வாசகர் கடிதங்கள் சில..

வாசகர் கடிதங்கள் சில.Anbu Sivaram <mythreanbu@gmail.com>
Sep 9 at 5:44 AM
அன்புடையீர் வணக்கம். பதிவுகள் இணைய இதழில் பல நண்பர்களின் படைப்புகள் வெளிவந்திருப்பதை, கேள்வியுற்று சமீபத்தில் நான் இவ்விதழில் இடம்பெற்றுள்ள பல விஷயங்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் நான் தேடி அலைந்துக்கொண்டிருக்கும் வீதி நாடகங்கள் குறித்த சில கட்டுரைகளும், பதிவுகளும் கிடைத்தன. மிக்க நன்றி. நான் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில், அமைந்துள்ள அனக்காவூர், விஸ்டம் மகளீர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறேன். எனது நண்பர் பூ.பெரியசாமி அவர்களின் கட்டுரையைப் படிக்க தேடியே நான் தங்கள் இணைய இதழுக்குள் வந்தவன். ஆனால் இப்பதிவில் இருக்கும் பல விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. பல நல்ல பயனுள்ள தகவல்களும் கிடைக்கப்பெற்றன.


sathya devi <bpsstree@gmail.com>
Sep 8 at 2:50 PM

வணக்கம். என் பெயர் சத்யா தேவி தமிழ் இலக்கியம் மீது பற்று உடையவள். உங்கள் பதிவுகள் குறித்த அறிமுகம் ஒரு தோழர் மூலம் கிடைத்தது அதை படித்து மகிழ்ந்தேன். நன்றி


Neelambigai Kanthappu <kanthappu.neelambigai@gmail.com>
ஐயா,  செல்வி.  நீலாம்பிகை கந்தப்பு ஆகிய நான் 66வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவேன் .தங்களுடைய ஞானம் இதழில் வந்த நேர்காணலை வாசித்தேன் .நான்

1.நவீன எண்கள் தமிழிலிருந்து பிறந்தவை
2 காலக் கணிப்பு தமிழரின் கொடை
3 இலங்கையின் பூர்விக குடிகள் தமிழர்

எனும் கருத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை எழுதியுள்ளேன் .முதலாவது கட்டுரையை மதிப்பிற்குரிய லெ .முருகபூபதி அவர்களால் நடத்தப்பட்ட[2011ல் ]சர்வதேச மகாநாட்டில் வாசித்தேன் .என் என்ப ஏனை எழுத்தென்ப எனும் புத்தகமாக நூலகம் இணையத்தில் உள்ளது .இதனை எனது சகோதரன் எண் தமிழ் எனும் தலைப்பில் 1996ம் ஆண்டு கனடாவில் வெளியிட்டுள்ளான் .கணிதம் வானியலில் அறிவும் ஆர்வமும் உள்ள தாங்கள் www .navakudil .com எனும் இணைய முகவரியில் கட்டுரைகளில் எனது முதலிரு கட்டுரைகளும் மாத்திரம் உள்ளதால் வாசியுங்கள். நன்றி
அன்புடன்,
க .நீலாம்பிகை

 


Navajothy Baylon <NavajothyBaylon@hotmail.co.uk>
Sep 6 at 4:06 AM

அன்புடன் சகோதரருக்கு வணக்கம்! ஞானத்தில் வெளிவந்திருந்த தங்கள் நேர்காணல் வாசித்தேன். உங்களது விடாமுயற்சியும், இலக்கியச் செயற்பாடுகளும் மிக்க மகிழ்ச்சியையும், முன்மாதிரியையும் எனக்கு உணர்த்தியது. கே.என் சுதாகர் அழகாகவே உங்களை வெளிப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுத்திருக்கிறார். வாழ்த்துக்கள்!

நன்றி
அன்புடன் சகோதரி

நவஜோதி


Mooventhan Ps <psmnthn757@gmail.com>
Aug 19 at 11:22 PM      

பேரன்புடையீர், வணக்கம். தாங்கள் நடாத்தும் இணைய இதழில் தமிழின் வளமைக்குத் துணையாய்த் திகழும் கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுகள் வௌயிட்டுத் தமிழ்ப்பணி ஆற்றுவதனை நன்றிப்பெருக்கோடு பாராட்டுகின்றேன். உலகத் தமிழர்களை இலக்கியத்தால் ஒன்றிணைக்கும் தங்களின் முயற்சிகள் மேன்மேலும் செழிக்க வாழ்த்துகிறேன்.