வாசகர் கடிதங்கள் சில..

வாசகர் கடிதங்கள்

1. Puthiyavan Siva <puthiyavan1986@gmail.com>

Oct. 28 at 1:14 p.m.

வணக்கம் சான்றீர், எனது ஆய்வு மற்றும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு பதிவுகள் இணைய இதழ் அங்கீகாரம் வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன். தங்கள் அங்கீகாரத்தால் கிட்டும் ஊக்கத்தைப் பயன்படுத்தி இலக்கியத்தின் சமூகவிஞ்ஞான இலட்சியங்களுக்கு எனது பங்களிப்பை செலுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி சான்றீர்.

என்றும் அறிவன்புடன்
புதியவன் 


2. Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
Oct. 29 at 6:02 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு குழந்தை சுர்ஜித்துக்காக நீங்கள் வரைந்த கண்ணீர் ஓவியம் படித்து உருகிப்போனேன்.  பெற்றோரின் கவன ஈனம் அரசினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருக்கும் மெத்தனங்களும்தான் இத்தகைய இழப்புகளுக்கு அடிப்படை!
ஆழ்துணை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து – அல்லது அவற்றை நிரந்தரமாக மூடியாவது உயிரிழப்புகளை தடுக்கமுடியும். மேலே இருக்கும் இணைப்பையும் பார்க்கவும்.  அறம் என்ற திரைப்படத்தையும் நீங்கள்  பார்த்திருக்கலாம். நன்றி.

அன்புடன்
முருகபூபதி


3. Rajalingam Velauthar <vela.rajalingam@gmail.com>

Oct. 29 at 5:17 p.m.

ஈரம் வற்;றிவிட்ட நிலையில் இதயத்தைத் தொடும் குரல். நெஞ்சைத் தொடுகிறது.

– தீவகம் வே.இராசலிங்கம்


4.

1. Sunil Joghee <suniljogTo:ngiri2704@rogers.com
Oct. 23 at 1:29 p.m.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். முனைவர் கோ. சுனில்ஜோகி ஆகிய நான் கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். நீலகிரி மலைவாழ் மக்களான படகர் இன மக்களை பற்றியும் தோடர், குறும்பர் போன்ற இதர பழங்குடி மக்களைப் பற்றியும் 13 ஆண்டுகள் ஆய்வு அனுபம் பெற்றுள்ளேன். இது சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். மேலும் கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புத் திறன்களையும் நான் பெற்றுள்ளதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். என் ஆய்வு சார்ந்த தகவல்களை, என் படைப்புகளை உலகம் முழுவதற்கும் பகிர விழைகிறேன். நன்றி….

[ நன்றி. உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். ‘பதிவுகள்’ அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆவலாகவுள்ளது.  எழுத்தாளர் பிலோ இருதயநாத் பல வருடங்களுக்கு  முன்னர் இந்தியப் பழங்குடி  மக்களைப்பற்றி எழுதிய சஞ்சிகைக் கட்டுரைகள்  நினைவுக்கு வருகின்றன. மானுடவியற் துறையில் இவை போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. உங்கள் பணி பாராட்டுக்குரியது.  – ஆசிரியர், பதிவுகள்.]


5. Mani Kannan <kannan.sarvaganan@gmail.com>
Sep. 3 at 11:29 a.m.

சான்றீர் வணக்கம்,  தங்களது ‘பதிவுகள்’ இணைய இதழ் தற்காலத்தின் பரிணாமத்திற்கு ஏற்றாற் போல் இயங்கி வரும் முறைமை மகிழ்ச்சியைத் தருகிறது.

நன்றி….

முனைவர் இரா. மணிக்கண்ணன்,
உதவிப்பேராசிரியர்,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி,
விழுப்புரம்.
அலைபேசி; 9629488271
மின்னஞ்சல்; kannan.sarvaganan@gmail.com

[ உங்கள் கனிவான கருத்துகளுக்கு நன்றி. – ஆசிரியர், பதிவுகள் ]


6. Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com>
Aug. 1 at 10:03 p.m.

அன்பின் கிரிதரன்,  வணக்கம்.

தங்களின் ‘சுமணதாஸ்’ பாஸ் பல விடயங்களை எடுத்துச் சொல்லும் குறுநாவலாக இருக்கின்றது. இயற்கை சார்ந்த மரம், குளம், மிருகம், பறவை என்று அந்த மண்ணில் வாழ்ந்தவர்களோடு இணைந்த அத்தனையும் பாத்திரங்களாகி இருக்கின்றன.

கதையில் வருவது போல, அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்குவது அனேகமன சிறுவர்களின் பழக்கமாக அக்காலத்தில் இருந்தது. நானும் இப்படித்தான் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு இருட்டியதும் தென்னிந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி பறக்கும் மாம்பழ ஒளவால்களை நிலவு வெளிச்சத்தில் எண்ணியிருக்கின்றேன். இலுப்பம்பழக் காலத்தில்அதிகமாக பறந்து வரும் இவை காலையில் திரும்பிச் சென்று விடுமாம்.

குறுநாவல் மூலம் பல விடயங்களைத் தெரிய வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
குரு அரவிந்தன்.

[ நன்றி குரு அரவிந்தன் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு. – ஆசிரியர், பதிவுகள்]


7. Rajalingam Velauthar <vela.rajalingam@gmail.com>

Aug. 3 at 9:04 p.m.

சுமணதாஸ் பாஸ் என்ற குறுநாவல் தன்னில் பெறுமானம்  கொண்டது உங்கள் எழுத்து. பெருமை கொள்கின்றேன். முழுமையாக வாசிக்கத் தூண்டிய உங்கள் எழுத்து தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் தீவகம் வே.இராசலிங்கம்

[ நன்றி உங்கள் கருத்துகளுக்கு. – ஆசிரியர், பதிவுகள்]