அறிவியல் தோன்றாக் காலத்துக்குமுன்பே தமிழ் இலக்கியங்களில் அறிவியல் நிறையப் பேசப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். அறிவியலாரும் இலக்கியலாரும் தனி வழிப் பயணிப்பதை நாம் அறிவோம். அவர்கள் தங்கள் தொழில் தொடர்பாக ஒருவரையொருவர் சந்திப்பதுமில்லை. சந்தித்தாலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதுமில்லை. அறிவியலில் இலக்கியப் படர்வு குறைவு. ஆனால் இலக்கியத்தில் அறிவியற் படர்வு நிறைய உள்ளது. இலக்கியம் படிப்போர் இலக்கியக் கண்ணோடு மட்டும்தான் அணுகுவதால் அதிலுள்ள அறிவியல் அவர்களுக்குத் தென்படுவதில்லை. அவர்களும் அறிவியற் கண்ணோடு பார்க்கப் பழக வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு இலக்கியமும் அறிவியலும் புரியும். [மின்னஞ்சல் முகவரி: wijey@talktalk.net]…. முழுவதும் வாசிக்க