முற்றுப் பெறாத உரையாடல்கள் – 04: முற்போக்கு தேசியத்தை முன்வைத்து: மக்கள் கலை பண்பாட்டு களம் தோழர்களுடன் ஓர் உரையாடல்!

கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

மக்கள் கலை பண்பாட்டுக் களம்  அமைப்பானது மிக அண்மையில் (ஒரு சில வருடங்களுக்கு முன்பே) உருவாக்கம் பெற்ற இடது சாரி சார்பு நிலை கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பாகும். மக்களின் சமகால பிரச்சனைகளை,  சமூக வாழ்வியலை அவர்களின் வாழ்வியலினூடக, அவர்களின் வாழ்க்கையின் மொழியினூடாக, கலை, இலக்கிய வடிவங்களாக வெளிக்கொண்டுவருவதும் அதையே அவர்களது போராட்ட ஆயுதமாக்குவதும் தான் மக்கள் கலை பண்பாட்டு களத்தின் நோக்கமாகும்.

அவர்கள் கடந்த காலங்களில் நடாத்திய நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற அமைப்பினர்களைப் போல் அல்லாமல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குறித்த நேரத்தில் நடாத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணத்தில் நானும் குறித்த நேரத்திற்கு முன்பே சமூகமளித்திருந்தேன். ஆனால் இந்த தடவை அவர்களது நிகழ்வும் ஒரு கொஞ்ச நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது என்பதினையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். 

ஒரு நிமிடநேர மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய அந்நிகழ்வானது நேரிடையாகவே தோழர் சி.கா.செந்தில்வேல் இன் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ நூல் அறிமுகத்திற்குள் நுழைந்தது.

நிகழ்வினை தோழர் வேலு அவர்கள் நெறிப்படுத்தினார். முதலில் புதியதிசைகள் ஒருங்கிணைப்பாளர் மாசில் பாலன் அவர்கள் உரையாற்றினார். இது போன்ற வரலாற்று ஆவணங்கள் வெளிவரவேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி வரவேற்று பேசிய அவர் அதற்குமப்பால் இந்நூல் குறித்தும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறுவிதமான காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஈழ விடுதலைப் போரை முற்று முழுதாக நிராகரிக்கும் அவர்கள் அந்த முப்பது வருட காலத்தில் வெறும் அறிக்கைகள் விட்டதற்கும் அப்பால் செய்த நடவடிக்கைகள் என்ன என்றும், முற்போக்கு தேசியம் குறித்தும், அப்படி ஒரு தேசியம் உருவானால் அதனுடன் இணைந்து பயணிப்பதாகவும் இப்போது குறிப்பிடும் இவர்கள் கடந்த காலங்களில் ஒரு முற்போக்கு தேசியத்தின் உருவாக்கத்திற்கு என்ன நடவைக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். 

அடுத்து புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர் நா.பகீரதன் உரையாற்றினார். தோழர் பாலனது உரைக்கு பதிலாகவே அவரது உரை அமைந்திருந்தது. அவர் தனதுரையில் மாபெரும் ஆயுதம் தாங்கிய அமைப்புக்களே அழித்தொழிக்கப்பட்டும் இல்லதொழிக்கப்பட்டும் அமைதி காத்த சூழலில் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி மௌனம் காத்ததில் எந்தவித தவறும் இல்லை என்ற விடயத்தை வலியுறித்துக் கூறினார். இதற்குமப்பால் அவர் இந்நூல் குறித்தோ அல்லது அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்தோ எதுவும் பேசவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.அடுத்து திரு.மு.நித்தியானந்தன் அவர்கள் உரையாற்றினார். நூல் அறிமுக விழாக்களில் நூல்களிற்குள் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் பல்வேறு விடயதானங்களை அள்ளி வழங்கும் அவர் அன்றும் பல்வேறு விதமான வரலாற்றுத் தகவல்களுடன் நூல் பற்றிய ஒரு காத்திரமான உரையொன்றினை ஆற்றினார். நூலில் இடம் பெற்றிருந்த பல்வேறு விதமான வரலாற்றுத் தவறுகளையும் வேறு பிழைகளையும் சுட்டிக் காட்டிய அவர் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற நூல்களின் வருகை மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

