மெல்பனில் சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சி

மெல்பனில் சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சி அவுஸ்திரேலியா  தமிழ்   இலக்கிய    கலைச்சங்கம்    கடந்த   சில மாதங்களாக  இலக்கியத்துறையில்   அனுபவப்பகிர்வு     நிகழ்ச்சிகளை  நடத்தி  வருகிறது. அதன்    தொடர்ச்சியாக    இந்நாட்டில்  குடியேறிய   ஏனைய  இனத்தவர்களின்   வாழ்வு     அனுபவம்   தொடர்பான சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியையும்   எதிர்வரும் 16-08-2014   திகதி   சங்கம்   நடத்தவிருக்கிறது.  அவுஸ்திரேலியா    ஒரு  குடியேற்ற நாடாகவும்     பல்தேசிய கலாசார நாடாகவும்    விளங்குகின்றமையினால்    ஏனைய   இனத்தவர்களின் வாழ்வனுபவங்களையும்     தெரிந்துகொள்ளும்வகையில்     இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நாட்டில்   வதியும்   தமிழ்ப்படைப்பாளிகள் –    கலைஞர்கள்   பிற இனத்தவர்களின்    வாழ்வு    அனுபவங்களை    நேரடி  உரையாடல்களின் மூலம்    தெரிந்துகொள்வதன்    ஊடாக    தமது   படைப்பு    இலக்கியம்     மற்றும்    கலைத்துறைகள்   தொடர்பான    சிந்தனைகளையும்    பார்வையையும்     மேலும்    விரிவுபடுத்திக்கொள்ள முடியும். முதற்கட்டமாக  இலங்கையர்    மற்றும்   தென் ஆசிய நாட்டைசேர்ந்த     பல்தேசிய    இனத்தவர்களும்   பங்கேற்கும்   வகையில் வடிவமைக்கப்படவுள்ள    இந்த    சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியில்  கலந்துகொள்ளவும்   பார்வையாளராகவும்    பங்கு   பற்றுவோராகவும்  கலந்து கொள்ளவும்    வருமாறு    அவுஸ்திரேலியா     தமிழ்   இலக்கிய   கலைச்சங்கம்  அனைவரையும்   அன்புடன்    அழைக்கின்றது. மேலும் இந்த நிகழ்வில்   சிறந்த  கதை  சொல்பவருக்கு   $ 50     வெள்ளி    பரிசும்   காத்திருக்கிறது.    

நிகழ்ச்சி  நடைபெறும்   இடம்:-
Stirling Theological College,
44-80 Jacksons Road,
Mulgrave, Vic- 3170

திகதி:    16-08-2014      சனிக்கிழமை —  காலம்:    மாலை 5 மணி

இந்நிகழ்ச்சி பற்றிய   மேலதிக   விபரங்களுக்கு  சங்கத்தின் நடப்பாண்டுக்கான  தலைவர்  டொக்டர் நடேசனை   பின்வரும்    தொலைபேசி     இலக்கங்களிலும்    அல்லது   பின்வரும்    மின்னஞ்சல்களிலும்   தொடர்புகொள்ளலாம்.  0411 60 67 67        atlas2001@live.com     uthayam@optusnet.com.au

letchumananm@gmail.com