பிரான்சில் இடது சாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலம் .( செய்தியும் புகைப்படங்களும்).

பிரான்சில் இடது சாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலம் .( செய்தியும் புகைப்படங்களும்).வல்லரசுகள் கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும், தொழிலாளர்களின் உழைப்பையும், வாழ்வையும் சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியான இன்றைய கால கட்டத்தில், பிரான்சில் பாரளுமன்ற அமைப்புசாரா தீவிர இடதுசாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலமும் -ஒன்றுகூடலும் பாரிசில் மிகச் சிறப்பாக  (01.05.2013) நடைபெற்றது. சர்வதேச ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அனைத்து ஒடுக்குமுறைகளை கண்டித்தும், கோசங்களும்- கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் பிரான்சில் வாழும் பல்லின மக்களினது  இடதுசாரி செயற்பாட்டு இயக்கமான சர்வதேச சமூகப் பாதுகாப்பு  அமைப்பும்  (comité de Défence  Social  International)  கலந்துகொண்டது.  இவ் ஊர்வலத்தில் இலங்கை அரசின் சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், இன அழிப்பு யுத்ததிற்கு எதிராகவும் கண்டனங்களும் கோசங்களும் எழுப்பப்பட்டன. இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் சார்பிலும்    பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும்.

பிரான்சில் இடது சாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலம் .( செய்தியும் புகைப்படங்களும்).

*அனைத்து தேசிய இனங்களும் சமநிலை அரசியல் சமத்துவம் கொண்ட அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.

*இனஅழிப்பு தொடர்பாய் சர்வதேச சுயாதீன நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.

இனஅழிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்கும் நஷ்டஈடு மற்றும் *நிவாரணம் வழக்கப்படவேண்டும்

*பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தவேண்டும்.

*குடாநாட்டில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தை வெளியேற்றவேண்டும்.

*அதி உயர் பாதுகாப்பு வளையங்களை உடனடியாக அகற்றவேண்டும்.

*மக்களை அவர்தம் சொந்த இடங்களில் குடியேறுவதை அனுமதிக்கவேண்டும்.

பிரான்சில் இடது சாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலம் .( செய்தியும் புகைப்படங்களும்).அத்தோடு ‘’அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக… – ஒடுக்கப்படுவோரின் குரலாக…’’ என்னும் தலைப்பில் பிரெஞ், தமிழ் ஆகிய இரு மொழிகளில் பிரசுரமும் வெளியிடப்பட்டது.  மேலும்,  இம் முறை இலங்கை அரசினால் பிரான்சில் உருவாக்கப்பட்ட இலங்கை அரச ஆதரவுக் குழுக்களின் நபர்கள் உ ள்ளடங்கிய மேதின ஊர்வலமும்  முதல்முறையாக  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு, வல்லரசுகளைப் போன்று  கண்டங்கள் தாண்டி தனக்கான ஆதரவுக் குழுக்களையும், அதிகாரத்தையும் நிலைநாட்டிவருகின்றது என்பதற்கு இந்த அரச ஆதரவுக் குழுக்களின்  இந்த மேதின ஊர்வலமும்,  செயல்பாடுகளும், பிரச்சாரங்களும் சான்றுபகர்கின்றன.

ashokyogan@hotmail.com