அடுத்து ஊடகவியலாளரும் ‘ஒரு பேப்பர்’ பத்திரிகையின் ஆசிரியருமான கோபி ரத்னம் உரையாற்றினார். ஒரு இடதுசாரி கட்சியினால் வெளியிடப்பட்ட, ஈழ விடுதைலப் போரை முற்று முழுதாக நிராகரிக்கும் ஒரு நூலிற்கு ஒரு தமிழ்தேசியவாதியினதும் புலிகளினது போராட்டத்தை எந்தவித நிபந்தனைகளுமின்றி ஆதரிக்கும் ஒருவரினாலும் வைக்கப்படும் கருத்தினை கேட்க அநேகமானோர் ஆவலாயிருந்தது தெரிந்தது. ஆயினும் அவர் போரிற்கு பின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வெளிவந்த மற்றைய நூல்களோடு ஒப்பிடுகையில் இந்நூலானது இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கிலன்றி ஒரு மனித நேயக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். 

இடைவேளையின் பின்னர் ஓவியர் கிருஷ்ணராஜாவும் சாந்தனும் மகாகவியின் ‘தேரும் திங்களும்’ கவிதையினை கவிதை ஆற்றுகையாக மிக அழகாகவும் அருமையாகவும் நிகழ்த்திக் காட்டினார்கள். 

இறுதியாக நிகழ்விற்கு வருகை தந்தோர் அனைவரும் கலந்து கொள்ளும் முகமாக சி.கா. செந்தில்வேலின் நூல் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு உரையாற்றியவர்கள், கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் அநேகமானோர் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது.

• போரிற்கு பிந்திய சூழலில் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பல்வேறு நூல்கள் வெளிவந்திருக்கின்ற இன்றைய சூழலில் இந்நூலானது ஈழவிடுதலைப் போராட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்துள்ள போதிலும் ஒரு இடதுசாரியக் கண்ணோட்டத்தில் மிகவும் காத்திரமாக எழுதப்படுள்ளது.

• இன்று முற்போக்கு தேசியவாதம் குறித்து பேசமுற்படுகின்ற இவ் இடதுசாரிகள் கடந்த 3,4 தசாப்த காலமாக அதற்குரிய எத்தகய முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை. 

• இனிமேலும் செய்யப்படவேண்டிய சரியான வேலைத்திட்டம் என்ன என்பது குறித்த தெளிவுகளோ அல்லது புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் தற்போதைய வேலைத்திட்டம்  குறித்த தகவல்களோ இந்நூலில் இல்லை. 

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவும் வேறு பல சிக்கல்கள் காரணாமாகவும் தோழர் சி.கா.செந்தில்வேலுடன் ஆன ஸ்கைப் உரையாடலும் பறையிசை, பாடல்கள் என்பனவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. 

நிகழ்விற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் ஏமாற்றத்தையே அளித்தது. இது போன்ற நிகழ்வுகளிற்கு வழமையாக வருகின்ற பல பழகிய முகங்களை என்னால் அங்கு காணமுடியவில்லை. இது போன்ற புரட்சிகர, அரசியல் செயற்பாடுள்ள நிகழ்வுகளை எதிர் வரும் காலங்களில் எமது சமூகத்தின் மேட்டுக்குடிகள் வாழ்கின்ற நியூ மோல்டன், கிங்ஸ்ரன், ஹரோ போன்ற பகுதிகளைத் தவிர்த்து, எமது தமிழ் சமூகத்தின் வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாழ் நிலையைக் கொண்டுள்ள மக்கள் செறிந்து வாழும் ஈஸ்ட்ஹாம் பகுதியில் வைப்பதே சாலச்சிறந்தது என்பது எனது எண்ணமும் கருத்துமாகும். 

இந்நிகழ்வும் இங்கு அறிமுகம் செய்யப்பட்ட நூலும் ‘இங்கிருந்து எங்கு?’ என்று தடுமாறிக் கொண்டிருக்கும் எமது இன மக்களுக்கு எதோ ஒரு புள்ளியில் எதோ ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக எதிர்காலத்தில் அமையும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது.

(உரையாடல் தொடரும்

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள்:


கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

vasan456@hotmail.com