[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை நடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
மல்லப்பாடி தருமபுரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகே சிறுகுன்றுகளின் அடிவாரத்தில் இடம்கொண்டுள்ள ஒரு சிறிய சிற்றூர். இந்நிலப் பரப்பின் அகத்தேயும், சுற்றியும் புதிய கற்காலப் பண்பாட்டுச் சான்றெச்சங்கள் உள்ளன. இந்நிலப் பரப்பின் புதிய கற்கால மக்கள் குன்றுகளின் அடிவாரத்திலும் சமவெளிகளிலும் வாழ்ந்திருந்தனர். இத்தளத்தில் பாறை வண்ணஓவியங்களும் கூட இடம்கொண்டுள்ளன. இங்கத்துப் பாறைகளில் இயற்கையான மலைமுழைஞ்சுகள் (cavern) உள்ளன, அவற்றின் மேற் கூரைகளில் வண்ணோவியங்கள் இடம்கொண்டுள்ளன. இக் காட்சிப்படங்கள் வேட்டை முதலாயவற்றில் இருந்து வண்ணிக்கின்றன. அவை கரிக்கட்டை, சுண்ணாம்பு, செங்காவி போன்ற இயற்கை வண்ணங்களைக் கொண்டு வெறுஙகையால் வரையப்பட்டு உள்ளன.
தொல்லியல் அகழாய்வு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் 1981 . 82 ஆம் ஆண்டுகளில் முனைவர் சா. குருமூர்த்தி உள்ளிட்ட தொல்லியலாளர் அடங்கிய ஒரு குழுவால் இக்குன்றுகளின் அடிவாரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இங்கு சில அகழிகள் தோண்டப்பட்டன, அவற்றின் ஆழம் 8 அடிக்கு மிகையானது அல்ல. இது புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தளம் என்றாலும் இந்த அகழாய்வுகள் புதிய கற்கால வனைதொழிலின் தனிக்கூறான சாம்பல்நிற மற்றும் சிவப்புநிற மட்கலங்களுடன் சேர்த்து ஒரு சில உடைந்த புதிய கற்காலக் கல்கோடாரிகள் முதலாயவற்றைத் தவிர பெரிதாக வேறு எந்த பொருள்களையும் ஈட்டித் தரவில்லை. இப்பாறை வண்ணஓவியங்கள் தமிழ்நாட்டு மூலவரலாற்று வண்ணோவியங்களை உள்ளடக்கியவை என்ற பொருளில் மிக முகாமையானவை.
இத்தளத்தின் காலக் கணக்கீடு சற்றொப்ப 1ஆம் ஆயிரஆண்டுகளின் (millenium) தொடக்கம் முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையானது எனறு மேல் அடுக்குகளில் கண்டெடுக்கப்பட்ட கருப்பு – சிவப்புநிற பானைஓடுகள் சான்றுரைப்பதையொட்டிப் பொருத்தலாம். அதைமுன்னிட்டு, கருப்பு – சிவப்புநிற சில்லுகளே இத்தளத்தினுடைய மிகத் தொடக்க காலத்தின் எஞ்சிவாழும் சான்றுகள்.
சேசாத்திரி sseshadri69@gmail.com