teaching in working class schools, writing books like “mathematics for the millions” (which made mathematics intelligible to millions of people), participating in and speaking for popular organizations, etc., are now largely disengaged from such activities, and although quick to tell us that they are far more radical than thou, are not to be found, it seems, when there is such an obvious and growing need and even explicit request for the work they could do out there in the world of people with live problems and concerns. That’s not a small problem. This country, right now, is in a very strange and ominous state. People are frightened, angry, disillusioned, skeptical, confused. It’s also fertile ground for demagogues and fanatics, who can (and in fact already do) rally substantial popular support with messages that are not unfamiliar from their predecessors in somewhat similar circumstances. We know where it has led in the past; it could again.”  – Noam Chomsky on Postmodernism –

maalan@eth.net
malan@sunnt.com