லண்டனில் வெள்ளிவிழாக் கண்ட ‘கலாநிகேதம்’

லண்டனில் வெள்ளிவிழாக் கண்ட ‘கலாநிகேதம்’

 ‘கலையின் மதிப்பிற்குரியவர்களாகத்; திகழும்;; மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிப்பினையை இவ் வெள்ளிவிழாவினுடாக இன்றைய நவீன சூழ்நிலையிலும் ஸ்ரீமதி விநோதினி பரதன் முன்னிறுத்துவதை அவதானிக்க முடிகிறது. பாரம்பரியமாகப் போற்றப்படும் இவ் வாசகத்தை எமது இளம் கலைஞர்களிடையே போற்றுவது முன்மாதிரியான விடயம்; என சிறப்புவிருந்தினராக ஜேர்மனியிலிருந்து வருகை  தந்திருந்த இசைச்சுடரொளி, குறள் இசைச் செல்வர் ஸ்ரீ மா. யோகேஸ்வரன் அவர்கள் பாராட்டியிருந்தார்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் பெற்றோரான திரு. லிங்கநாதபிள்ளை – திருமதி மகாலக்சுமி லிங்கநாதபிள்ளை அவர்களால் 1980 களில் ஆரம்பித்த  ‘கலாநிகேதம்’ என்ற கலைக்கூடத்தை, 1990 களில் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து வந்த ஸ்ரீமதி விநோதினி பரதன் அவர்கள் அதனை முன்னெடுத்து தனது 25 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பது மிகப்பெரும் பாராட்டுக்குரியது என மேலும் அவர் கூறியிருந்தார்.லண்டனில் வெள்ளிவிழாக் கண்ட ‘கலாநிகேதம்’
   
வாய்ப்பாட்டு, வயலின், பரதநாட்டியம் போன்ற கலைகளில் ஆளுமை கொண்ட ஸ்ரீமதி விநோதினி பரதன் லண்டனில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இக்கலைகளினுடாக பிஞ்சுக் குழந்தைகளை வளர்த்தெடுத்து, சிறப்பாக இவ்வெள்ளிவிழாவில் வெளிக்கொணர்வது போற்றப்படவேண்டியது என அவர் மேலும் தெரிவித்தார்.
   
ஸ்ரீமதி விநோதினி பரதன் லண்டனில் மூன்று பரதநாட்டிய அரங்கேற்றங்களை மேற்கொண்டபோது அவ்வரங்கேற்றங்களில்  தான் வாய்ப்பாட்டினை வழங்கிச் சிறப்பித்திருந்ததாகவும், அந்நிகழ்வுகளின் ஒத்திகைகளின்போது கலைஞர்களிடம் அவர் காட்டும் கைங்கரியங்களையும், அவரது மென்னைமயான உள்ளத்தையும் பாராட்டியிருந்தார். அவருக்கு சகல விதத்திலும்; ஒத்தாசை வழங்கும் அவரது துணைவர் திரு பரதனின் பண்பையும் ஸ்ரீ யோகேஸ்வரன் வெகுவாகப் பாராட்டியிருந்தார்’
     
‘யாழ்ப்பாணத்தில் கண்ணன் அவர்களோடு இணைந்து ‘கானசாகரம்’ என்ற மெல்லிசை நிகழ்ச்சியை 1979 களில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தியிருந்தோம். அந்த நாட்களில் ஸ்ரீமதி விநோதினி மாணவியாகவிருந்து நிழ்ச்சியில் ஒத்தாசை  வழங்கியிருந்தார்.  விநோதினி மாத்திரமன்றி அவரது தாய் – தந்தை அனைவருமே இத்தகைய கலைகளை மதிக்கும் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் அன்றே அறிந்திருந்தேன். அன்றைய ஸ்ரீமதி விநோதினியின் அறிமுகம் இன்று இவ்வெள்ளிவிழாவில் கலந்து சிறப்பிக்க முடிகிறது என சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த ‘தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் நிறுவனர்’ க.பாலேந்திரா அவர்கள் தனது உரையில்; குறிப்பிட்டார்.
   
லண்டனில் வெள்ளிவிழாக் கண்ட ‘கலாநிகேதம்’

சினிமாக் கலைஞர்களை அழைத்தால் மட்டும் மக்கள்கூட்டம் அதிகம் சேருவார்கள்;. மற்றைய நிகழ்ச்சிகளுக்கு மக்களை வரவழைப்பதன்;;; கடினமான இன்றைய சூழலில்,  லண்டனில் உள்ள கலையார்வம் மிக்க ஆசிரியர்கள்;, மாணவர்களை அழைத்து மண்டபத்தை நிறைத்து, தனித்துவமாக தனது மாணவர்களின் நிகழ்ச்சிகளால் மட்டும் இவ்விழாவை நடாத்துவது என்பது அசுர சாதனை என்றும் மேலும் தெரிவித்தார்.
   
ஸ்ரீமதி விநோதினியின் அன்பு மகள் நாட்டியக்கலாஜோதி பார்கவி பரதனின் தயாரிப்பில் இடம்பெற்ற ‘சிந்திறிலா’ என்ற நாட்டிய நாடத்தைப் பாராட்டிய க.பாலேந்திரா அவர்கள்  கலைக் குடும்பமான இவர்கள் இம்முயற்சியைத் தொடர வேண்டுமென மேலும் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பாராட்டியிருந்தார்’

 navajothybaylon@hotmail.co.uk