விளம்பர உத்திகள்!

விளம்பர உத்திகள்!1.0. ‘உத்தி’ என்பது இல்லையென்றால், வாழ்க்கையே இல்லை எனுமளவிற்கு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது. அந்த வகையில், விளம்பரம் என்பது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் வணிக உத்திகளில் ஒன்றாகும்.

1.1. உத்தி  விளக்கம்:
 உத்தி என்பதற்கு அகராதிகளும், அறிஞர்களும் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றனர். உத்தி என்வபது கலை ஆக்க முறையாகும். ஒன்றைச் சொல்ல, ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல செயற்கையாகக் கலை நுணுக்கத்துடன் விளம்பரங்களில் அமைக்கும் முறையே உத்தியாகும்.  ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பம், விரைவூக்கம், முனைப்புப் போன்றவற்றை ஏற்படுத்த கவர்ச்சியான அம்சங்களை விளம்பரங்களில் புகுத்துவதே உத்தி எனப்படுகின்றது.  தொல்காப்பியரும், நன்னூலாரும் பல்வேறு உத்திகளைக் கூறுகின்றனர்.

1.2. விளம்பர உத்திகள் 
 விளம்பர உத்திகளை, காட்சிப் பயன்பாட்டு உத்திகள், மொழிப்பயன்பாட்டு உத்திகள், பிற உத்திகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.2.1 காட்சிப் பயன்பாட்டு உத்திகள்:
 விளம்பரக் காட்சி, விளம்பரம் அமைந்திருக்கும முறை போன்றவற்றைக் கொண்டு காட்சிப் பயன்பாட்டு உத்திகளைப் பட உத்திகள், பக்க அமைப்பு உத்திகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1.2.1.1. பட உத்திகள்:
 ஓராயிரம் வார்த்தைகள் சொல்ல வருவதை ஒரு படம் உணர்த்திவிடும.; சொற்களும் தொடர்களும் நினைவில் நிற்காமல் போகலாம். படங்கள் அடிமனத்தில் பதிந்துவிடும். அதனால் படங்களை உத்திகளாகப் பயன்படுத்துகின்றனர். படங்களைக் கறுப்புரூவெள்ளைப்படங்கள், வண்ணப்படங்கள், கவர்ச்சிப் படங்கள், பிரபலங்களின் படங்;கள், கருத்துப் படங்கள் என்று பல்வேறு வகையாகப் பிரிக்கலாம்.

1.2.1.2. பக்க அமைப்பு உத்திகள்:
 இதழ்களில் விளம்பரங்கள் இடம்பெறும் பக்க அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கின்றது. விளம்பரங்களை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியிருப்பதே பக்க அமைப்பு உத்திகள் ஆகும். ஏறு வரிசையில், இறங்கு வரிசையில், செங்குத்து மையத்தில், செய்திகளுக்கு நடுவில், செய்திகளுக்கு  இடையில் என விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

1.2.2. மொழிப்பயன்பாட்டு உத்திகள்:
 விளம்பரங்களில் மொழியைப் பல்வேறு நிலைகளில் கையாளும்போது மக்களை எளிதில் கவருகின்றன. இதற்காக, எழுத்து, இலக்கியத் தொடர், இலக்கண நூற்பா, உவமை, உருவகம், அணிகள், தொடைநயங்கள், தொன்மம், பழமொழி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவை விளம்பரங்களில் கவர்ச்சியான தன்மையையும் அழகையும் கொடுக்கின்றன.  எழுத்தின் அளவு, அழுத்தம் , வடிவம் போன்றவை எழுத்து உத்திகளாகும்.

1.2.3. பிற உத்திகள்:
 உளவியல் தன்மையாலும், அமைப்பு நிலையாலும் ஆர்வநிலைத்தூண்டல் உத்தி, செய்திவடிவ உத்தி, வினா-விடை உத்தி, கடித வடிவ உத்தி,  கற்பனை வடிவ உத்தி என்று பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.3. முடிவுரை:
 விளம்பரங்கள் இதழின் உள்ளடக்கப் பகுதியில் ஒன்றாகி விட்டது. அதனால் விளம்பரங்கள் மக்களைக் கவர விளம்பரதாரர்கள் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர்.