– பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் ‘மனக்கண்’, அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். ‘பதிவுகள்’ இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். –

வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’ நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க:
1983 இலங்கை இனக்கலவரத்தைத்தொடர்ந்து , பிறந்த மண்ணை விட்டுப் புகலிடம் நாடிக் கனடா புறப்பட்ட வேளை, வழியில் பாஸ்டன் நகரிலிருந்து கனடாவின் மான்ரியால் நகருக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய ‘டெல்டா ஏர் லைன்ஸ்’ நிறுவனம் எம்மை ஏற்றிச் செல்ல மறுத்து விடவே, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எம்மை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் மும்முரமாகவிருந்தார்கள். அதிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டோம். அக்காலகட்ட அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே எனது நாவலான ‘அமெரிக்கா’. அளவில் சிறியதானாலும் இந்நாவல் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முதலில் புகலிடம் நாடிச்சென்ற இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் நாவல் இதுவேயென்பேன். இந்நாவல் கனடாவில் வெளியான ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக மற்றும் கனடா மங்கை பதிப்பக வெளியீடாக மேலும் சில சிறுகதைகளையும் உள்ளடக்கி வெளியானது. இதன் தொடர்ச்சியாக இந்நாவலின் நாயகன் இளங்கோவின் நியூயோர்க் மாநகரத்து அனுபவங்கள் ‘குடிவரவாளன்’ என்னும் நாவலாகத் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியானது.
‘அமெரிக்கா’ நாவல் தனி நூலாக வெளிவரவேண்டுமென்ற என் கனவினை நனவாக்கிய எழுத்தாளரும் , ‘மகுடம்’ பதிப்பக உரிமையாளருமான மைக்கல் கொலின் அவர்களுக்கும், அட்டைப்படத்தினைச் சிறப்பாக வடிவமைத்துத் தந்த கட்டடக்கலைஞர் சிவசாமி குணசிங்கம் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
‘அமெரிக்கா’ மின்னூலினை $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: