1. சங்கில் சதிராடும் சாகரம்
இங்கிதமாய் இதயம் மேவி
அங்கீகரிக்கும் ஆனந்த வெளிப்பாடு
பொங்கிப் புரளும் துன்பத்தால்
பங்கமுறும் காய வெளிப்பாடு
தங்காது முகிழ்த்தலே கவிதை!
பொங்குதலே கவிதை வீச்சு!
எங்கும் விசிறும் விதை
சங்கில் சதிராடும் சாகரம்.
2. கடல் வண்ணம்
பார்! கடல் சிறகெடுத்து
ஊர்கோலம் போகிறது. நீராவியாகி
நீர் வானம் ஏகுகிறது.
வேர் அடிக் கடற்கன்னிகள்
வேட்கையுடன் அலை நுனியிலமர்ந்து
வேடிக்;கை பார்க்கின்றனர் பின்
வாடிக்கையாக பாறையில் அமர்வார்
மொட்டை மாடி அவர்களுக்கு
கார் குடையாகிப் பன்னீர் தெளிக்க
வேரடிக்கு பவளப்படுகைக்கு மீளுவர்
kovaikkavi@gmail.com