விமர்சனம் என்றால் என்ன என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன். நான் ஒரு வாசகன். எனக்கு என்கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தவித சங்கோசமும் இருந்ததில்லை.. எனக்கு வேண்டியவர், என்னோடு ஒன்றாகப் படித்தவர்.. எனது கொள்கையை ஏற்று கொண்டவர்…என்பதற்காக ஒரு படைப்பாளியை ஏற்றி போற்றவோ….விரோதமானவார் உடன்பாடற்றவர் என்பதற்காக அவரது நல்ல படைப்புகளை நிராகரிக்கவோ நான் ஒருப்படேன். விமர்சனம் ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது என்பதிலும் நான்காட்டமான கருத்துள்ளவன்..
கே.டானியல்…. ஒரு மா.ஓ வாதி. அவர் சாதி அமைப்புக்கு எதிரானவர் அதற்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். ஆனால் தலித்திய சிந்தனையாளர் அல்ல. சாதிச்சங்கங்கள் கூடாது என்கிற சிந்தனையாளர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கச் செயற்பாட்டாளர். இதனை சிலர் மறைக்கப் பார்ப்பது உண்மையில் கண்டிக்கப்படவேண்டியது.
1975 ஆக இருக்காலம் ..அவரது “போராளிகள் காத்திருக்கின்றனர்” நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்திருந்தது. அதற்கான வெளியீட்டு நிகழ்வு. யாழ்/ றிம்மர் மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. தலைமை பேரா. சி தில்லைநாதன் . பேரா.கைலாசபதி சில்லையூர், பாசையூர் தேவதாசன், மற்றும் சிலர் பெயர் நினைவில் இல்லை அவர்களோடு நானும் ஒரு பேச்சாளன்.நிகழ்வுக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக கே டானியலோடு அவரது மோட்டர் சைக்கிளில் நானும் பல இடங்களுக்குச் சென்றேன். குரும்பசிட்டியில் கனகசெந்திநாதன் வீட்டுக்குச் சென்றது நினைவிருக்கிறது… “நாகம்மா இஞ்சை பாரப்பா உவன் டானியல் வந்திருக்கிறான் உவன் பொடியன் நந்தினியும் வந்திருக்கிறான் எதேனும் தின்னக்கொண்டுவா” என்று எம்மை உபசரித்ததும்..அவர் மனைவி வெட்டித்தந்த மாம்பழத்தை சுவைத்ததும் நினைவில் இருக்கிறது. உரும்பிராய், புன்னாலைகட்டுவன்.என்று பல இடங்களுக்கும் சென்று திரும்பினோம்.
வெளியீட்டு நிகழ்வு… மண்டபம் நிறைந்த கூட்டம்
.
உரைகள் எல்லாம் பாராட்டாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. எனது முறை. எடுத்த எடுப்பிலேயே நான் விடயத்துக்கு வந்தேன்.
“ முதலில் இந்த நாவலின் தலைப்பே பிழையானது. போராளிகள் எப்போதும் காத்திருக்கமாட்டார்கள். அவர்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள்….போரடிக் கொண்டிருப்பவர்கள் தான் போராளிகள்…போராடாது இருப்பவர்களை போராளிகள் என்று அழைப்பதில்லை. என்றேன்
அடுத்து …..
டானியல் யார் ..அவரது கொள்கை என்ன என்பது உங்களுக்குத் தெரியும் வீரகேசரி நிறுவனம் யாருடையது என்றும் உங்களுக்குத்தெரியும்….. அந்த நிறுவனம் டானியலின் நாவலை வெளியிடுகிற தென்றால் ஒன்று வீரகேசரி டானியல் பக்கம் மாறி இருக்கவேண்டும் அல்லது டானியல் வீரகேசரியின் பக்கம் மாறி இருக்கவேண்டும்.. இதில் யார் யார் பக்கம் மாறியுள்ளார்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்றேன். கூட்டம் நிசப்தமாக இருந்தது.
இது தான் எனது விமர்சன முறை. எங்களவர் என்பதற்காக ஏற்றிப்போற்றவோ….புளகாங்கிகிதமடைந்து .புல்லரிக்கவோ ட்டேன்….செ.கணேசலிங்கனின் பிற்காலப் படைப்புகள்.. பற்றிய எனது விமர்சனமும் இத்தகையதே 2000 ம் ஆண்டு தமிழகத்தில் “தமிழ்இனி” மாநாட்டில் நான்சமர்ப்பித்த “20ம்நூற்றாண்டில் ஈழத்துமார்க்சிய இலக்கியம்” எனும் கட்டுரையில் இதனை பகிரங்கமாக் குறிப்பிட்டுளேன்…. இதுதான் தோழமை விமர்சனம். என அங்கு என்னிடம் கேள்வி எழுப்பிய நக்சலையிட் தோழர்களிடமும் கூறினேன்.
டானியல் அவர்களுடனான எங்களது கொள்கை உடன்பாடு அவர் இறக்கும் வரை தொடர்ந்தது… அது இன்னும் ஆழமாகி இருக்கிறது.
சும்மா போங்கப்பா நீங்களும் உங்கள் ரசிகமணி விமர்சனமும்….உங்களை பற்றிய நல்ல அபிபிரயங்கள் மெல்ல மெல்ல மறைந்துபோகிகிறது.. .40 வருடங்களுக்கு முந்தய நிலைப்பாடே,,.. அதே.. விமர்சன பார்வையே எனக்கு இன்றும் உள்ளது… தகும் என்றால் கொள்ளும் .. தகாதெனில் விட்டுவிடும்
நான் மாற மாட்டேன். இது எனது!
உங்களுக்கு நான் இதனை திணிக்கமாட்டேன். !