ஆற்றுப்படை இலக்கியம் வளர்வதற்கு காரணம் அக்காலச் சூழலே காரணமாகும். ஏனெனில் சங்க காலம் மன்னரின் ஆட்சிகாலம் என்பதால் அவை சமூக உணர்வு நோக்கோடு செயல்பட்டது. மன்னனுக்காக சமுதாயமும் வாழ்ந்த காலம் சங்ககாலம். மன்னர்கள் வீரம் கொடை என்ற இரண்டையும் உயிராக மதித்து வாழ்ந்துள்ளார்கள். ஆகையால் கலைஞர்கள் மன்னரிடம் செல்லும்போது அக்கலைஞர்களை மன்னாகள்; ஆதரித்துப் போற்றியுள்ளனர். இருவரிடையே இணக்கமான நட்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் போற்றி வாழ்ந்தமையால் ஆற்றுப்படை இலக்கியம் தோன்றலாயிற்று. சங்ககால ஆற்றுப்படைக்கு பின்னர் எழுந்தது பிற்கால ஆற்றுப்படை. கால மாற்றத்திற்கேற்ப அறிவியலின் பரிமாண வளர்ச்சி போன்றுää இலக்கியத்திலும் காலத்திற்கேற்றவாறு பாடுபொருளில், மாற்றத்தினையும் வளர்ச்சியினையும் பார்க்க முடிகிறது. இவ்வகையில் வளர்ந்தது தான் பிற்கால ஆற்றுப்படை….மேலும் படிக்க